home Exclusive உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

தமிழ் மொழியின் நவீன இலக்கிய தளத்தில் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

எதிர்வரும் இளம் தலைமுறை இலக்கிய வாசகர்களுக்கு வழிகாட்டும் அறிமுகமாகவும்,  இலக்கிய ஆளுமைகள் கவனப்படுத்தும்  ஆவணமாகவும் இந்தப்பகுதியை கவனம் கொள்ளலாம்.

ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்ட தீபச்செல்வன் ஈழப்போராட்டத்தில் வலிமை  மிகுந்த குரலாக கருதப்படுபவர். ஈழத்தின் நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருபவர். ஈழத்தில் கிளிநொச்சியில் வசிக்கும் தீபச்செல்வன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

உன்னதம் : உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

தீபச்செல்வன் : எனக்குப் பிடித்த புத்தகம் கப்டன் மலரவன் எழுதிய ‘போர் உலா’ நாவல். ஈழத்து இலக்கியத்தில், போர் இலக்கியத்தில், ஈழத்து நாவலில், ஈழத்துப்  போரியல் நாவலில் தவிர்க்க முடியாத ஒரு புனைவு இலக்கியம் இது. துப்பாக்கியை ஒரு கையிலும் பேனாவை மறு கையிலும் சுமந்த விடுதலைப் புலிப் போராளி ஒருவனின் படைப்பு. எழுபதுகளில் பிறந்து 92இல் வீரமரணம் எய்திய மலரவன் தன்னுடைய இருபது வயதுகளில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். அவர் இப்போது இருந்திருந்தால் தமிழின் தலைசிறந்த புனைகதைப் படைப்பாளியாக இருந்திருப்பார். புயல் பறவை என்ற நாவலையும் அவர் எழுதியிருக்கிறார்.

 

போர் உலா நாவல் 1990இல் வன்னியின் மாங்குளத்தில் இருந்த சிங்கள படைமுகாம் ஒன்றை தகர்க்கும் போர் பின்னணியில் ஒரு போராளியின் குழந்தைமைக் கால நினைவுகளுடன் எழுதப்பட்ட நாவல். போரியல் வாழ்வையும் அக்கால பொதுசனங்களின் வாழ்வியலையும் தெளிவாக கண்ணுக்கு முன்னால் கொண்டு வரும் தலை சிறந்த புனைவு போர் உலா நாவல். ஒரு அக்காவுக்கும் தம்பிக்கும் இடையிலான வாழ்வு பற்றிய பகுதிகள் என்னை வெகுவாக ஈர்த்தவை. அப்பகுதில் ஈழ நிலத்தின் பண்பாடும் ஈழக் குழந்தைகளின் குணாம்சங்களும் நிறைந்த மொழியும் சித்திரிப்பும் உரையாடலும் ஈழ இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் புதிது என்றே சொல்வேன்.

 

One thought on “உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!