வேர் கொண்டிருத்தல் : முன்னோரை அஸ்திவாரமாய்க் கொள்ளுதல்

- டோனி மோரிசன்

கருப்பு இலக்கியம் என்பது கருப்பர்களால் எழுதப்பட்டது மட்டுமே என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை; அல்லது கருப்பர்களைப் பற்றி எழுதப்பட்டது மட்டுமே என்றோ, அல்லது ‘ஜி’ என்னும் எழுத்து தவிர்க்கப்பட்ட ஒரு விதமான மொழியைக் கையாண்டு எழுதப்பட்டது என்றோ நான் கருதவில்லை. அது ஒரு விதத்தில் பிரத்யேகமானதும் அடையாளம் காணப்படக் கூடியதுமாகும். அப்படி அடையாளம் காணப்படக் கூடிய அதே நேரத்தில் நழுவிச் செல்லக் கூடிய ஒரு நடையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நட்புக்காகவும் மேலும் சாத்தியமானவரையிலும் ஒரு மனிதனைத் தேடி…

-எம்ப்பார் மோலிநெர்

ஒரு ஆண் நண்பன் என்பவன் அவ்வப்போது உன்னை ஈப்ரோ நதிக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அனைத்து ஆண் நண்பர்களும் தங்கள் தோழிகளை அழைத்துச் செல்வதுண்டு. எனவே எனக்காக ஏதாவது செய்வதற்கு ஒரு டேட்டிங் ஏஜென்ஸியைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தேன்...

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நரகத்தின் தொடர்ச்சி

- ஆண்ட்ரூஸ் நியூமன்

என் தந்தை மருத்துவமனையில் இருந்த பொழுது, மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்துவது உசிதமாகப் பட்டது. நுழைவாயிலின் சிறிய பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து, என் வெண்மைநிற ஓப்பல் காரைச் சரிவுப் பாதையில் இறக்கினேன். முடுக்கத்தை மெதுவாகக் குறைத்து, உணவகத்தின் கீழ், நிறுத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடினேன். எனக்கு எப்பொழுதும் ஒரு இடம் கிடைத்து விடுகிறது...

This content is for Unnatham Paid User members only.
Log In Register

எப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..

எட்வர்ட் மார்க்வெஸ் நேர்காணல்   கேத்தலோனிய எழுத்தாளரான எட்வர்ட் மார்க்வெஸ் Zugzwang (1995) எழுதுவதற்கு முன் ஸ்பானிய மொழியில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். Zugzwang ஸ்பானிய கேத்தலோனிய மொழியில் அவருடைய முதல் படைப்பு, இந்த நுண்புனைவின் ஆதாரமும் கூட. Zugzwang -ன் சுருக்கமான பகுதிகள் Bomb, The Brooklyn Rail மற்றும் Chicago Review போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவர் கேத்தலோனிய மொழியில் எழுதுவதைத் தொடர்ந்தபடி, மற்றொரு சிறுகதைத் தொகுப்பையும், பனிரெண்டு சிறுவர் புத்தகங்களையும் நான்கு நாவல்களையும் …

நுண்புனை கதை : தனிமை

- எட்வர்ட் மார்க்வெஸ்

ஜூக்ஸ்வேங்: சதுரங்க விளையாட்டில் காய் நகர்த்துவதில் நிகழும் சாதகமற்ற நிலை. எட்வர்ட் மார்க்வெஸ் இந்தச் சொல்லை “சிறந்தவை என நிரூபிக்கும் தூண்டுதல்களையும் சூழ்நிலைகளையும் சார்ந்துள்ள” அவருடைய பாத்திரங்களுக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும்…

வில்லியம் டால்ரிம்பிள் உடன் ஒரு நேர்காணல்   – கால் ஃப்ளைன்   இந்தியாவில் வசிக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளரான வில்லியம் டால்ரிம்பிள், புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர். சண்டே டைம்ஸ் வழங்கும் இளம் பிரிட்டிஷ் எழுத்தாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஜெய்ப்பூரில் நடத்தப்படும் இலக்கியவிழாவின் இணை இயக்குனர். இந்தியா குறித்து ஐந்து நூல்களைப் பரிந்துரை செய்யும் இவர், விவிலியத்தைப் போல எட்டு மடங்கு நீளம் கொண்ட மகாபாரதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய இலக்கியத்தில் ஒன்றாகும் – ஒவ்வொன்றும் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே நன்றாக இருக்கிறது’ …

கதையா, கட்டுரையா, உண்மை வாழ்க்கையா?

