என் சகோதரியை நான் மெச்சுகிறேன்..

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும் நான் நினைக்கவில்லை அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான் அப்பாவையும் போலத்தான் அவரும் கவிதைகள் ஏதும் எழுதுவதில்லை எனது சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான் மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன் எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட செத்துப் போவதையே விரும்புவார் இது – ஏற்கனவே நிலவும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது – எனது சொந்தக்காரர்கள் …

அவள் என்னிடம் சொல்வதுண்டு

ஃபேத்தி சாஸ்ஸி   கடல் நீலம் தவிர சோர்வு எதுவும் இல்லை உன் கண்களில்; அவள் என்னிடம் சொல்வதுண்டு… : என் விரல்களில் இரவு பளிச்சிடும் பொழுதுகளில். உன் உதடுகளில் ஒரு மஞ்சள்நிற நட்சத்திரத்தைப் பதிகிறேன், அதனால் நிழல் தெளிவாய் எழுந்து என் வாசனையிலிருந்து சீறுகிறது. அவள் என்னிடம் சொல்வதுண்டு… : உன் கண்கள் காமமுற்ற தீயதை நோக்கிச் செல்கின்றன; எனக்காகச் சாசுவதக் கதவுகளைத் திறந்தவாறு, என் சுருட்டைமுடிகளின் மீது மேகம் பொழியும் வரை. காற்றின் கிளைகளின் …

ஸாப்போ கவிதைகள்

முதல் பெண் கவியாகவும் முதல் லெஸ்பியன் கவியாகவும் முதல் நவீன கவியாகவும் 9 கவிதைத் தேவதை(Muses)களுக்குப் பின் பத்தாவதானவளாகவும் பாராட்டப்படுபவள் ஸாப்போ. பண்டைய கிரேக்கத்தில், கி.மு. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஹோமர் என்ற இதிகாசக் கவி. பின்பு, 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாள் ஸாப்போ என்ற தன்னுணர்ச்சிக் (Lyric) கவி. லிரிக் கவிதையை Tyrtaeus (7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி), Solon (640-560), Alcman (7ம் நூற்றாண்டு) சிறப்பாக்கியவர்கள். ஆனால் 600ல் ஆசியாமைனரை அடுத்திருக்கும் லெஸ்போஸ் தீவில் வாழ்ந்த இரு …

ஊர்ஸுலா லா குன் கவிதைகள்

தோல்   “நம்மைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருப்பது தோல், நமது உடல்களை  உள்ளே பத்திரப்படுத்த உதவியபடி.”   எனக்கு அந்தக் கவிதையை அறுபது வருடங்களாகத் தெரியும். முதலில் தோன்றியதைவிட அதனிடம் மேலும் அதிகம் உள்ளது.   நாம் தோல்களற்றவர்களாக இருந்தால், ஒரு மேகத்தைப் போல, மானுடத் திரள்களில் கரைந்து விட மாட்டோமா?   நமது சிறு உடல்கள் கடலைவிட அதிக எல்லையற்றவையாக இருக்காதா,   மற்றும் வளிமண்டலம் போல் காற்றுக்குமிழியாக இருக்காதா? இங்குள்ளது போல் அங்கும் நாம் இருப்போமா? …

மாமா ஸோல்டன், காலப் பயணி

  ஜோர்ஜ் ஸிர்டெஸ்     1 எனது குடும்பத்தினர் அனைவரும் காலத்தினூடே பயணிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் எனக் கூறினார் மாமா ஸோல்டன். இரவில் அலாரம் கடிகாரத்தை அமைப்பது ஆபத்து நிறைந்ததாக இருந்தது.   2 அலாரம் கடிகாரங்கள் வருவதற்கு முன், தோட்டத்துச் சேவலுக்கு ஏற்பாடு செய்வோம். அது பல குரலொலிகளை எழுப்பும், ஆனால் பொதுவாகப் பிழைத்துக் கொள்கிறது என்றார் மாமா ஸோல்டன்.   3 1526 முதல் 1789 வரை செல்வதற்காக காலை முதல் அந்தி …

