கடக ரேகை

ஹென்றி மில்லர்   (Tropic of Cancer நாவலின் ஒரு அத்தியாயம்) ஒரு வேசியைப் போன்றது பாரிஸ். தூர இருந்து பார்ப்பதற்கு அவள் பரவசமூட்டுபவளாக விளங்குவாள். உங்கள் கையில் அவள் அகப்பட்டாலன்றி உங்களால் நிலைகொள்ள முடியாது. பிறகு, ஐந்து நிமிடங்களுக்குப்பின் வெறுமையை உணர்வீர்கள். உங்களை நினைத்தே அருவருப்பு ஏற்படும் . ஏமாற்றப்பட்டதாக நினைப்பீர்கள். பாக்கெட்டில் பணத்துடன் நான் பாரிஸ§க்குத் திரும்பி வந்தேன் . சில நூறு பிராங்குகள் . ரயில் ஏறிப் புறப்படும்போது காலின்ஸ் என் பாக்கெட்டில் …

மணிமேகலையின் ஊடாக பௌத்தம்

– பொ.வேல்சாமி 1898ல் உ.வே.சாமிநாதையர் மணிமேகலையை அச்சுக்குக் கொண்டு வந்தார். வழக்கமாகத் தன்னுடைய நூல்களுக்கு விரிவான முன்னுரைகளைக் கொடுக்கும் உ.வே.சா. இந்த நூலுக்கும் அத்தகைய ஒரு முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார். அந்த முன்னுரையில் தமிழ் அறிஞர்களால் இந்நூல் சரியான வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்று கூறி, அத்தகைய புரிதலுக்காகத் தான் பல்வேறு தகவல்களை இந்தப் பதிப்பில் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். 1894ல் திருமயிலை சண்முகம் பிள்ளையால் வெளியிடப்பட்ட மணிமேகலை பதிப்புடன் ஒப்பிட்டால் இரண்டு பதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் …

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில்

– மார்கிட் கோவ்ஸ் “.. தான் ஒரு பொறியில் மாட்டிக்கொண்டதாக அவன் உடனடியாக அறிந்துகொண்டான், உடனடியாகப் புரிந்துகொண்டான். கொடுமையான ஒரு ரயில்பயணம் முடிந்து, ஆட்டோ ஓட்டுநரின் தந்திரங்களையும் மீறி, அவன் ‘ஆசி காட்’டை அடைந்தபோது இது நிகழ்ந்திருக்கக்கூடாது என்று உடனே அவன் புரிந்துகொண்டான். ஏனென்றால் அவன் கங்கையைப் பார்த்தான்.” லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை, (Laszlo Krasznahorkai) – ‘Drop of Water’ ‘Drop of Water’ கதையில் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கையின் கதாநாயகன் முழுமையோடு ஆன ஒரு தொடர்பைத் தேடிக்கொண்டிருக்கிறான். …

எங்கள் படைப்புகளை எதிர்ப்பினூடாகவே நிகழ்த்தவேண்டியிருக்கிறது..

ஜாக்கி ரீம் சலூம் உடன் ஒரு நேர்காணல்   திரைப்பட இயக்குநரும், நெறியாள்கையாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிகனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புகளில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கிறது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயார்க் பல்கலைக்கழக கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார். 2005ம் ஆண்டில் ஸண்டான்ஸ் திரைப்படவிழாவில், ‘அரேபியர்களின் உலகம்’ என்னும் 9 நிமிடப் படத்தை சலூம் …

தூங்கும் ராணி

– இடாலோ கால்வினோ ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான்  மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, அரசர் தனது கண்பார்வையை இழந்தார். தனது நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்கள் அனைவரையும் அழைத்து முயற்சித்தும், யாராலும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. அந்த வைத்தியர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் ஒருவர், “இந்த மாதிரி கண் …

