home கட்டுரை, புதிய அலை சர்வதேசத் திரைப்படங்களுக்கு நிதி

சர்வதேசத் திரைப்படங்களுக்கு நிதி

 

  • நீரஜா நாராயணன்

 

சார்லஸ் டிக்கன்ஸ் சரியாகச் சொல்வார்: “அது நல்ல நேரத்தின் பலன், அது கெட்ட நேரத்தின் பலன்.” அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வருகைகள் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாததால் உலகளாவிய படங்களுக்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் ரசனை வளர்ந்துகொண்டிருப்பதாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும் உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளை இன்றைய சினிமாக்கள் நிறைவுசெய்யமுடியாமல் இருக்கிறது. இந்தத் தட்டுப்பாடுதான் திரைப்பட நிதி மற்றும் படைப்புத்திறனில் புதிய புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் கட்டாயமாகக் கோருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளுக்கும் புதிய படைப்பாளிகளுக்கும் வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

எனவே நமக்கு சினிமாவின் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது? நடந்து முடிந்த அகாடெமி விருதுகள் விழா ஒரு அறிகுறியென்றால், நம்முடைய நிலைகொள்ளாத எதிர்காலம் நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் போலத்தான். சமீபத்தில் நடந்ததில் இதுதான் ஏறக்குறைய சுயாதீன அகாடெமி விருதுகள் ஆகும், ஏனெனில் இதில் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாய்ஹுட், விப்லாஷ், தி இமிடேஷன் கேம், ஃபாக்ஸ்கேட்சர், சிட்டிசன்ஃபோர் மற்றும் ஸ்டில் அலிஸ் ஆகியவை அந்த இடத்தை அடைவதற்கும் விற்பனை ஆனதற்கும் சிலரின் சுயாதீன முயற்சிகளும் சர்வதேச விற்பனை குழுக்களும்தான் காரணம். ஜாக் பிளாக் பாடியது போல், சினா இப்போது அமெரிக்க படங்களுக்கு நிதியளித்து வருகிறது, மற்றும் அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்து அமெரிக்காவின் சிறுபான்மை இன இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் தருவதாகக் கூறியிருக்கிறார்.

இவை குறிப்பாக எனக்கு மனஉறுதியளிக்கின்றன. நான் என் தொழிலை லண்டன், ஆசியா ஆகிய இடங்களில் செய்தேன், இப்போது அமெரிக்காவில் செய்கிறேன்; பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் அடிப்படை கதைசொல்லலையும் சமநிலையாக வைத்துக்கொண்டு உலகளாவிய இயக்குனர் சிகரமாவது எப்படி என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான் மூன்று கண்டங்களில் படம் இயக்கியிருக்கிறேன். அனைத்துமே அந்தந்த இடங்களிலுள்ள மக்களின் ஆதரவாலும் வரி விலக்குகளாலும், துணை தயாரிப்பு சாதனங்கள் மற்றும் நிபுணர்களாலும் மட்டுமே சாத்தியமானது.

வளர்ந்துகொண்டிருக்கும் திரைத்துறையிலுள்ள வாய்ப்புகள் என்னை 1960லிருந்த பாம்பே ஜாஸ் கிளப் அமைப்பை வடிவமைக்க வைத்து, குறைவான பொருட்செலவில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த வைத்தது. ஃபாக்ஸ் இண்டர்நேஷனல் ப்ரொடக்‌ஷனுக்காக தெற்காசிய பகுதிகளில் நாங்கள் ஸ்மோர்காஸ்போர் கலாச்சாரம் தழுவிய கதைகளைக் கண்டுபிடித்தோம். உலகின் எந்த மூலைக்கும் செல்ல தகுதியான நல்ல கதைகள், அவற்றின் மறு உருவாக்கத்திற்கான உரிமை மூலம், ஒரு இயக்குனருக்கு பணம்கொழிக்கும் பசுக்களாகும்.

பிறநாடுகளிலுள்ள பார்வையாளர்கள்தான் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை முடிவுசெய்கிறார்கள், இது உலகப் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற நம்பிக்கையில் முற்றிலும் புதிய கதையை புதிய இடங்களிலும் பல்வேறு தரப்பட்ட நடிகர்களையும் வைத்து திரைப்படமாக்கும் வாய்ப்புகளைத் தருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க திரையரங்கங்களின் பாக்ஸ் ஆபிஸ் தொகை $10.9 பில்லியன், ஆனால் சர்வதேச விற்பனை தொகை $25 பில்லியன். அதனால், நாம் நம்முடைய திரைக்கதையை தெளிவாகவும் உள்ளூர் சார்ந்ததாகவும் அல்லது வித்தியாசமான கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்ததாகவோ திட்டமிடுகிறோமா?

இணையத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நெட்ஃப்லிக்ஸ் போன்ற முன்னணி வலைதள திரைப்பட சேவை நிறுவனங்கள், ஏறக்குறைய 70% முடிவுகளை அவர்களுடைய கருத்துகளைத்தான் அலசித்தான் எடுக்கிறார்கள். அதனால் ஒரு சுயாதீன தயாரிப்பாளர் ஒரு சரியான கதையைத் தேர்ந்தெடுப்பது, அதற்கான சரியான பொருட்செலவை எப்படி திட்டமிடுவது, அந்தப் படைப்புக்கு என்ன மதிப்பை நிர்ணயிப்பது?

ஒரு திரைப்பட உருவாக்கத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் பக்கத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது: தன் கதையைச் சொல்வதற்கு ஏற்ப தகுதியானதாக உருவாக்கினால் போதும் என்ற நம்பிக்கையில் படைப்புத்திறன் பக்கமே முழு கவனத்தையும் செலுத்துவது மட்டுமே ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குப் போதாது. பணமும் பட்ஜெட்டும் தயாரிப்பாளரும் இல்லாமல் திரைப்படத்தை உருவாக்க முடியாது. இயக்குனர்கள் அவர்களின் திரைப்படத்திற்கான பட்ஜெட் பற்றிய புரிதலையும், எப்படி தங்களுடைய படம் சந்தையில் போட்டியிடப்போகிறது என்பதையும் அறிந்து வைத்திருந்தால் – கடன் மற்றும் பங்குதாரர்களுக்கேற்ப சரியான பட்ஜெட்களைத் திட்டமிட்டு விநியோக உத்திகளையும் கையாளலாம். அப்போதுதான் இப்போட்டி உலகிலும் வியாபார சந்தையிலும் நம் இருப்பை நிலைநிறுத்த முடியும்.

 

நீரஜா நாராயணன்  சுயாதீன (Independent) திரைப்படத் தயாரிப்பாளர். சோனி பிக்சர்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உட்பட சில சர்வதேச முன்னணி நிறுவனங்களின் ஊடகத் தொடர்பாளர் 

 

தமிழில் : ஜெய சரவணன்

நன்றி :  Film Maker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!