home கட்டுரை, டிரெண்டிங் வில்லியம்  காஸ் : பின்நவீனத்துவ எழுத்தாளருக்கு அஞ்சலி

வில்லியம்  காஸ் : பின்நவீனத்துவ எழுத்தாளருக்கு அஞ்சலி

புனைவுகளில் கொலாஜ் பாணியிலான வெட்டி ஒட்டுதல், கட்டுடைப்பு செய்தல்.. போன்ற பல்வேறு வகையான சோதனை முயற்சிகளைச் செய்தவர்களில் முக்கியமானவர்கள் டொனால்டு பார்த்தல் மே, வில்லியம் பர்ரோஸ்… இந்த வரிசையில் மிக மிக முக்கியமானவர் வில்லியம் காஸ். “மெடா ஃபிக்ஷன்” என்ற பாணியை  அறிமுகப்படுத்தி சர்வதேச பின்நவீனத்துவ இலக்கியப் போக்குகளில் பெரும் ஆளுமையாக விளங்கியவர்.தமிழுக்கு அறிமுகமாகாமலேயே போய்விட்ட  இவர் கடந்தவாரம் காலமானார். அவருக்கு உன்னதம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.

 

  • ஆலிசன் ஃப்லூட் 

அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் எச் காஸ் தனது 93-ஆவது வயதில் இயற்கை எய்தினார். Omensetter’s Luck மற்றும் The Tunnel நாவல்களுக்காக அதிகம் மெச்சப்பட்ட எழுத்தாளர், நாவல்களின் எல்லைகளை உடைத்தவர் மற்றும் “metafiction” என்ற பதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்.

மிஸவ்ரியில் அவருடைய இல்லத்தில் புதன்கிழமை அன்று காலமானார் என பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் அறிவித்துள்ளது. அவர் ஒரு முன்னணி சோதனைரீதியான எழுத்தாளர்.  மரபார்த்த கதையாடல்களை ஒதுக்கியவர். ஜோனதான் ஸேஃப்ரான் ஃபாயர் மற்றும் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அவருடைய தாக்கம் பெற்றவர்கள்.

காஸ் தனது முதல் நாவல் Omensetter’s Luck –ஐ 1966-ல் வெளியிட்டார். 1890-களில் ஓகியோவை அடிப்படையாகக் கொண்டு, நல்லியல்பு கொண்ட ஒரு மனிதனுக்கும் முட்டாள்தனமான ஒரு பிரசங்கிக்குக் இடையில் ஏற்படும் முரண்பாடுகளை அந்த நாவல் வரைகிறது. இந்த இலக்கியப் பாரம்பரியத்தில் ஒரு அமெரிக்கரின் மிக முக்கியமான புனைவு என The New Republic அந்த நாவலை அழைத்தது. அது அமெரிக்க இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் எனவும் பாராட்டப்பட்டது. பிந்தைய 20-ஆம் நூற்றாண்டின் அமெரிக்க நாவல்களில் “வெறுமனே மெச்சுதலின் கீழ்” உள்ளதாக வாலஸ் அறிகிறார். அவர் காஸின் எழுத்துகளை “பளிச்சென்ற ஆனால் பளபளப்பான, பனி மூலமான ஒளி போல” என விவரிக்கிறார்.

அடுத்து வந்த 30 வருடங்கள் காஸ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருடைய உச்சகட்ட படைப்பான The Tunnel நாவலை எழுதிக் கொண்டே, விமர்சனங்களும் குறும்புனைவுகளும் எழுதினார். 1995-ல் அந்த நாவல் வெளியானது. அதைத் தொடர்ந்து மிட்வெஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டியில் ஒரு பேராசிரியரின் கதை, Third Reich வரலாற்றை, அவருடைய வரலாறு போலவே எழுதுவதில் ஈடுபட்டார். அவர் தனது சொந்த அடித்தளத்திலிருந்து ஒரு பாதைவழியை உருவாக்கத் துவங்கினார். அது அமெரிக்கன் புக் அவார்டைப் பெற்றுத் தந்தது.

Reading William Gass இணையதளத்தின் ஆசிரியரும், காஸின் நண்பருமான ஸ்டீபன் ஸ்ஹென்கென்பெர்க், அவர் ஒரு அடையாளக்குறி போலத் தோன்றுவதாகக் கூறியுள்ளார்.

