கால இயந்திரம்

– டினோ புஸாட்டி   காலத்தைத் தாமதிக்கும் முதல் மாபெரும் இயந்திரம் மாரிஸ்கோனோவில், க்ராசெட்டோ அருகில் நிர்மாணிக்கப்பட்டது. உண்மையில், அதைக் கண்டுபிடித்தவர், புகழ்பெற்ற ஆல்டோ கிரிஸ்டோஃபரி, க்ராசெட்டோவில்தான் பிறந்திருந்தார். பிசா பல்கலை பேராசிரியரான கிரிஸ்டோஃபரி குறைந்தது இருபது ஆண்டுகளாவது இது குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஆய்வுக்கூடத்தில் அற்புதமான பல ஆய்வுகளை நிகழ்த்தியுமிருக்கிறார். அதிலும் குறிப்பாக, பருப்பு வகைகள் முளை விடுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார். ஆனால், கல்வித்துறை உலகில் அவர் ஒரு தரிசனவாதியாகவே கருதப்பட்டார். …

நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு

கௌதம சித்தார்த்தன்   முடிவற்று நீளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்திருந்தவனின் முகத்தில் அடித்தது மழை. ஜன்னலுக்கு வெளியே விரையும் இருளில் மழைத்தாரைகள் ஒழுக, அந்தப் பெட்டியில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. குளிரின் வசவசப்பு கன்னத்தை நிமிண்ட, அவன் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான். கண்களுக்கு மேலே திரைந்திருந்த காலத்தின் நினைவுகளிலிருந்து எழுகிறது அந்த முகம். அவனது கனவுகளின் அற்புதத்தில் முடிவற்றுச் சுழலும் முகம். ஆனால், இந்த முகம் இப்போது எப்படியிருக்கும்? குழந்தைமை கவிந்த முகத்தின் பச்சை …

பயங்கரக் கதை

கார்மன் மரியா மச்சாடோ     அது மிகச் சிறியதாகவே துவங்கியது: மர்மமாய் அடைத்துக் கொண்ட சாக்கடை; படுக்கையறை ஜன்னலில் விரிசல். அப்போதுதான் அந்த இடத்துக்குக் குடி போயிருந்தோம், சாக்கடை ஒழுங்காக வேலை செய்து கொண்டு இருந்தது, கண்ணாடி முழுசாக இருந்தது, அப்புறம் பார்த்தால் ஒரு நாள் காலை அவை அப்படியில்லை. என் மனைவி ஜன்னல் கண்ணாடியின் விரிசலை தன் விரல் நகத்தால் மெல்லத் தட்டினாள், யாரோ ஒருவர் உள்ளே விடச் சொல்லித் தட்டுவது போல் அது …

கட்டற்ற ஒரு சொல்

–  ஊர்ஸுலா லா குன்   அவன் எங்கிருக்கிறான்? தரை கடினமாயும் ஈரமாயும், காற்று கடுமையாகவும் துர்நாற்றத்துடனும் – இவைதான் அங்கிருந்தன. தவிர தலைவலியும். குளிர் பிசுபிசுத்த ஈரத்தரையில் மல்லாந்திருந்த ஃபெஸ்டின் மெல்ல முனகினான். ‘மந்திரக்கோலே’ பிரம்பாலமைந்த அக்கோல் கைக்கு வராதது கண்டு தான் பேராபத்திலிருப்பதை அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து அமர்ந்தவன், மந்திரக்கோல் இல்லாத நிலையில் வெளிச்சத்தை உருவாக்க நடுவிரலையும் பெருவிரலையும் சேர்த்து சொடக்கி மந்திரத்தை உச்சரிக்க தீப்பொறி தோன்றிப் பாய்ந்து நீல நிற நெருப்புக் …