அழகெனும் புனைவு

அழகு பற்றிய படிமங்கள் எவ்வாறு பெண்களுக்கெதிராக பயன்படுத்தப்படுகின்றன?   – நவோமி உல்ஃப்   இறுதியாக, ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு பெண்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள். 1970 களின் தொடக்கத்தில் பெண்ணியம் மறுபிறப்பெடுத்ததை அடுத்து இருபதாண்டு கால தீவிர செயல்பாட்டினால் மேற்குலகப் பெண்கள் சட்டப்பூர்வ மற்றும் இனப்பெருக்க உரிமைகளைப் (Reproductive Rights) பெற்றார்கள்; உயர் கல்வி கற்று வணிகம் மற்றும் தொழில் புரிய தொடங்கினார்கள்; தங்களது சமூக பங்கு பற்றி போற்றி துதிக்கப்பட்ட பண்டைய நம்பிக்கைகளை …

கதையின் ஏதாவது ஒரு பகுதி பற்றிய நேரடி அனுபவம் இயக்குனருக்கு வேண்டும்…

கேரி ஃபுகுனகா உடன் ஒரு நேர்காணல்   Sin Nombre என்ற படத்தின் மூலம் உலகளவில் மாற்று சமூக அரசியல் நுண்பார்வை கொண்ட இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்திருக்கும்  ஃபுகுனகா திரைக்கதையாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். பல்வேறு குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுத்துள்ள இவர், பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது  Victoria Para Chino  (2004) படம் தொடர்ந்து இரண்டு டஜன் உலகப்படவிழாக்களில் கலந்து தொடர்ந்து விருதுகளைக் குவித்தது.     உங்களை ஒரு திரைப்படக் கலைஞனாக்கிய சூழல் எது? ஆதி புராதனக் கதைகள் …

ரயிலில் ஓட்டம்

– டிசே. தமிழன்   மாற்று சமூக அரசியல் திரைப்பட இயக்குனர் கேரி ஃபுகுனகா வின் Sin Nombre ஸ்பானிய‌ திரைப்ப‌ட‌ம் – ஒரு அறிமுகம்  1 காதலும் சாகசங்களும் இல்லாது வாழ்க்கை நகர்வதில்லை. காலங்காலமாய் தொடர்ந்து வருகிற காதல், அவரவர் அளவில் தனித்துவமாய் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் காதல் அனுபவங்கள் சிலிர்ப்படையச் செய்வதாகவோ, சலிப்பைப் பிதுக்கித் தள்ளுவதாகவோ, துரோகத்தை நினைவூட்டுவதாகவோ அமைந்துவிடவும் கூடும். ஒரு காலத்தில் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க கப்பலில் புறப்பட்டவர்களுக்கு சாகச மனது அதிகம் வேண்டியிருந்தது. இன்னும் சிலரோ தமது …

முகநூல், கூகுள், அமேஸான் : பெரும் தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்

ஃப்ராங்க்ளின் ஃபோயருடன் நேர்காணல்   ஆண்ட்ரூ கீன்    World Without Mind: the Existential Threat of Big Tech என்ற நூலை எழுதிய ஃப்ராங்க்ளின் ஃபோயர் ஒரு இதழாசிரியர், நூலாசிரியர். அவருடைய How Soccer Explains the World என்ற நூல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகை, குறிப்பாக, அமெரிக்காவை, டிஜிட்டல் தொழில் நுட்பம் எப்படி கபளீகரம் செய்கிறது என்பதை முன்வைத்து, World Without Mind என்ற தனது நூலில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்.  ”ஃபோயர் தனது எச்சரிக்கைக் குரலுக்குப் …

மாலையம்மன்

– தொ.பரமசிவன்   மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. அதுவும் தமிழ்நாட்டைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் உலகத்துடன் ஆன இந்த உறவு விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துவிடுகின்றது. அரும்பு, மொட்டு, பூ, மலர் என்பவை மலரின் பருவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். இவற்றோடு ‘பூ(வி)ரி’ (தென்னம்பூரி), மடல் என்ற சொற்களும் இங்கே நினைக்கத் தகுந்தவை. இணர், தாது, பொகுட்டு, அல்லி, புல்லி, தோடு, மடல் என்பவை பூவின் உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்களாகும். பூ …