பால்ஸாக்

சமூகத்தை எழுதிய பால்ஸாக்குக்கு பொருட்களை உடமையாக்கிக் கொள்ளுதல் ஒரு மையக்கருவாய் உள்ளது. ஆனால் தொல்கதைகளை எழுதிய பால்ஸாக்குக்கு பொருளிழப்பு ஒரு மையக் கருவாய் உள்ளது - எப்போதும் அருகே இருந்தாலும் கைகளுக்கு அப்பால் சற்றுத் தொலைவில் இருக்கும் கனிகளை ஒருபோதும் தொட முடியாது என்று சபிக்கப்பட்ட டான்டாலஸ்தான் அந்த தொன்மம். "ரத்தமற்ற, வெம்மையற்ற, சன்ன நிழலே, பார் உன் தாகமே வாதையாகிறது," என்று எழுதினான் க்விவோடோ, மரணத்தின் வசீகரத்தில். ஆனால் பால்ஸாக் ஒரே சமயம் அத்தொன்மத்தை நோக்கியும் அதை விட்டு விலகியும் செல்கிறார். அருகில் செல்லும்போது நாம் சமூக நடவடிக்கைகளைப் பார்க்கிறோம். விஷம் தடவிய பரிசு போல் காட்டுக் கழுதையின் தோலை அடையும் நாயகன் ரஃபேல் டி வாலண்டைன் ஒரு சூதாட்டக்காரன். வாழ்க்கை எனும் சூதாட்டக் களத்தில் வாழ்வும் மரணமும் மட்டுமே பணம் கட்டத் தகுந்த எண்கள் என்பதுதான் அவன் வைக்கும் பந்தயம். வாழ்வு மரணம் எனும் ரூலெட் சக்கரம் நமக்குப் பொருள் தருகிறது, தந்ததை எடுத்துக் கொள்கிறது. பால்ஸாக்கின் சமூக உலகில், நீ யாரென்பதை உன் உடமைகளே தீர்மானிக்கின்றன.

This content is for Unnatham Paid User members only.
Log In Register