ஆக்டேவியா பாஸ் கவிதைகள்

பாலம் இந்தக் கணத்திற்கும் இந்தக் கணத்திற்கும் இடையே, நானாக இருக்கும் எனக்கும் நீங்களாக இருக்கும் உங்களுக்கும் இடையே, வார்த்தைப்பாலம். அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் உங்களுக்குள்ளாகவே நுழைகிறீர்கள். உலகம் இணைக்கிறது. ஒரு வளையம் போல மூடிக்கொள்கிறது. ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எப்போதுமே உடலொன்று நீட்சியாகியிருக்கிறது : வானவில். அதன் வளைவுகளுக்கடியில் நான் உறக்கம் கொள்வேன்.     தெரு இதோ, நீண்ட அமைதியான ஒரு தெரு. நான் மையிருளில் நடந்து, தடுமாறி விழுகிறேன் மீண்டும் எழுந்து, …

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதைகள்

குளிர்காலத்தின் வருகை     காற்றால் ஒருமித்து உக்கிரமாகத் தாக்கப்பட்டன பாதி உரிக்கப்பட்ட மரங்கள், அனைத்துக்கும் வளைந்து கொடுத்து, உலர்ந்து கலக்கமுற்ற இலைகள் உதிர்ந்து விட மறுக்கின்றன அல்லது கடும் மழை போல் ஊக்கமடைந்து ஒரு புறமாகச் சினத்துடன் பிரவகிக்கின்றன பூஞ்செடிகள், கடுஞ்சிவப்பு வண்ணம் – எப்பொழுதும் இலையின்றி இருப்பது போலிருந்த – வெறுமையான தோட்டத்தின் வரப்பில் வீழ்கின்றன.       தமிழில்: மோகன ரவிச்சந்திரன்   வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்: உலகப் புகழ்பெற்ற கவிஞர், …

ஜுலியோ கொர்த்தஸார் கவிதைகள்

  ஒரு காதல் கடிதம்   உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் இறுதியாக மிகக் கொஞ்சம்   ஏனெனில், இறுதியாக அனைத்தும்   அருகில் சென்று கொண்டிருக்கும் ஒரு நாயைப் போல, அல்லது ஒரு குன்று, அந்த அர்த்தமற்றவைகள், லெளகீகம், கோதுமைக் காது, நீண்ட கூந்தல் மற்றும் இரண்டு சர்க்கரைக் கட்டிகள், உன் உடலின் வாசனை, என்னிடம் அல்லது எனக்கு எதிராக நீ கூறியது எதுவாக இருந்தாலும்,   மிகக் கொஞ்சமான அனைத்தும் உன்னிடமிருந்து எனக்கு வேண்டும் ஏனெனில் …

எட்கர் ஆலன் போ கவிதைகள்

ஒரு கனவுக்குள் ஒரு கனவு   புருவத்தின் மீதான இந்த முத்தத்தை எடுத்துக் கொள்! பிறகு, இப்போது உன்னிடமிருந்து விடைபெறுதலையும், இவ்வாறு ஒப்புக் கொள்கிறேன் – உன்மீது தவறில்லை, யார் கருதியது எனது நாட்கள் ஒரு கனவென்று; இன்னும் எதிர்பார்ப்பு தூரப் பறந்தால் ஒரு இரவில், அல்லது ஒரு நாளில், ஒரு பார்வையில், அல்லது இன்மையில், ஆகவே சற்றுக் குறைவானது ஓடி விட்டதா? நாம் காணும் அல்லது தோன்றும் அனைத்தும் ஒரு கனவுக்குள் ஒரு கனவு.   …

இம்மானுவேல் மிஃப்சுத் கவிதைகள்

இம்மானுவேல் மிஃப்சுத்   நீ உறங்குவதற்கு முன் ஒரு கவிதை   நான் உன்னைப் பார்த்ததிலிருந்து, நீ நான் பார்த்த நீ அல்ல. பட்டாம்பூச்சிகளின் பெருந்திரள் ஒரு இலக்கு இல்லாமல் ஒன்றுகூடிப் பறந்து செல்வதை நான் பார்க்கிறேன்; கடலைத் தழுவும் மணலின் நீண்ட பரப்பைப் பார்க்கிறேன்; முடிவாக என்னைக் காதலிக்கத் துவங்கிய அந்தக் காற்றைப் பார்க்கிறேன்: நான் பார்வையிட்ட நகரங்கள் மற்றும் நான் சுற்றித் திரிந்த சாலைகள்: ஒன்றன் பின் ஒன்றாகப் பூக்கும் மலர்கள். மேலும் இப்போது …