- கிறிஸ்டன் ருபேனியன்

"இணைய தளத்தில் ஏற்பட்ட மோசமான ஒரு சந்திப்பு இந்தக் கதையை எழுதத்தூண்டியதாக நியூயார்க்கர் பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கதையை எழுத எவ்வளவு காலம் ஆனது?"

"அந்தச் சந்திப்பு நடந்தவுடனேயே ஒரு வாரத்தில் எழுதி விட்டேன்..."

This content is for Unnatham Paid User members only.
Log In Register

அஹ்மத் ஃபரஸ் கவிதை

விழி வங்கி  – அஹ்மத் ஃபரஸ்   இந்தத் துயரம் நிரம்பிய பார்வையைப் பார்த்து நடுங்குகிறேன் பார்வையின் இந்தத் தாபம் போல் இன்னமும் எவ்வளவுதான் இருக்கின்றன யாருடைய நிலப்பரப்பில் அவதானிப்பின் பொக்கிஷம் இல்லை யாருடைய விதியில் காண்பதற்கு கொண்டாட்டமில்லை, இறைதூதருமில்லை கிரணங்கள் பாய்ந்தோடுவதைக் காண யார் தகிப்பது பாதையைத் தேடும் வெளிச்சம் அதுவல்ல என யார் கூறுவது என் விழிகளைப் பெற்றுக் கொள்ள அவர்களிடம் கூறுங்கள் என் உடல் அதன் துடிப்பை நிறுத்துவதற்கு முன் இந்த அழுக்கு …

மூளையில் புதைந்து கிடக்கும் பல்லாயிரம் கோடிக் கதைகள்

-பெஞ்சமின் எற்ளிக்

“புனைவென்பது உண்மையில் இருந்து விலகி நிற்கும் இன்னோர் உலகம்” என்றுதான் நாம் கருதிவருகிறோம். ஆனால் நவீன நரம்பியலின் தந்தை (The Father Of Modern Neuroscience) என்று எல்லோராலும் அழைக்கப்படும் சான்டியாகோ ரமோன் யி கஹால் (Santiago Ramón y Cajal) புறநிலை உண்மைகளை அறியும் கருவிகளாகப் புனைவுகளைக் கருதினார். நரம்பு இழைகள் என்பவை யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிர்ப்பாதைகள் என்று சக உடற்கூறியலாளர்கள் பலரும் நம்பிக்கொண்டிருந்தபோது, கஹால் அவற்றைத் தன் நுண்ணோக்கியில் வைத்து நாட்கணக்கில் ஆராய்ந்து கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளுக்கு மாறாக, மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் முழுவதுமே ந்யூரான் (neurons) எனப்படும் சின்னஞ்சிறு செல்களாலானது என்றும், அவற்றுக்கு இடையிலான மிகச்சிறிய இடைவெளிகள் (synapses) மூலம் அவை ஒன்றோடொன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன என்றும் ஒரு கோட்பாட்டை உருவாக்கி அறிவித்தார். மூளையானது குழைவியல்பு (plasticity) கொண்டது என்பதை முதன்முதலாக உலகிற்கு அறிவித்த அவர், இன்று நாம் பேசிவரும் “மூளையை வலுப்படுத்த உதவும் பயிற்சிகள்” பற்றியெல்லாம்கூட அன்றே கணித்துச் சொல்லியிருக்கிறார். “யாரொருவன் தீர்மானமாய் இருக்கிறானோ, அவன் தன்னுடைய மூளையைச் செதுக்கும் சிற்பியாகிறான்.” என்பது கஹாலின் பிரபலமான கூற்றுகளில் ஒன்று.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

ஆறு நுண் புனைகதைகள்

– ஃபெலிக்ஸ் க்ரிவின்   உக்ரைனில் பிறந்த எழுத்தாளர் ஃபெலிக்ஸ் க்ரிவினின் “கூர்மையான முரண்நகை மற்றும் கசப்பான நகைச்சுவை மூலம் வெளிப்படும்” புனைகதைகள் “பெரியவர்களுக்கான விநோதப் புனைவுகள்” என விவரிக்கப்படுகின்றன. அவை “வியப்பூட்டும் ஒளியுடன் பளிச்சிடுகின்றன.” க்ரிவின் அவற்றை “பாதி-தொன்மங்கள்” என அழைக்கிறார், “இரண்டு பாதிகள்: மெய்மையும் தொன்மமும்” உள்ளடங்கியவை. திட நம்பிக்கையின் ஆற்றல் கதவு திறந்திருக்கும் பொழுது, கதவின் கைப்பிடி மிகுந்த பிரக்ஞையுடன் அவதானிக்கிறது, “அறை திறந்திருக்க வேண்டும்.” கதவு மூடப்பட்டிருக்கும் பொழுது, அது அமைதியாக …