என் சகோதரியை நான் மெச்சுகிறேன்..

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும் நான் நினைக்கவில்லை அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான் அப்பாவையும் போலத்தான் அவரும் கவிதைகள் ஏதும் எழுதுவதில்லை எனது சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான் மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன் எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட செத்துப் போவதையே விரும்புவார் இது – ஏற்கனவே நிலவும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது – எனது சொந்தக்காரர்கள் …