home உன்னதம், நேர்காணல் மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…

மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…

வில்லியம் டால்ரிம்பிள் உடன் ஒரு நேர்காணல்

 

– கால் ஃப்ளைன்

 

இந்தியாவில் வசிக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளரான வில்லியம் டால்ரிம்பிள், புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர். சண்டே டைம்ஸ் வழங்கும் இளம் பிரிட்டிஷ் எழுத்தாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஜெய்ப்பூரில் நடத்தப்படும் இலக்கியவிழாவின் இணை இயக்குனர். இந்தியா குறித்து ஐந்து நூல்களைப் பரிந்துரை செய்யும் இவர், விவிலியத்தைப் போல எட்டு மடங்கு நீளம் கொண்ட மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும் – ஒவ்வொன்றும் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே நன்றாக இருக்கிறது’ என்கிறார்.

 

கால் ஃப்ளின் : நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் புனைவல்லாத அபுனைவு நூல்கள் குறித்து நம் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என நான் நினைக்கிறேன். Alex von Tunzleman எழுதிய புத்தகமான ‘Indian Summer’ லிருந்து தொடங்கலாம்.

 

வில்லியம் டால்ரிம்பிள் : அலெக்ஸ் அசாதாரணமாக அறிமுகமாகியிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து புத்துணர்வுடன்  வெளியே வந்து இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை குறித்து ஏற்கனவே நூற்றுக்கணக்கான நூல்கள் இருக்கின்ற சிறப்பான படைப்புகளைக் கொண்ட துறையில் நூல் எழுதியிருக்கிறார்.   அதில் புதிதாக பல விஷயங்களை, மிகவும் வசீகரிக்கும் வகையில் எழுதியிருக்கிறார். நான் பிரிவினை குறித்து இதுவரை படித்த புத்தகங்களிலேயே சிறப்பானது என்பதோடு ஒரு நம்பமுடியாத சாதனையாகும். நான் உண்மையிலேயே இந்த நூலை விரும்புகிறேன்.

 

பிரிவினை என்பது மிகவும் சிக்கலான ஒரு விஷயமாகும். இதற்கு முன்பு பலர் அதைப் பற்றி சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் பிரிவினை குறித்து நான் படித்ததிலேயே இது மிகச் சிறந்த நூலாகும். அவர் புதிதாக எந்தவொரு மூலப்பொருளையும் (material) அணுகியிருப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் விரும்பியிருந்த மூலப்பொருளான நேருவும் – லேடி மெளண்ட்பேட்டனும் (கடைசி வைஸ்ராய் மெளண்ட்பேட்டனின் மனைவி) பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் அவருக்கு கிடைத்திருக்கவில்லை. ஏனெனில் அவர் இரண்டு விஷயங்களை ஒரே நேரத்தில் செய்தார்: நேருவுக்கும் மெளண்ட்பேட்டனுக்குமான காதலை சொல்லியிருப்பதோடு – பிரிட்டிஷ் இந்தியாவின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட முக்கோண காதல் கதை – மிகவும் வன்முறையான 300 ஆண்டு கால ஏகாதிபத்தியத்தை வென்ற அசாதாரண முடிவையும் சொல்கிறார். சுதந்தர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி கடைசி வைஸ்ராயின் மனைவி மேல் காதல் கொண்டிருப்பதை முடிவாகக் கொண்டிருக்கிறது, இது முற்றிலும் ஆச்சரியமான, அசாதரணமான கதையாகும். அந்த நேரத்தில் இந்தக் காதல் நிறைவடைந்ததா இல்லை பெரும்பாலான மக்கள் நம்புவது போல சிறிது காலத்துக்குப் பிறகு நிறைவடைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

கால் ஃப்ளின் : சம்பந்தப்பட்ட நபர்களை முன்னிறுத்தி அலெக்ஸ் அவரது சுருக்கமான வரலாற்றைக் கூறுகிறார்.

