எஸ்போஸின் கவிதைகள்

என்னைப் பேசவிடுங்கள் – 03 பிரிந்தன் கணேசலிங்கம் மனிதர்கள் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் கனவு முடிவில்லாத வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற …

கவிதைகள் : ஆகி

  புதர்கள் அறையினுள் காடா வளர்ந்துள்ளது அவள் அதைச் சொல்லும்போது அதை நான் நம்பவில்லை அவள் அதை சொல்லவில்லை அதை எப்படி சொல்வது அவள் அதை நேரடியாக சொல்லவில்லை என்று சொல்லலாம் தனையறியாது வரையும் முகபாவமாக வாய்தவறி உதிரும் வார்த்தைகளாக அவள் அதை நுட்பமாக வெளிப்படுத்தி அது எனது நனவிலியில் புலனாகியும் நான் அதை நம்பவில்லை அவளுள் இருந்த கட்புலனாகா முட்புதர்க் காடு கட்புலனாகும் வரை இந்தக் காடு அவளுடையதில்லையாம் என்னால் நம்பமுடியவில்லை அவள் சொல்லில் மெய்மையும் …

கவிதைகள் : பூவிதழ் உமேஷ்

மீன்கள் நீரின் சாயலில் ஒரு பெண் மணலாற்றில் நடக்கிறாள் கூந்தலில் பெருகிய நதியில் அவள் காலடித் தடங்கள் மீன்களாகி நீந்துகின்றன.   ஓய்வு எண்களை மட்டுமே சேகரமாக வைத்திருக்கும் கணக்கு மாஸ்டருக்கு பசி எடுத்தால் இரண்டு பூஜ்யங்களைத் தின்பார் வெயில் நேரங்களில் ஐஸ் போல ஒன்பதை எடுத்து சப்பியபின் குச்சி போல “ஒன்றை” எறிவார் பார்வை மங்கிவிட்டதால் “எட்டை” கண்ணாடி போல அணிகிறார் குளித்துக் களையவிட்ட கூந்தலுக்கு ஹேர் கிளிப்பாக பேத்தியிடம் இருக்கு “மூன்று” விளையாட்டில் வேடிக்கையில் …

மூன்று கவிதைகள் : றபியுஸ்

அரபிய நகரத்தில் பெய்யும் பனி பற்றிய மூன்று பிரதிகள் எழுதுவதற்கு சாத்தியமற்ற ஒன்றை எழுதுவதற்கு பிரயத்தனம் கொள்கின்ற போது அந்த எத்தனிப்பு ஆட்கொள்ளும் நேரங்களின் உணர்வுகள் மிகக் கடினமானது. அதை யாரும் அவ்வளவு இலகுவில் கடந்திருக்க மாட்டார்கள். அந்த நேரங்களில்தான் பூக்கள் என்னுடன் பேசுவதும், நான் நிலவை கண்ணாடித் துண்டுகளாக உடைப்பதும். இந்த அந்திகாலப் பனியும் கணக்கற்ற யுகங்களாய் எழுத முடியாமல் போன கவிதையின் ரகசியங்களை உடைக்கிறது. பனிக்காலத்தின் தனிமையின் விறைப்பு பற்றி உனக்குத் தெரியும். அதன் …

கவிதைகள் : ஸ்ரீதர்பாரதி

கோழிக்குழம்பின் வாசனை வடபழநி AVM ஸ்டுடியோவுக்கு எதிர்சந்தில் ஒரு பாடாவதி மேன்ஷனில் வசிக்கிற Mr.X சென்னைப் பெருநகரத்தில் திரைப்பட உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் ஒரு ஞாயிறன்று மேன்ஷனுக்கு அருகிலுள்ள காரைக்குடி செட்டிநாடு மெஸ்சிலிருந்து கிளம்பிய கோழிக்குழம்பின் வாசனை அதிகாலையில் அரைத் தூக்கத்திலிருந்த அவரை கிறங்கடித்து அவரது சொந்த ஊரான சேடபட்டிக்கு அழைத்துச் சென்றது அதுமாத்திரமில்லாது Mr.பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்திற்கும் அழைத்துச் சென்றது வைக்கோல் போர் மீதேறி கோழி பிடிக்கும் Mr.சப்பாணி(எ) கோபால கிருஷ்ணனையும் தன் வீட்டுக் …