ஒழிக, உங்கள் துப்பாக்கிகள்

கௌதம சித்தார்த்தன்   அந்த வார்த்தைத் துண்டுகள் ரவிக்குமாரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும். “இந்த உலகத்தில் சிரிக்கவே கூடாது; பற்கள் வெளியே தெரியாமல் ஒரு சின்ன புன்முறுவல். அவ்வளவுதான். அதற்குமேல் சிரித்தால் அபாயம்…” சிரிக்காமல் ஒரு மானுடன் ஜீவிப்பதை நான் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. எனக்கு சிரிப்பு ரொம்பப் பிடிக்கும். இதயத்திலிருந்து எழும்பி வரும் கலகல ஒலி. சிரிப்பு ஒரு அழகான விஷயம். சிரிப்பு நிகழும் கணங்களை சிரிப்புக்காகவே அர்ப்பணம் செய்வேன். …

பூனைகளின் அநுசரணம்

– ஜுலியோ கொர்த்தஸார்   அலனாவும் ஓசிரிஸும் என்னைப் பார்க்கும்போது, அப்பார்வையில் ஏதாவது கொஞ்சம் பாசாங்கோ, கொஞ்சம் வஞ்சனையோ கலந்திருந்தது என்று என்னால் புகார் சொல்ல முடியவில்லை. அலனா அவளுடைய நீல விழிச் சுடரோடும், ஓசிரிஸ் அதனுடைய பசுமை ஒளிரும் விழிக்கதிரோடும் என்னை நேர்கொண்டு நோக்கினார்கள். மேலும், அவர்கள் தம்மில் ஒருவரையொருவர் பார்க்கும்போது இந்த முறையில்தான் பார்த்துக் கொண்டார்கள். பால் கிண்ணத்திலிருந்து திருப்தியுடன் மியாவியபடி ஓசிரிஸ் தன் வாயை உயர்த்தும்போது, அலனா அதன் கருத்த முதுகைத் தடவிவிடுவாள். …

என் தலையில் குடையால் அடிக்கும் வழக்கம் கொண்ட ஒருவன் 

– ஃபெர்னாண்டோ ஸொரென்டினோ என் தலையில் ஒரு குடையால் அடிக்கும் வழக்கம்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் என் தலையில் தன் குடையால் அடிப்பதை ஆரம்பித்து சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயரெல்லாம் தெரியாது. சராசரியான தோற்றம், சாம்பல் நிற சூட், நெற்றிப்பொட்டு நரை என பொதுவாகப் பார்க்கக் கிடைக்கும் முகத்தோடு இருந்தான். அவனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புழுக்கமான காலைப் பொழுதில் சந்தித்தேன். …

கடக ரேகை

ஹென்றி மில்லர்   (Tropic of Cancer நாவலின் ஒரு அத்தியாயம்) ஒரு வேசியைப் போன்றது பாரிஸ். தூர இருந்து பார்ப்பதற்கு அவள் பரவசமூட்டுபவளாக விளங்குவாள். உங்கள் கையில் அவள் அகப்பட்டாலன்றி உங்களால் நிலைகொள்ள முடியாது. பிறகு, ஐந்து நிமிடங்களுக்குப்பின் வெறுமையை உணர்வீர்கள். உங்களை நினைத்தே அருவருப்பு ஏற்படும் . ஏமாற்றப்பட்டதாக நினைப்பீர்கள். பாக்கெட்டில் பணத்துடன் நான் பாரிஸ§க்குத் திரும்பி வந்தேன் . சில நூறு பிராங்குகள் . ரயில் ஏறிப் புறப்படும்போது காலின்ஸ் என் பாக்கெட்டில் …

தூங்கும் ராணி

– இடாலோ கால்வினோ ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான்  மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, அரசர் தனது கண்பார்வையை இழந்தார். தனது நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்கள் அனைவரையும் அழைத்து முயற்சித்தும், யாராலும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. அந்த வைத்தியர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் ஒருவர், “இந்த மாதிரி கண் …

26 குரங்குகள், அதனுடன் ஒரு புதிர்வழி

கிஜ் ஜான்ஸன்     1 எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான்.   2 பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு ‘பாத் டப்’பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து அதை பார்வையிடுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். சிலர் ஏறி வந்து பாத் டப்பின் அடிப்புறத்தை நோக்கினர். அடிப்புறத்தின் எனாமல் பூசிய பகுதியைத் தொட்டும் கைகளால் உள்புறத்தை துழாவியும் பார்த்தனர். இது முடிந்ததும் மேடையின் மேலே இருந்து …