 

டால்ரிம்பிள் : சரியானதுதான். பிரிவினை குறித்த பெரும்பாலான நூல்கள் மிகவும் கடினமானது. சந்திப்புகளும், தூதுக்குழுக்களும்….நீண்டுகொண்டேயிருந்ததால் அது காத்திரமில்லாத வாசிப்பை உருவாக்கியது. வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையை தெளிவாக நீங்கள் கையாண்டாலும் கூட அதற்கான வழி மிகவும் கடினமானதாக இருப்பதோடு இயல்பான வரலாற்றுச் சுருக்கத்தைத் தராது. ஆனாலும் இவர் அதை நன்கு கையாண்டிருக்கிறார். ஒரு பெண், அதுவும் கல்லூரியிலிருந்து வெளியே வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில் இதைச் செய்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

 

கால் ஃப்ளின் : நீங்கள் பரிந்துரைத்த அடுத்த நூல் மிகவும் சமீபத்தியலானது பற்றி Edward Luce எழுதிய  ‘Spite of the Gods’.

 

டால்ரிம்பிள் : பிரிவினையைப் போல, இந்தக் கதையும் அதிகமாகச் சொல்லப்பட்டது, ஆனால் எட்வர்ட் லுஸ் – ன் பார்வை அதிகாரப்பூர்வமானதும், நடுநிலைமையானதும், உணர்வுப்பூர்வமானதும், சந்தோஷப்படக்கூடியதுமாகும். இந்தியாவுக்குச் செல்லும் வர்த்தகர்கள் அந்த நாட்டினுடைய பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு எளிதாக அணுகக்கூடிய நூலாக இது இருக்கிறது என்றால் அது மிகையில்லை. லுஸ் ஃபைனான்சியல் டைம்ஸின் நிருபராக இருந்தவர், இந்தியரைத் திருமணம் செய்து கொண்டவர். உண்மையிலேயே பயணித்து இதை மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார். நான் பொருளாதார நிபுணர் இல்லை. பணம் என்றால் என்னவென்று எனக்குப் புரியாது ஆனால் இவர் அது குறித்து மற்ற நூல்களைக் காட்டிலும் மிகவும் எளிமையாக  விளக்கியிருக்கிறார்.

 

கால் ஃப்ளின் : இவர் இந்தியாவின் அபரீத தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிக் கூறியிருந்தாலும் அதுவே அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு என்பதில் ஆறுதல் அடையவில்லை. அது சரியா?

 

டால்ரிம்பிள் : சரியான கேள்வி. அவர் சீனாவின் முற்றிலும் வித்தியாசமான அபிவிருத்தி உதாரணத்துடன் ஒப்பிடுகிறார். சீன மாடல் என்பது பெருவாரியான (வெகுஜன) உற்பத்தி வகையாகும் – ஒவ்வொருவரும் கார் பார்க்குகளையும், தொழிற்சாலை பொருட்களையும் உருவாக்கி வருகிறார்கள். பணியாளர்களில் பெரும்பாலோர் படிக்காதவர்களாக இருப்பது இந்தியக் கலாச்சாரமாக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில், அதிபுத்திசாலி, அதிகம் படித்த, ஆச்சரியமூட்டும் அளவுக்கு பேரார்வம் கொண்ட மத்திய தர வர்க்கத்தினர் விழிப்புடன் கையாளக்கூடிய காரியங்களை – மென்பொருள், நிதி, அதிக மதிப்பு கொண்ட விஷயங்கள் – செய்து வருகின்றனர். ஆனால் மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையைச் சேர்ந்தவர்களே இதைச் செய்து வருகின்றனர்.

 

எனவே அபிவிருத்தியில் இரண்டு மாடல்கள் இருக்கின்றன, இந்தத் தருணத்தில் சீனர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுடைய மக்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கின்றனர். இந்தியா எப்போதுமே யானை போல மெதுவாகத் தான் செல்கிறது. ஆனால் தொடர்ந்து செல்லும்போது அது அசையாப் பொருளாகி விடுகிறது.

