நாவல் எழுதுதல், பயங்கரவாதம் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிதல்

" தீவிரவாதம் பற்றிய நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கவில்லை. உண்மையைச் சொன்னால், செமிட்டிய எதிர்ப்புதான் இந்த நாவலின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் 2005ஆம் ஆண்டு கோடைக்கால லண்டனில் கதை நிகழ்வதாக வைத்துக் கொண்டபின் இந்த தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. கடைசியில் இந்த விஷயம்தான் நாவலில் பிரதானமாய் வெளிப்பட்டது..."

This content is for Unnatham Paid User members only.
Log In Register

என்னுடைய விடுதலை வடிவத்தின் சாட்சியம்..

" ஆல்பெர் காம்யுவின் அந்நியனில் தொடங்கி, அந்தப் படைப்பைக் கேள்வி கேட்டு, ஆனால் அங்கிருந்து நகர்ந்து உலகில் என்னுடைய இருத்தலை, என்னுடைய இன்றைய மெய் நிலையை கேள்வி கேட்பது தான் எனது எண்ணம். அது காம்யுவின் படைப்பைப் பகுப்பாய்வு செய்வதும் கூட. அதனை மறு வாசிப்பு செய்வதும், ஒரு அல்ஜீரியனால், இன்றைய காலத்து வாசகர்களை மறுவாசிப்பு செய்வதும் கூட..."

This content is for Unnatham Paid User members only.
Log In Register

2017 நோபல் அமைதி விருது : அகிரா கவாஸாகி நேர்காணல்

இந்த வருட அமைதிக்கான நோபல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிரா காவாஸாகியுடன் நேர்காணல் அகிரா கவாஸாகி பன்னாட்டு குடிமைச் சமூகக் கூட்டமைப்பின் பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்புப் பிரச்சாரக் குழுவின் (ICAN) முக்கியமான ஜப்பான் உறுப்பினர், 2017 நோபல் அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த அமைப்பு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்பட உதவியது. ஜூலை 2017-ல் 122-1 என்ற வாக்கு அடிப்படையில் ஐக்கிய நாடுகளால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விருது விழாவில் பங்கேற்பதற்கு முன் காவஸாகி NHK …

சாலமன் பாடல்கள் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டன

ஜுனாட் டயஸ் உடன் ஒரு நேர்காணல் தற்கால புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜுனாட் டயஸ், புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1999-ல் நியூயார்க்கர் பத்திரிகை அந்த வருடத்தின் முக்கியமான ஆளுமைகளில் 20 பேர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது. அவரது முதல் கதைத் தொகுப்பான ‘Drown’ விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ‘This Is How You Lose Her’ என்ற அவரது இரண்டாவது கதைத்தொகுப்பு, தேசிய விருதுக்குக் இறுதிச்சுற்று வரை வந்தது. ‘The Brief …

புரளியின் அதிகாரமும் அரசியலும்

கெவின் யங் உடன் ஒரு நேர்காணல் புகழ் பெற்ற நியூயார்க்கர் இதழுக்கு கவிதைப் பகுதிக்கு பொறுப்பாசிரியராக பதவியேற்க இருக்கும்  கெவின் யங் அவருடைய புதிய புத்தகமான `பங் (Bunk) பற்றி கலந்துரையாடுகிறார். குவெர்னிகா இதழுக்காக இந்த நேர்காணல் கண்டவர் : எலிசா கோன்சலேஸ்   கவிஞரும் பல்துறை வல்லுநருமான கெவின் யங்கினுடைய புதிய புத்தகம், பங், ‘உண்மைக்குப் பின் மற்றும் போலி செய்திகளி’ன் வரலாற்றை சமூகப் பண்பாட்டு பகுப்பாய்வு, சிந்தனை, இலக்கிய விமர்சனம் ஆகியவற்றுடன் இணைக்கிறது. இது அமெரிக்காவினுடைய இன்றைய நிலைமையையும் கண்டறிகிறது.  யங்கின் …

விநோதப் புனைவு : ஒரு ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைனை உருவாக்குதல்

