பிக் பாஸ் : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..

– கௌதம சித்தார்த்தன்   நெதர்லாந்தைச் நேர்ந்த ஜான் டி மோல் என்பவரால் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தான் பிக் பிரதர் (Big Brother). “1999 மற்றும் 2000 ம் வருடத்தில் நாங்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய பொழுது, அதுவரை இல்லாத ஒரு புதிய பொழுதுபோக்கு வடிவத்தை/ வகையை உருவாக்கினோம். ரியாலிட்டி டிவி வகைப்பாட்டில் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் வருவதற்கு பிக்பிரதர் ஒரு முன்னோடியாக அமைந்தது.” என்று பெருமையுடன் கூறுகிறார். …

எஸ்போஸின் கவிதைகள்

என்னைப் பேசவிடுங்கள் – 03 பிரிந்தன் கணேசலிங்கம் மனிதர்கள் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் கனவு முடிவில்லாத வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற …

தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை

“என்னைப் பேசவிடுங்கள் – 02”   பிரிந்தன் கணேசலிங்கம்   இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண …

மாண்டோ என்னும் மகத்தான கலைஞன்

  மஹாரதி   “பாரதநாடு சுதந்திரமடைந்து விட்டது; பாகிஸ்தானும் சுதந்திரமடைந்து விட்டது; ஆனால் இரண்டு நாடுகளிலும் மனிதன் இன்னும் அடிமையாகத்தான்இருக்கிறான், குறுகிய கண்ணோட்டத்தின் அடிமையாக; மதவாதசக்திகளின்அடிமையாக; காட்டுமிராண்டித்தனத்தின்அடிமையாக; மனிதாபிமானமின்மையின் அடிமையாக….” இப்படி எழுதினார் சதாத் ஹசன் மாண்டோ (1912-55), தேசம் துண்டாடப்பட்டு ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் அருவியாக எல்லைகளில் கொப்பளித்த 1947 பிரிவினைக் காலகட்டத்தில். 2017-ல் இருந்து கொண்டு சரியாக எழுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்திய பாகிஸ்தானி எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த உருதுச்சிறுகதை …

அனைத்துக் கலைகளும் போராட்டங்களின் வாயிலாகவே வருகிறது…

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் உடன் ஒரு நேர்காணல்   ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ், 73, ஓர் அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர். இவரது முதல் புத்தகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியிருக்கிறார். நியூஜெர்சியிலிருக்கும் பிரின்ஸ்டனில் வசித்துவருகிறார். ”உலர்ந்து போன ஒப்பனையும், விரிசலும் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கனவு கண்டேன், அவள் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்டாள்” என்று சொல்லும் ஓட்ஸ், எழுத்து, கைம்மைத்தனம் மற்றும் சமீபத்தில் Mud woman …

என்னைப் பேசவிடுங்கள்

பிரிந்தன் கணேசலிங்கம்   (01)   போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த  உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ  அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று …

ஈராக்கிய பிராங்கென்ஸ்டைன் நாவல் 

    அகமது சாதவியுடன் ஒரு நேர்காணல்   மிகவும் விரும்பப்படுகிற புகழ்பெற்ற அரபு புனைவிலக்கியப் பன்னாட்டு விருதிற்கான இந்த ஆண்டு சுருக்கப்பட்டியலில் ஈராக்கிய நாவலாசிரியரான அகமது சாதவி இடம்பிடித்ததொன்றும் வியப்பிற்குரியதில்லை. இளம் நாவலாசிரியரான அவர் அவரது மூன்றாவது நாவலான ‘பாக்தாதில் பிராங்கென்ஸ்டைன்’ (2013) வெளியிடப்பட்ட உடனேயே பெரும்புகழ் பெற்றார். அந்த நாவல் கந்தை மற்றும் எலும்பு மனிதனான, ஹாதி அல்- அட்டாக் 2005 இல் உள்நாட்டுப் போரின்போது பாக்தாத் தெருக்களில் மானுடப் பிணம் ஒன்றினை ஒன்றுசேர்த்து …

நோம்  சோம்ஸ்கி – மாற்றிலக்கணம் : ஓர் அறிமுகம்

– ஆர் பாலகிருஷ்ணன்   நோம்  சோம்ஸ்கி 1928 டிசம்பர் (7) மாதத்தில் பிறந்தவர். அமெரிக்கர் என்றாலும் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிப்பவர். அவரது தந்தையார் ரஷியாவிலிருந்து குடி பெயர்ந்தவர். ஒரு மொழியியலாளராக இருப்பினும் அவரது அரசியல் பார்வை மிகவும் கவனத்துக்கு உரியது. அத்துடன் பாலஸ்தீன் குறித்த அவரது பார்வை மிகவும் முக்யத்துவம் வாய்ந்தது. அவருடைய மாபெரும் பங்களிப்பு மாற்றிலக்கணம் ஆகும். மாற்றிலக்கணம் என்பது மொழி விளக்கம் பற்றிய ஒரு கோட்பாடு அல்ல.  மொழி  எவ்வாறு தோன்றுகிறது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் முன்பிருந்த கோட்பாடுகளை மறுதலித்ததில் …

வில்லியம்  காஸ் : பின்நவீனத்துவ எழுத்தாளருக்கு அஞ்சலி

புனைவுகளில் கொலாஜ் பாணியிலான வெட்டி ஒட்டுதல், கட்டுடைப்பு செய்தல்.. போன்ற பல்வேறு வகையான சோதனை முயற்சிகளைச் செய்தவர்களில் முக்கியமானவர்கள் டொனால்டு பார்த்தல் மே, வில்லியம் பர்ரோஸ்… இந்த வரிசையில் மிக மிக முக்கியமானவர் வில்லியம் காஸ். “மெடா ஃபிக்ஷன்” என்ற பாணியை  அறிமுகப்படுத்தி சர்வதேச பின்நவீனத்துவ இலக்கியப் போக்குகளில் பெரும் ஆளுமையாக விளங்கியவர்.தமிழுக்கு அறிமுகமாகாமலேயே போய்விட்ட  இவர் கடந்தவாரம் காலமானார். அவருக்கு உன்னதம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.   ஆலிசன் ஃப்லூட்  அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் எச் காஸ் தனது 93-ஆவது வயதில் …

பிரதிமீதான இடையீட்டு வாசிப்பு

இமாம் அத்னான்   வாசகர்புலத்திலிருந்து கவிதைப் பிரதிகளை அணுகி வாசிப்பை நிகழ்த்திப் பார்க்கும், அப்பிரதிகளின் உள்ளடுக்குகளில் பதுங்கியிருக்கும் வன்முறைகளை வாசிக்க முனையும் செயன்முறையை அண்மைக்காலமாக பயிற்சி செய்து வருவதன் ஒரு பகுதியாகவே இவ்வாசிப்புப் பிரதியையும் அமைத்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கிய வெளியில் பிரதிகளை வாசிப்பதற்காக அதிகம் பயன்படுத்துகின்ற வழிமுறைகளில் இரண்டினை தலைகீழாக மாற்றியமைத்துக் கொண்டே கவிதைப் பிரதிகளை வாசிக்க முற்படுகிறேன். பொதுவாக நம் விமர்சகர்கள் புறச்சூழலிலிருந்து கவிதைப்பிரதிக்குள் நுழைந்து வாசிப்புச் செய்ய முனைந்திருப்பர். இவ்வழிமுறையானது, புறச்சூழலின் எதார்த்த …