 

கால் ஃப்ளின் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் தென் இந்தியாவுக்குச் சென்றேன். இந்த தொழில்நுட்ப நகரங்கள் எல்லாம் விளைநிலத்தின் மத்தியிலும், எதிர்பாராத இடங்களிலும் உருவாகி வருகிறது.

 

டால்ரிம்பிள் : ஆமாம், பெங்களூருக்கு வெளியே இருக்கும் பிரதானமான எலக்ட்ரானிக் சிட்டியை சென்றடைவது சிரமமாகத்தான் இருக்கிறது. பெங்களூர் குறித்து சஞ்சீவ் பாஸ்கரின் நகைச்சுவை: “அன்பே, நான் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் தான் இருக்கிறேன் – இன்னும் ஆறு மணி நேரத்தில் நான் வீட்டிலிருப்பேன்!”

 

கால் ஃப்ளின் : உங்களுடைய மூன்றாவது பரிந்துரை நூலான  ‘The Argumentative Indian’ எழுதிய அமர்த்யா சென்,  ஒரு பொருளாதார நிபுணர். இந்தியாவினுடைய நிதி எதிர்காலம் குறித்த மற்றுமொரு கலந்துரையாடலா?

 

டால்ரிம்பிள் : அவர் ஒரு பொருளாதார நிபுணர், ஆனால் இந்த நூல் பொருளாதாரம் பற்றியது இல்லை. இது வரலாறு, கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்தியா பற்றி தெரிந்து கொள்வதற்கான முதல் நூல் இது இல்லை, இந்தியாவைக் குறித்து நன்கு அறிந்தவர்களுக்கான இந்த நூல் மிகவும் ஆழமாகவும், ஆய்வுப் பூர்வமாகவும், நகைச்சுவையுடனும், புத்திசாலித்தனத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது.

 

பெரும்பாலும் மறந்து போய்விட்ட அசாதாரணமான நாத்திகப் பாரம்பரியம், இந்தியா களங்கமற்ற இந்துக்களின் நாடு என்கிற V.S. நைப்பாலின் இந்து அடிப்படைவாதம்… என அவர் பல வகையான தலைப்புகளில் எழுதுகிறார். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களிடையேயான பகிர்வு குறித்து ஒரு நல்ல நிலைப்பாடு அவரிடம் இருக்கிறது. இந்தியா என்பது பல நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட நாடு. உலகத்தைப் பல கண்ணோட்டங்களில் பார்ப்பது குறித்து நடைபெறும் முடிவற்ற விவாதங்கள், இஸ்லாம், இந்து, கிறித்துவம், பெளத்தம், சீக்கிய மதம், ஜெயின் மதம், நாத்திகம் என வித்தியாசமான பண்பு அமைப்புகள் என பன்முகத் தன்மைக் கொண்டதாகும். இது இந்தியாவின் அற்புதமான தீர்க்கதரிசனமாகும். இவ்வளவு காலமும் எல்லாவற்றிற்கும் போராடக்கூடிய வாதாடும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இது நூலுக்கான நல்ல தலைப்பு என்பது உண்மையாகும்.

 

நிச்சயமாக இது இந்தியாவை நன்கு அறிந்தவர்களுக்கான ஒரு நூலாகும். பல்வேறு வகையான மக்கள் உருவாக்கும் பல விதமான தொன்மகளுக்கு மிகவும் அவசியமான ஒரு மாற்று மருந்தாகும்.

 

கால் ஃப்ளின் : அருந்ததி ராயின் புத்தகமான ‘The God of Small Things’ ஐ நீங்கள் ஏன் பரிந்துரை செய்திருக்கிறீர்கள்?

