கர்லூ பறவைகள்

– கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்   நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள் போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை – இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை – மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக்கூட நேரம்  வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்தப் பின்நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் – இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் – அது நிகழ்ந்தது. ஒருத்தன், தன் கரத்தைக் …

நான் மொழிபெயர்க்காவிட்டால், அது ஒரு பாவம்

– தியோடர் மெக்கோம்ப்ஸ்   ஷோலெ வோல்ப் உடன் ஒரு நேர்காணல் ‘மொழிபெயர்ப்பு என்பது அறுவைசிகிச்சைக்கான கத்தி’ என எழுதுகிறார் ஷோலெ வால்ப். கலாச்சார பிரிவுகளுக்கான ஒரு ஆறுதலே மொழிபெயர்ப்பு என்கிறார் இந்த ஈரானிய – அமெரிக்கக் கவிஞர். இவர் மொழிபெயர்க்கும் ஈரானிய எழுத்தாளர்களின் வழியாகவும், இவருடைய நான்கு கவிதைத் தொகுப்புகள் வழியாகவும் வோல்ப் அவருடைய சொந்த நாடான ஈரானுக்கும், அவரை ஏற்றுக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இருக்கும் கடுமையான அரசியல் பிளவை அவர்களுடைய பரஸ்பர …

உலகக்கவிதையியலும் தமிழ்க்கவிதையியலும்

  சமயவேல் கலகக் கவிதையியல், எதிர்க் கவிதையியல், மாற்றுக் கவிதையியல், பணியாமையின் கவிதையியல் என்று கவிதையியல் பற்றிய பல புதிய சொல்லாடல்களைச் சந்திக்க நேர்கையில், நாம், நமது நவீன தமிழ்க்கவிதையியல் பற்றிய உரையாடலைத் தொடங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  கிரேக்கக் கவிதையியல், ஐரோப்பியக் கவிதையியல், பாரசீகக் கவிதையியல், இந்தியக் கவிதையியல் எனப்படும் சமஸ்கிருதக் கவிதையியல், சீன ஜப்பானிய கொரியக் கவிதையியல் போலவே ஒரு தனித்துவமான கவிதையியல் தமிழுக்கும் இருக்கிறது என்பதை உலகமே அறியும். 1990க்குப் பிறகான, அண்மைக் காலமாக …

ரஷ்ய தேவதைக் கதைகளை தனது வேர்களில் கட்டமைக்கும் நவீன சிறுவர் இலக்கியம்

– லியா ஷ்நெல்பாக்   (Fairy Tales என்றழைக்கப்படும் தேவதைக் கதைகள், குழந்தைகளுக்கென்றே படைக்கப்பட்ட தனி உலகம். குட்டித் தேவதைகளும், மாயாஜாலமும், அற்புதங்களும், சுருங்கி விரியும் காலப் பரிமாணங்களும் மட்டுமல்ல, விதிர் விதிர்க்க வைக்கும் சூனியக்கார கதாபாத்திரங்களையும் கொண்ட விசித்திர உலகம் அது. பெரியவர்களும் சிறியவர்களாக மாறி இளைப்பாறி விட்டு வரலாம் அங்கே.) ஒரு நல்ல தேவதைக் கதையைத் தழுவி எழுதப்பட்ட புதினத்தைப் போன்ற மகிழ்வைத் தரக் கூடிய வேறு ஏதேனும் உண்டா என்ன? அத்தகைய கதைகள், …

தீப் பறவையின் கூடு

– சல்மான் ருஷ்டி  ‘‘நான்  இப்போது  உடல்கள்  எவ்வாறு  வேறு  உடல்களாக  மாற்றப்பட்டன  என்பதைச்  சொல்லத்  தயாராக இருக்கிறேன்.’’      ‘உருமாற்றம்’  ஓவிட் ஆங்கில மொழியாக்கம்: டெட்ஹியூஸ்   அது வெம்மை மிகுந்த தட்டையான, உலர்ந்த இடம். மழை, மிக அடிக்கடி பொய்த்ததால் அவர்கள் இப்போது வறட்சி வென்றுவிட்டது என்று சொல்கிறார்கள். அவர்கள் சமவெளியில் வாழும் மனிதர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உழவர்கள், ஆனால் அவர்களுடைய கால்நடைகள் அவர்களைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. தண்ணீரைத் தேடித் தள்ளாடியபடி …

21 ஆம் நூற்றாண்டில் ருஷ்ய இலக்கியம்: புதிய திசைகளை நோக்கி..