நாவலாசிரியர் அகமத் சாதவி உடன் ஒரு நேர்காணல்     அரேபிய புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு இந்த ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம் பெற்றது ஆச்சரியப்படக் கூடியது அல்ல. இளைய ஈராக் நாவலாசிரியரான அவருடைய மூன்றாவது நாவல் Frankenstein in Baghdad (2013) வெளியீட்டுக்குப் பின் திடீரென புகழின் உச்சிக்குச் சென்று விட்டார். அந்த நாவல் எலும்பும் தோலுமான ஒரு மனிதனின் கதையைச் சற்று நடுங்க வைக்கும் அச்சுறுத்தலோடு விநோதப் புனைவாகக் கூறுகிறது. அவன் 2005-ல் …

துயரத்தின் அரசியல்

ஜுடித் பட்லர் உடன் நேர்காணல்   பாலினக் கோட்பாட்டாளராகத் திகழ்ந்து இன்று அகிம்சாவழி சிந்தனையாளராக அறியப்படும் ஜுடித் பட்லர் அழிக்கப்படக்கூடியவர்களாக ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மாற்றிவிடும் நம் தேர்வுகளைப் பற்றியும், வன்முறையற்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்கும் வன்முறையையும், புதிய திசைவெளிகளில் நம்மை இட்டுசெல்லும் சாத்தியங்கள் கூடிய துயரத்தின் அரசியலையும் விவாதிக்கிறார். ஜுடித் பட்லரின் எழுத்துக்கள் பொதுப்புத்தியை தாக்கி சமநிலையைக் குலைப்பதும், நாம் சிந்திக்கும் முறையையே மாற்றுவதுமாய் சாகசம் செய்பவை. அவருடைய புத்தகங்களான 1. Gender Trouble: …

நான் ஒரு நாடுகடத்தப்பட்ட எழுத்தாளனாகவே இருப்பேன்

நூருதீன் ஃபாரா  உடன் ஒரு நேர்காணல்    சோமாலியாவின் முதல் பெரிய இலக்கிய ஆளுமையும், முதல் நாவலாசிரியருமான நூருதீன் ஃபாரா, வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்தில் (இன்று இது ஆடியோ பதிவில்) வந்தவர். அவர் தம் 25 வயதில் 1970 இல் லண்டனில், தம் முதல் நாவலான From a Crooked Rib – ஐ வெளிப்படுத்தினார். அவருக்கு சோமாலி மொழியோடு இத்தாலி, அரபு, அம்கரிக் மற்றும் அவரது 9 நாவல்களும் வெளிவந்த அற்புதமான ஆங்கிலமும் பேசத் தெரியும். …

எல்லாமும் ஒன்றுமில்லாததும்

ஆலிஸ் வாக்கர் உடன் ஒரு நேர்காணல்   புகழ்பெற்ற கவிஞரும் கட்டுரையாளரும் தமது ஊதா நிறம் என்ற புதினத்திற்காக புலிட்சர் பரிசை வென்றவருமான ஆலிஸ் வாக்கர் தமது எந்த இலக்கியப் படைப்பின் படைப்பாழத்திற்கும் அறைகூவல் விடுக்கின்ற வகையிலான வாழ்க்கையை வாழ்ந்துவந்தவர். ஜார்ஜியாவிலுள்ள புட்னம் மாவட்டத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிற பெற்றோருக்கு மகளாக, உடன்பிறந்தோர் எண்மரில் கடைக்குட்டியாக 1944இல் பிறந்தது முதல் குடிமக்களுக்கான உரிமைகள், கருப்பின மக்களின் கலைகள், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் வந்த பெண்ணிய இயக்கங்கள் …

தற்கால நவீன ஸ்பானிய மொழிக் கவிதை

ஜி.ஏ.சேவ்ஸ் நேர்காணல்   ஜி.ஏ.சேவ்ஸ் 1979-ல் கோஸ்டா ரிக்காவில் பிறந்தவர். க்வெண்டஸ் எக்ஸெட்ரா சிறுகதைகள் (2004) மற்றும் விதா அஜேனா கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ராபின்சன் ஜெஃபர்ஸ்ஸின் கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்துள்ள சேவ்ஸ், கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த கார்லோஸ் டி லா ஓஸ்ஸாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளையும் தொகுத்துள்ளார். சமகால ஸ்பானிய மொழிக் கவிதை பற்றியும் ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருடைய ஆக்கங்கள் பற்றியும் மேலும் மொழிபெயர்ப்புக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட அனைத்துக் கூறுகள் பற்றியும் சேவ்ஸ் உடன் Poetry International இதழுக்காக நேர்காணல் …