 

டால்ரிம்பிள் : வெள்ளம் போல பெருக்கெடுத்திருக்கும் அனைத்து நவீன இந்திய நாவல்களிலும் நான் மிகவும் அனுபவித்த ஒன்று அருந்ததிராயின் படைப்பாகும். உண்மையிலேயே இது அற்புதமான தரத்தைக் கொண்டிருக்கிறது. இது கலையுணர்வோடும், எந்தவொரு நாவலுக்குமில்லாத சிறந்த முடிவைக் கொண்டிருக்கிறது. பூரணமான முடிவை மிகச் சில நாவல்களே கொண்டிருக்கும், அந்த வகையில் இது ஒன்றாகும். சிறப்பான வேலைப்பாடுடன் நன்கு எழுதப்பட்ட நாவல். எதிர்காலத்தில் எப்போதாவது அவர் இதே போல திரும்பவும் எழுதுவார் என நான் நம்புகிறேன்.

பொருளடக்கத்தில் இல்லாவிட்டாலும் இது டோனி மோரிசனின் ‘Beloved: oppression’ க்குக் கடன்பட்டிருக்கிறது. கருப்பினத்தவருக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே இல்லாமல், தாழ்த்தப்பட்டசாதியினருக்கும் உயர்த்தப்பட்ட  சாதியனருக்கும், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தீண்டாமை கொண்ட ஆணுக்கும் இடையேயான காதல் கதை. இது சோகத்தில் முடிகிறது. நூல் முழுக்க என்ன நடக்கும் என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர் அசாதாரண முடிவை கடைசி வரை பாதுகாத்திருக்கிறார்.

ராய் ஒரு குறும்புத்தனமான எழுத்து பாணியைக் கொண்டிருக்கிறார். சில வேளைகளில் அது மிகவும் புத்துணர்வு கொண்டதாகத் தோற்றமளிக்கிறது. இதற்கு பிறகு அவரது எழுத்துகளைப் படித்தவர்களுக்கு இது குறைவாகவே தெரிந்திருக்கும். 1997 ல் நான்  இதை முதலில் படித்தபோது ஏற்பட்டத் தாக்கம் மறுபடியும் படிக்கும் போது என்னிடம் ஏற்படவில்லை ஆனால் எந்தவொரு அளவுகோலிலும் இது ஒரு சிறந்த அறிமுக நாவலாகும்.

 

கால் ஃப்ளின் : நீங்கள் மஹாபாரதத்தைப் பரிந்துரைத்தீர்கள்..

 

டால்ரிம்பிள் : இது உலகத்திலிருக்கக்கூடிய தொன்மங்களில் சிறந்த ஒரு காவியமாகும். விவிலியத்தைப் போல எட்டு மடங்கு நீளம் கொண்ட மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும். பீட்டர் புருக்கீன் திரைப்படம் வாயிலாக நான் இதை வந்தடைந்தேன், அதைத் தொடர்ந்து அதன் திரைக்கதை வடிவத்தைப் படித்தேன். ஒவ்வொன்றும் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி நன்றாக இருந்தது. இது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். இது ஓரளவுக்கு ஷேக்ஸ்பியரின் தெளிவின்மை போல இருக்கிறது; நல்லவர்களைப் பற்றி உணர்வது போலவே தீயவர்கள் குறித்தும் நீங்கள் உணர்வீர்கள். யாருமே களங்கமற்றவர்கள் இல்லை. தீயவர்கள் முழுவதுமே தீயவர்களாக இருப்பது இல்லை, நல்லவர்கள் முழுவதுவே நல்லவர்களாக இருப்பது இல்லை. இது மிகவும் அற்புதமாக செய்யப்பட்டிருப்பதோடு, இதுவரை சொல்லப்பட்டக் கதைகளிலேயே மிகவும் இறுக்கமானதாகும்.