  – எலினா டிமோவ்   21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்ட இலக்கியங்களானது அதற்கே உண்டான பரபரப்பும், ஊகிக்க முடியாத தன்மையின் காரணமாகவும் மக்களை எளிதில் வசீகரிப்பதாகவும் 1990களில் வாசிக்கப்பட்ட மரபார்ந்த வெகுஜன உரைநடைகளைவிட அதிகம் வாசிக்கப்பட்டதாகவும் இருந்தது. நவீன ருஷ்ய எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பல புதிய பரிமாணத்தில் எழுதுபவர்களாகவும், எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். பல வருடங்களாக கம்யூனிச அரசின் வசம் அடைபட்டிருந்த ருஷ்ய இலக்கியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை …

மேன் புக்கருக்கான நாவலை எப்படி உருவாக்குவது?

மேன் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் ஆறு நாவல்கள் இடம்பெற்றன. அவற்றின் ஆசிரியர்கள், ஒரு நாவல், புக்கர் பரிசுக்குத் தகுதியானதாக எது ஆக்குகிறது எனபதற்கான தங்கள் எழுத்து நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.   4321 நாவலின் ஆசிரியர் பால் ஆஸ்டர்: வழக்கமாக எனது மனத்தில் நாவலின் வடிவம் வருவதற்கு முன்னர் அதன் கதைப்பொருள் வந்துவிடும். ஆனால் 4321 ஐப் பொறுத்த வரையில், எனது வாழ்க்கையில் முதன்முறையாக வடிவத்தின் கருத்து – ஒருவருடைய வாழ்க்கையை நான்கு வடிவுருக்களாக உடைத்து …

மேன் புக்கர் பரிசு : ஜார்ஜ் ஸாண்டர்ஸ்

தற்கால அமெரிக்க நாவலாசிரியரான ஜார்ஜ் ஸாண்டர்ஸ், ஆபிரகாம் லிங்கனை மையமாக வைத்து எழுதிய ‘Lincoln in the Bardo’ என்ற நாவலுக்காக, இன்று 2017 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றிருக்கிறார். மேன் புக்கர் பரிசுக்கான நீண்ட பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றபோது எடுக்கப்பட்ட இந்த நேர்காணலில், பன்னிரண்டு பேரில் ஒருவராக பட்டியலில் இடம்பெற்றது பற்றி என்ன மாதிரி உணர்வு கொள்கிறார் என்பது பற்றியும் ஆபிரகாம் லிங்கன் பற்றிய அம்சங்களில் எது அவரைப் பாதித்து, எழுதுவதற்கான …

தீபாவளியின் அரசியல்

– கௌதம சித்தார்த்தன்   1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு …

லிடியா டேவிஸ் : குறுங்கதைகள்

  மறதியாளர்கள்   பூனை ஜன்னலில் கத்திக் கொண்டிருக்கிறது. அது வீட்டிற்குள் வர விரும்புகிறது. நீங்கள் யோசிக்கிறீர்கள் ஒரு பூனையோடு எவ்வாறு வசிப்பது என்பது பற்றி மற்றும் ஒரு பூனையின் கோரிக்கைகள், ஒரு பூனையின் வீட்டிற்குள் வரும் தேவை மற்றும் அது எவ்வளவு நல்லது போன்ற எளிய விஷயங்கள் பற்றி உங்களை யோசிக்க வைக்கின்றன. இதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் மற்றும் நீங்கள் இந்தப் பூனையை உள்ளே அனுமதிப்பது குறித்து மும்மரமாக யோசிக்கிறீர்கள், எனவே பூனையை உள்ளே …