விநோதப் புனைவு : ஈராக்+100

– ஜாசன் ஹெல்லெர்   சமீப வருடங்களில் உலகெங்கிலும் காணப்படுகிற விநோதப் புனைவிலக்கியம்* (Speculative Fiction) அமெரிக்காவில் குறிப்பிடத்தகுந்த பாதையைப் பெற்று வருகிறது., ஜொஹன்னா சினிசலோ(Johanna Sinisalo)-வின் The Core of the Sun, காரின் டிட்பெக்(Karin Tidbeck)-இன் Amatka போன்ற அறிவியல் புனைவு நாவல்கள் Grove Atlantic மற்றும் Vintage போன்ற பதிப்பகத்தாரால் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், சீனாவைச் சேர்ந்த லியூ சிக்சின் (Liu Cixin) தன்னுடைய The Three Body Problem என்கிற அறிவியல் …

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

வாழ்   உண்மையை சொன்னால் எரிச்சலுறுவார்கள் இனியும் உண்மையை சொல்லாதே, தஸ்லிமா கலிலியோவின் காலமல்ல இந்தக் காலம். இது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு, உண்மையை சொன்னால் சமூகம் உன்னை வெளியேற்றும், நாடுகள் உன்னை தன் நிலத்திலிருந்து நீங்க பணிக்கும், மாநிலங்கள் உன்னைச் சிறைப்படுத்தும், சித்திரவதை செய்யும், உண்மையை சொல்லாதே, பதிலாக, பொய்யுரை   சூரியன் பூமியை சுற்றுகிறதென்று சொல், சூரியனை போலவே நிலவுக்கும் ஒளியுண்டென்று சொல். மலைகள் பூமியில் அறையப்பட்டிருக்கிறது என்று சொல், அதனால் பூமி வெட்டவெளியில் …

பியானோ இசைக் கலைஞன்

தற்கால உலகக் கவிதைகளின் போக்கு :   பியானோ இசைக் கலைஞன் அட்மியெல் காஸ்மன் தண்ணீரை இசைக்கிறேன். முற்றிலுமாக அது அவசியமில்லை அல்லது தேவையில்லை, ஆனால் மரங்களின் கீழ் பாய்ந்தோடுகின்றன எண்ணங்கள் ஒரு இதமான மெல்லிய இசை போல. நாளுக்கு நாள் அதீதப் பிரியங்கள் ஊற்றெடுக்கின்றன. எண்ணற்ற பொத்தான்களுடன் தண்ணீரை இசைக்கிறேன், அது முற்றிலும் அவசியமில்லை, விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால் அதை நான் நேசிக்கிறேன் ஆகவே என் கால்விரல்களை இந்த இளகிய புவி மீது நிலைப்படுத்தி …

பயங்கரக் கதை

கார்மன் மரியா மச்சாடோ     அது மிகச் சிறியதாகவே துவங்கியது: மர்மமாய் அடைத்துக் கொண்ட சாக்கடை; படுக்கையறை ஜன்னலில் விரிசல். அப்போதுதான் அந்த இடத்துக்குக் குடி போயிருந்தோம், சாக்கடை ஒழுங்காக வேலை செய்து கொண்டு இருந்தது, கண்ணாடி முழுசாக இருந்தது, அப்புறம் பார்த்தால் ஒரு நாள் காலை அவை அப்படியில்லை. என் மனைவி ஜன்னல் கண்ணாடியின் விரிசலை தன் விரல் நகத்தால் மெல்லத் தட்டினாள், யாரோ ஒருவர் உள்ளே விடச் சொல்லித் தட்டுவது போல் அது …

விஞ்ஞானப்புனைவு: சில விளக்கங்கள்

  – மைக் ரெஸ்னிக்   சமீபத்தில் நான் ஒரு பல்கலைக்கழக வானொலி நிலையத்தில் ஒரு நேர்காணல் கொடுத்தேன். அப்போது என்னை எதிர்கொண்ட ஒரு பேராசிரியர், விஞ்ஞானப் புனைகதையின் இலக்கணம் தனக்கு மட்டுந்தான் தெரியும் என்றும், ஏதாவது ஒரு படைப்பு தனது வரையறுக்குள் பொருந்தவில்லை என்றால், அது விஞ்ஞானப் புனைகதையே அல்ல என்றும் வாதாடினார். நல்லது! அவர் தன் வரையறையில், அது என்னவாக இருந்தாலும் சரி, மிகச் சந்தோசமாக இருந்தார். ஆனால் அந்த வகையில் அவர் முதல் …

