ஆச்சரியம்

- லில்லி பாட்பரா

அலென்கா அதைப் பார்க்கிறாள். பிறகு அவளுடைய அப்பாவைப் பார்க்கிறாள். அவள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை உணர்கிறாள். ஆனால் அவளுடைய வயிற்று வலி மேலும் வேதனை கொள்ள வைக்கிறது. அவள் அந்தச் சைக்கிளைத் தொடுகிறாள். குளிர்ச்சியான உலோகத்தின் ஸ்பரிசம் சற்று வலியைத் தருகிறது..

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நட்புக்காகவும் மேலும் சாத்தியமானவரையிலும் ஒரு மனிதனைத் தேடி…

-எம்ப்பார் மோலிநெர்

ஒரு ஆண் நண்பன் என்பவன் அவ்வப்போது உன்னை ஈப்ரோ நதிக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அனைத்து ஆண் நண்பர்களும் தங்கள் தோழிகளை அழைத்துச் செல்வதுண்டு. எனவே எனக்காக ஏதாவது செய்வதற்கு ஒரு டேட்டிங் ஏஜென்ஸியைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தேன்...

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நரகத்தின் தொடர்ச்சி

- ஆண்ட்ரூஸ் நியூமன்

என் தந்தை மருத்துவமனையில் இருந்த பொழுது, மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் என் காரை நிறுத்துவது உசிதமாகப் பட்டது. நுழைவாயிலின் சிறிய பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து, என் வெண்மைநிற ஓப்பல் காரைச் சரிவுப் பாதையில் இறக்கினேன். முடுக்கத்தை மெதுவாகக் குறைத்து, உணவகத்தின் கீழ், நிறுத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடினேன். எனக்கு எப்பொழுதும் ஒரு இடம் கிடைத்து விடுகிறது...

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நுண்புனை கதை : தனிமை

- எட்வர்ட் மார்க்வெஸ்

ஜூக்ஸ்வேங்: சதுரங்க விளையாட்டில் காய் நகர்த்துவதில் நிகழும் சாதகமற்ற நிலை. எட்வர்ட் மார்க்வெஸ் இந்தச் சொல்லை “சிறந்தவை என நிரூபிக்கும் தூண்டுதல்களையும் சூழ்நிலைகளையும் சார்ந்துள்ள” அவருடைய பாத்திரங்களுக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

மூசா 

- காமெல் தாவுத்

மதிப்பிற்குரிய துப்பறிவாளர் அவர்களே! ஒரு புத்தகத்தில் மட்டுமே நடந்ததாக அறியப்படும் குற்றத்தைப் பற்றி நான் வேறு என்ன கூற முடியும்? எனக்கு அந்தக் கொடூரமான கோடைக்காலத்தின் குறிப்பிட்ட நாளில், மூசா இறந்ததாக அறியப்படும் நேரமான காலை 6 மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரையிலும் என்ன நடந்ததென்று சத்தியமாகத் தெரியாது. மூசா கொலை செய்யப்பட்ட பிறகும் கூட யாரும் எந்த வகையிலும் எங்களை விசாரிக்க வரவில்லை. உண்மையில் அந்தக் கொலையைப் பற்றி தீவிரமான விசாரணை ஒன்றும் நடைபெறவில்லை. அன்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நினைவில் வைத்திருப்பதே எனக்கு ஒரு பெரும்பாடாக இருக்கிறது. கொலை நடந்த அடுத்த நாள் காலை பொதுவாக வீதியில் வலம் வரும் கதாபாத்திரங்கள் எழுந்து நடமாடத் தொடங்கியிருந்தன.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

நன்றி

- அலெஹாந்த்ரோ ஸாம்ப்ரா

மெக்சிகோ சிட்டி சப்வேயில் அடிக்கடி நடப்பது போல், இடையிலுள்ள ஒரு நிறுத்தத்தில், ரயில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறது, புரிந்து கொள்ள முடியாதபடிக்கு ஆறு அல்லது ஏழு நிமிடங்கள், இது வழக்கம்தான் என்றாலும் கால தாமதம் அவர்களை வதைக்கிறது, உள்நோக்கம் கொண்டதாகவும் தேவையற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது, கடைசியில் கதவு மூடிக் கொள்கிறது, ரயில் நகரத் துவங்குகிறது, அவர்கள் இறுதியில் தங்கள் நிறுத்தத்தை அடைகிறார்கள், அதன் பின் இருவரும் அவள் வசித்துக் கொண்டிருக்கும் வீட்டை அடையும் வரை நடந்து செல்கிறார்கள்.

