home உன்னதம், கவிதை வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதைகள்

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதைகள்

குளிர்காலத்தின் வருகை

 

 

காற்றால் ஒருமித்து உக்கிரமாகத் தாக்கப்பட்டன

பாதி உரிக்கப்பட்ட மரங்கள்,

அனைத்துக்கும் வளைந்து கொடுத்து,

உலர்ந்து கலக்கமுற்ற இலைகள்

உதிர்ந்து விட மறுக்கின்றன

அல்லது கடும் மழை போல் ஊக்கமடைந்து

ஒரு புறமாகச் சினத்துடன் பிரவகிக்கின்றன

பூஞ்செடிகள், கடுஞ்சிவப்பு வண்ணம் –

எப்பொழுதும் இலையின்றி இருப்பது போலிருந்த –

வெறுமையான தோட்டத்தின் வரப்பில்

வீழ்கின்றன.

 

 

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்: உலகப் புகழ்பெற்ற கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் நாடக ஆசிரியர். படிமவியல் இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.

 

Poets.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!