தடைகளைக் கடந்து வெளிவந்திருக்கும் மராத்தியத் திரைப்படம் ‘தஷ க்ரியா’

http://https://youtu.be/0ZwlymMjolg   – தாமினி குல்கர்னி     வலதுசாரி இந்துக்குழுக்கள், சஞ்சய் லீலா பன்சாலியின் வரலாற்று காவியமான பத்மாவதி திரைப்படத்தை திரையிடுவதற்கு பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் மேலும் ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சந்தீப் பட்டில் இயக்கியுள்ள ‘தஷ க்ரியா’ என்னும் மராத்திய திரைப்படம், சிறந்த திரைப்படமென விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மையக்கரு, கிர்வந்தா பிராமணிய சமூகத்தினர், இந்துமக்களின் அந்திமக்கால ஈமச்சடங்குகளில் எவ்வாறெல்லாம் அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுகின்றனர் என,  பான்யா என்ற சிறுவன் கதாபாத்திரம் மூலமாக தஷ க்ரியா படத்தில் …

கவிதைகள் : மணற்காடர்

என்ன வேண்டுமெனக் கேட்டார் கடவுள், முதல் ஒரு வீடு தாரும் என்றேன். தருகிறேன் மனிதா என்று சொல்லிவிட்டுத் சட்டெனத் தலைமறைவாகிப் போனார் அடுத்து ஒரு நாடு வேண்டுமெனக் கேட்பேனெனப் பயந்தார் போலும்.   *******   தென்னை மர நிறத்தில் பாவாடை கட்டிக்கொண்டு நிற்கும்போது அவள் மிக அழகாக இருப்பாள் இதை ஒரு நாள் அவளுக்குச் சொல்லவேண்டும். காதலித்துத்தான் சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை கடைத் தெருவில் காணும்போது சொன்னாலே போதும்.   *******   பொன்னார் மேனியனே என்று …

கவிதைகள் : அதீதன் சுரேன்

பூமராங்   இந்த மொழி யாருடையது தன் தடமழித்துப் போனவன் விட்டுச் சென்றிருக்கக்கூடும் இந்தக் குரல் யாருடையது நெடுங்காலம் மௌனித்திருப்பவர்களின் பாடலாய் இருக்கலாம் இந்த மழை யாருக்காக நிலம் வெடித்துக் காத்திருக்கும் உழவுக்காயிருக்கும்   நான் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன் புதிரின் சுவடுகளையும் நிசப்தத்தின் ஆழங்களையும் நதிகளின் கேவல்களையும் மற்றும் உலகின் அந்தரங்கங்களையும்   யாரும் அறிந்திடாத ஒரு நாளில் இன்னும் கண்டுபிடிக்கபடாத பிரபஞ்சத்தில் காலம் தொலைந்து போன வேளையில் என்னை ஒளித்துக் கொள்வேன்   பதுக்கி வைத்திருக்கும் …

மழை வலுத்துப் பெய்கிறது

மழை வலுக்கத்தொடங்கிவிட்டது. இரவுகளின் மேல் பெய்கிற மழைக்கென்று எப்போதும் தனித்த குரலொன்று இருக்கவே செய்கிறது. அது ஒரு துயரத்தை திரித்தூண்டிவிடவோ, சொல்ல மறந்த அல்லது சொல்வதற்கான சாத்தியங்கள் இருக்கும் போதே காலாவதியான சொல்லின் வீரியத்தைப் பற்றியோ, கடிகார நொடி முட்களின் சத்தங்களை மீறி நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. நனைதலற்ற மழையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறதென்ற கேள்வி விழும் போதெல்லாம் அது எடுத்துத் தருகிற சூட்டில் உடனிருக்கிற ஸ்பரிசத்திற்கு என்ன பெயர் வைப்பது. எப்போதும் அலுத்து, சலித்துத் திரும்பும் …

‘மோகனாங்கி’ தமிழின் முதல் வரலாற்று நாவல்

எஸ்.சத்யதேவன்   “மோகனாங்கி நாவல்தான் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களினதும் இலக்கியத் திறனாய்வாளர்களும் முடிவாகும்”1 என்று முருகேசு ரவீந்திரன் மிகச் சுலபமாக குறிப்பிட்டுச் செல்கிறார். இன்று தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி என்று உறுதிப்பட்டுவிட்டது. ஆயினும் ‘மோகனாங்கி’ தமிழின் முதல் வரலாற்று நாவல் என்ற இடத்தை அவ்வளவு சுலபமாக அடையவில்லை. தமிழ் இலக்கியத்தில் நவீன சிந்தனைகளின் தொடக்கமாக அமைந்த தொடக்ககால நாவல்கள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலானோர் ‘மோகனாங்கி’ தொடர்பில் ‘முதல் …