This content is for Unnatham Paid User members only.
Log In Register

முதலாம் இலக்கச் சிறை

சிமமண்டா அடிச்சி   முதன் முறையாக எங்களது வீட்டில் திருடியவன் எமது அயல்வீட்டைச் சேர்ந்த ஒஸிட்டா. சமையலறை ஜன்னலூடாக ஏறிப் புகுந்து எங்களது தொலைக் காட்சி, வீடியோ பார்க்கும் கருவியுடன்  அப்பா அமெரிக்காவிலிருந்து வரும்போது கொண்டு வந்த “Purple Rain” “Thriller”  ஆகிய படங்களின் வீடியோ நாடாக்களையும் திருடிச் சென்றிருந்தான். இரண்டாவது முறை நடந்த திருட்டைச் செய்தவன் எனது சகோதரன் நமாபியா. யாரோ திருடியதைப் போல் ஏமாற்றி அம்மாவின் தங்க நகையை எடுத்துக் கொண்டு போயிருந்தான். இந்தத் திருட்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை …

1 = 1

அன்னே கார்சன்   அவள், பிறரைப் பார்த்துவரச் சென்றிருக்கிறாள். அதிகாலை விடியலில் அவர்கள் எல்லோரும் விழித்தெழுவதற்கு முன்பாகவே, பாச், முதல் க்ளாவிச்சோர்டு* இசைக் கோர்வையைக் கேட்டுக்கொண்டே ஏரிக்கு நடக்கிறாள். என்றைக்கு அதை முதன் முதலில் கேட்டாளோ, அன்றிலிருந்தே, அதை நினைக்கும்போதெல்லாம் ஈரம் கசிகிற அவள், ஏதோ ஒரு நாளில் நடைபெறப்போகும் அவளது ஈமச்சடங்கில் அதுதான் இசைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்த அதே இசையைக் கேட்டுக்கொண்டே நடந்து செல்கிறாள். காற்றின் இடைவிடாக் கசையடிக் கடைதலில், ஏரி அலைவுற்றுக் கொண்டிருக்க, அலைகள் …

பெருந் தீ

ராபர்ட் ஸ்கிர்மர்   ‘நிக்கியும் நானும் இரு பழைய நண்பர்களின் அட்டகாசமான திருமணத்தில் கலந்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். கொண்டாடுவதற்கு என்றில்லாமல் ஒருவரை ஒருவர் மறப்பதற்கென்றே மலிவான ஒயினை பாலேட்டு நிறப் பிளாஸ்டிக் தம்ளர்களில் குடித்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நானிருந்த பக்கமாகச் சாலையில் படபடவெனச் சப்தம் வந்துகொண்டிருந்த அந்த வீட்டைப் பார்த்தோம். முதலில், பாதிப்பின் அளவினை எங்களால் கணிக்க இயலவில்லை. ஒரு சன்னலின் கறுத்துப்போன கண்ணாடிக் கதவு பட்டென்று திறந்து பெரும் புகை சூழ்ந்து, தூசி மண்டலம் பேயாக உருக்கொண்டது. …

பழிதீர்ப்பு

ஜோஸ் சரமாகோ   அந்த இளைஞன் ஆற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தான். வெற்றுக் கால்கள்; முழுநீளக்காற்சட்டை மூட்டுக்கு மேலாக ஏறிச் சுருண்டிருக்க,  கால் முழுவதும் சேறு அப்பியிருந்தது; முன்பக்கம் திறந்திருந்த ஒரு சிவப்புச் சட்டை அணிந்திருந்தான். அவன் மார்பிலிருந்த பருவ வயதுப் பூனைமுடி கருக்கத் தொடங்கியிருந்தது. அவனது அடர்கறுப்புத் தலைமுடியை ஈரமாக்கிய வியர்வை, அவனது மெலிந்து நீண்ட கழுத்துக்கும் கீழாக வழிந்துகொண்டிருந்தது. நீண்ட துடுப்புகளின் கனத்தால், அவன் முன்பக்கமாகச் சிறிது குனிந்து வளைந்திருந்தான்; துடுப்புகளின் இருமுனைகளிலும் ஆரங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பாசிகளிலிருந்து, அப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. …