home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : மஹாரதி

கவிதைகள் : மஹாரதி

1

இரவின் கதவுகளை
அடுத்தடுத்து
திறந்து திறந்து
செல்லச்செல்ல
மிச்சம் இருப்பது
இரவும்
இரவின்மேல்
உறங்கும் இரவும்.

 

 

2

யாரோ ஒருவனை
யாரோ ஒருவன்
ஏதோஓர் இரவில்
தேடிப்போன
தேடலின் முடிவில்
தேடிப்போனவன்
தேடப்பட்டவனாய்
மாறிப்போனான்.

 

 

3

உபன்யாசம் ஆரம்பம்
குறுக்குநெடுக்குமாய்
‘மியாவ்’ என்று போனது பூனை
தூணில் கட்டப்பட்டது
சாமியார்கள் மாறினர்
மடம் மாறியது
உபன்யாசம் மாறியது
தூணில் பூனை இன்னும்
‘மியாவ்’ என்றுதான்
கத்திக்கொண்டிருக்கிறது

 

 

 

4

கரும்பைத் தின்றது
ஒரு கல்யானை
வேள்வித் தீநாக்குகள்
பின்னிப்பிணைந்த
ரதிமதன் நாக்குகளாய்
உருமாறலாம்

 

 

  • மஹாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!