“தத்துவத்தில்… மற்றும் இசையில், புகைப்படக் கலையில் மற்றும் கட்டுமானவியலில் ஒரு எல்லையற்ற ஆர்வத்துடன் இலக்கியத்தின் ஒரு ஆழமான தொடர்பை மணம் முடித்த மற்றொரு அறிவார்த்த உருவத்தைச் சிந்திப்பது மிகக் கடினம்” என ஸ்ஹென்கென்பெர்க் கூறினார்.

இந்தப் பரந்து விரிந்த பரப்பு மூன்று காஸ் விமர்சனத் தொகுப்புகளுக்கு National Books Critics Circle awards, 1985, 1996 மற்றும் 2002-ல் பெற்றது. அவருடைய Philosophy and the Form of Fiction எனும் 1970 கட்டுரையில் “மீபுனைவு (metafiction)” என்ற பதத்தை, போர்ஹே, பார்த் மற்றும் ஃப்லான் ஓ’ப்ரியன் எழுத்துகளை விவரிக்க காஸ் முதன்முதலாகப் பயன்படுத்தினார். இவர்களின் எழுத்துகளில் புனைவுகளின் வடிவம் மேலும் வடிவங்கள் சுமத்தப்படுவதன் மீது ஒரு பருப்பொருளாக வினையாற்றுகிறது என விவரித்தார் காஸ்.

கட்டமைப்பை ஆய்வு செய்வது அவருடைய சொந்தப் படைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. அவருடைய 1997 கட்டுரைத் தொகுப்பில் ஒரு வடிவத்தைக் கண்டடைந்த காஸ் இவ்வாறு அறிவிக்கிறார்: “எனது கதைகள் துரதிர்ஷ்டவசமாக எதிர்க் கதையாடல், எனது கட்டுரைகள் தவறான எதிர் வெளிப்பாடுகள், ஆனால் எனது எதிர்நிலையின் கருத்தியல், எனது முரண்பாடு பாத்திரக் குணாம்சமாக மாறிய பிறகு வந்தடைந்தது.”

1990-ல் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு எழுத்தாளர் மையத்தை நிறுவினார். PEN/Nabokov வாழ்நாள் சாதனை விருதை ஒரு வருடம் கழித்து பெறுகிறார். காஸ் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய கடைசி நாவல் Middle C 2013-ல் வெளிவந்தது.  Eyes சிறுகதைத் தொகுப்பு இரண்டு வருடங்கள் கழித்து வெளியானது.

“கடைசி நவீனத்துவவாதி என அல்லது பின்நவீனத்துவவாதிகளில் ஒருவர் எனக் கருதினாலும், காஸின் புனைவுகளில் உள்ள அடிப்படையான தந்திர இயல்பை மறுக்க முடியாது” என வாலஸ் கூறுகிறார்.

எழுத்தாளர்களுக்கான குறிப்புகள் அதே வருடம் வெளியானது. அதில் “நவீன உலகின் இயந்திரத்திடமிருந்து விலகி இருங்கள். அது உங்கள் கற்பனை வளத்தைச் சிதைத்து விடும். அது ஒரு இதய உடைபாட்டை வடிவமைத்து, அதன் சொந்த வகைகளின் தேவைகளை உருவாக்கும். இந்தப் பேரழிவு நேரங்களில் கலைஞர்கள் தான், தீவிர விஞ்ஞானிகளுடன், நமக்கான ஒரே ரட்சித்தல். மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாரும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. யாரும் உங்களை கவனிக்கவில்லை, சாதித்தது என்ன என யாரும் உண்மையில் கவலைப்படுவதில்லை. ஆனால் சில வேளைகளில் அசம்பாவிதம் நிகழக் கூடும், அழகு பிறக்கும்” என காஸ் அறிவுறுத்தியிருப்பார்.

“அவரால் பாராட்டப்பட்ட சிறந்த எழுத்தாளர்களுடன் இனைந்திருப்பதில் அவர் மதிப்புமிக்கவராகக் கருதப்பட்டார்” எனக் கூறினார் அவருடைய மனைவி மேரி ஹேண்டர்ஸன் காஸ். “அதுதான் அவர் சுவாசம் – மாபெரும் இலக்கிய உலகிற்குப் பங்களிப்பதற்கு.”

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

 

நன்றி : The Guardian

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!