 

சமஸ்கிருதத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளின் ஊடாக மெதுவாகப் பயணித்தேன். புராதன இந்தியாவுக்கான ஒரு சிறிந்த அறிமுகமாக இருக்கும் இது Jean-Claude Carriere – ன் கடைசி சிறந்த திரைக்கதை வடிவம். அதற்குப் பிறகு அவர் வேலை செய்த எந்தவொரு திரைக்கதையும் இதற்குப் பக்கத்தில் கூட வர இயலாது. இது இந்திய தொன்மம் குறித்த குறுகிய அசாதாரணமான ஓர் அறிமுகமாகும்.

 

பீட்டர் புருக் பதிப்பிலான டிவிடி – களை அமேஸானில் வாங்குவது உண்மையிலேயே நல்லதாகும். நான் இதை சமீபத்தில் மூன்றாவது முறை பார்த்தேன், ஒன்பது மணி நேரம் ஓடக்கூடிய இதில் எந்தவொரு இடத்திலும் திறமை குறைந்து காணப்படவில்லை. மிகச் சிறந்த தொன்மம், மிகச் சிறந்த படமாக, மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர், இயக்குநரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியச் சிந்தனை, புராதன இந்தியாவுக்கான ஒரு சிறந்த நுழைவாயிலாகவும் இது இருக்கிறது. மேற்கத்திய வாசகர்களுக்கு, குறிப்பாக சாதாரண வாசகர்களுக்கு இது இந்தியா குறித்த முழு வீச்சுக்குமான ஒரு திறப்பாகும்.

 

கால் ஃப்ளின் : நீங்கள் இறுதியாக பரிந்துரைத்த, புராதான திராவிடத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட `The Interior Landscape:Love poems from a classical Tamil Anthology’, குறித்தும் இதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

 

டால்ரிம்பிள் : ஆமாம். The Interior Landscape என்பது மிகவும் குறுகிய மிகவும் அற்புதமான புராதன இந்திய கவிதையாகும். ஆச்சரியப்படத்தக்க வகையில் இதில் பெரும்பாலானவை பிரமாதமான சிற்றின்ப வகையைச் சேர்ந்ததாகும்: இது செறிவான அற்புதமான புராதன இந்தியக் கலாச்சாரமே ஒழிய எந்த வகையிலும் பிரிட்டிஷ் கல்வி அமைப்போடு தொடர்புடையதில்லை.

இது பெரும்பாலும் தமிழிலிருந்து மட்டுமல்லாமல் சமஸ்கிருதம், கிரந்தங்கள் போன்றவற்றிலிருந்து இந்தியாவின் மிகச்சிறந்த நவீன கால கவிஞர்களில் ஒருவரால் – புராதன இந்தியக் கவிதைகளை நவீன ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தவர் – செய்யப்பட்ட மொழியாக்கத் தொடர் ஆகும். இது Ovid லிருந்து தெட் ஹூஸ்  செய்த மொழியாக்கம் போன்றதாகும். சிறந்த நவீன கவிஞர் புராதன கவிதைகளை நவீன இலக்கியமாக உருவாக்கியிருக்கிறார். இந்த நூலை துய்த்து மகிழ்வதோடு அரை மணி நேரத்தில் நீங்கள் அதன் சாரத்தையும் பெறமுடியும்; இது அசாதரணமான ஒன்றை வெகு விரைவில் அடைவதற்கான ஒரு வழியாகும்.

 

தமிழில் :  சித்தார்த்தன் சுந்தரம்.

நன்றி : fivebooks.com

இந்த இணையதளத்தின் சிறப்பம்சம், உலகப்புகழ் பெற்ற கலை இலக்கிய, சமூக, அரசியல் பூர்வமாக வெளிவந்திருக்கும் நூல்கள் பற்றி “தங்களுக்குப் பிடித்த 5 நூல்களைப் பரிந்துரைக்குமாறு”   சர்வதேச எழுத்தாளுமைகளிடம் விரிவான நேர்காணல் செய்து வெளியிடுகிறது. தீவிரத் தேடல் கொண்ட இலக்கிய வாசகனுக்கு  மிகவும் அற்புதமான இணைய தளம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!