கவிதைகள் : வான்மதி செந்தில்வாணன்

  பாலைக் கப்பல் ஏ குறுநிலத்தானே…. என் வற்றிய ஆடுகள் உன் வெற்று நிலத்தில் மேய்ச்சலுக்கு அலைகின்றன. அன்று விதையென நீ தூவிய பதர்கள் காற்றுக்கு இரையாயின. தகதகக்கும் சூரியக் கதிர்கள் மண் தொடுகையில் தெறிக்கிறது சுடுமணம். மேய்ச்சல் பறவைகள் வெறுநில மண்கிளறி களைத்துச் சோர்கின்றன. உன் வறள்நிலம் முழுக்க ஆங்காங்கே காற்றிசைக்கும் நெகிழிகள் கூடாரமிட்டுக் குவிந்திருக்கின்றன. அதுசரி உன் மேய்ச்சல் பசுக்கள் எப்போது கழுதைகளாயின? சுவரொட்டிகளைத் தின்று பருத்துக் கிடக்கின்றன அவற்றின் வயிறுகள். அவை அசைபோடுவதை …

கவிதைகள் : அகமது ஃபைசல்

இந்தக் கவிதையை ஆயிரம் வருடங்களுக்குப் பின் வாசிக்கவும் அழகிய கடல்தனை இப்படி சீர் குலைக்கலாம் தொலைபேசியை எடுக்க மறந்து ஒரு அலை திரும்பிச் செல்கின்றது. ** என் மகன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு பாடசாலை செல்ல தயாராகின்றான். நான் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பார்க்க வீட்டில் கடிகாரமில்லை. ** ஆறு நீரின்மேல் ஓடிக்கொண்டிருக்கிறது மீன்கள் நீருக்குள் இறங்கி ஆற்றில் பயணம் செய்கின்றன. ** கூட்டமாக பறக்கிறபோது ஒரு பறவைக்கு இன்னொரு பறவை இப்படியும், அப்படியும் குறுக்கும்,நெடுக்குமாக பறந்து …

புத்தரின் இசை மற்றும் குற்றவுணர்வு

– ச. சாதனா சில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம்  குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள். ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது …

கவிதைகள் : மஹாரதி

1 இரவின் கதவுகளை அடுத்தடுத்து திறந்து திறந்து செல்லச்செல்ல மிச்சம் இருப்பது இரவும் இரவின்மேல் உறங்கும் இரவும்.     2 யாரோ ஒருவனை யாரோ ஒருவன் ஏதோஓர் இரவில் தேடிப்போன தேடலின் முடிவில் தேடிப்போனவன் தேடப்பட்டவனாய் மாறிப்போனான்.     3 உபன்யாசம் ஆரம்பம் குறுக்குநெடுக்குமாய் ‘மியாவ்’ என்று போனது பூனை தூணில் கட்டப்பட்டது சாமியார்கள் மாறினர் மடம் மாறியது உபன்யாசம் மாறியது தூணில் பூனை இன்னும் ‘மியாவ்’ என்றுதான் கத்திக்கொண்டிருக்கிறது       …

கவிதைகள் : ரோஸாவசந்த்

  மறதி   கார்களுக் கிடையே கடந்து போனவனுக்கு கார்களுக் கிடையே கடக்கும் கர்வம். கார்களுக் கிடையே ஓடிய நாய்க்கு கார்களுக் கிடையே ஓடும் பீதி. கார்களுக் கிடையே பறந்த தட்டானுக்கு கார்களை பற்றிய பிரஞ்ஞையில்லை.   தட்டான் குறித்த நம் கற்பிதம், பறப்பதன் அற்புதம், turbulenceஇன் மர்மம், காலங்காலமாக கைமாற்றி காத்து செல்லும் ரகசியம் எது குறித்தும் தட்டானுக்கு பிரஞ்ஞையில்லை. turbulenceஐ முழுசாய் விளக்க நூற்றாண்டாய் தூக்கம் கெட்டவனுக்கு தட்டானைப் போல பறக்க வைக்க தெரியவில்லை. …