கிரேயின் ஐம்பது வண்ணங்கள்

வலியின்றி சுகமில்லை -அந்தோணி லேன் இந்த எண்ணிக்கை சரியென்றால், ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய “Fifty Shades of Grey(கிரேயின் ஐம்பது வண்ணங்கள்),” என்ற புத்தகத்தை வாங்கிய நூறு மில்லியன் மக்களில் 20 மில்லியன் மக்கள் அதை ‘வண்ணங்களின் தொகுப்பு’ பற்றிய புத்தகமாக எண்ணித்தான் வாங்கியிருக்கக்கூடும். அவர்களை விடுத்து மீதமுள்ள 80 மில்லியன் மக்களும்,  “அவர் எதையோ யோசித்தபடியே தன் நீண்ட அழகிய விரல்களால் தன் முகவாயைத் தடவிக்கொண்டிருந்தார்,” என்பது போன்ற வரிகளைப் படிக்கும்போது, சிறிதுநேரத்திற்கு கீழே படுத்துக்கொண்டு இனிமையான …

இரட்டை பற்றிய நிகழ்வுக் குறிப்புகள்

இலக்கியப் புனைவுகளில் பெரிதும் பேசப்படும் இரட்டை என்னும் உருவகம் பற்றிய சில குறிப்புகள் பாலி பாய்ஸோ   புனைகதைகளின்படி, Doppelgänger (“நகல் பிம்பம் என்னும் இரட்டையர்களுக்கான” ஜெர்மன் சொல்) என்பவை ஒரு நிஜ மனிதனின் அசாதாரண நகல்கள். அவை பல வழிகளில் வெளிப்படக்கூடும்: உங்கள் பார்வைகளின் ஏதாவது ஒரு விளிம்பில் அவற்றை நீங்கள் காணலாம், தனிமையான பாதை வழிகளில் அவற்றைச் சந்திக்கலாம், அல்லது ஒரு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, பீதியூட்டும் வகையில் உங்களுக்குப் பின்புறம் அவை …

எட்வர்ட் செய்த் –  அறிவுலகின்  நெடும் பயணம்

  எச்.பீர்முஹம்மது   தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி சிற்றிதழ் உலகில் குறைந்த அளவிலான அறிமுக எழுத்தோட்டங்கள் வெளிவந்திருக்கின்றன. உலகின் அறிவுத்தளம் என்பது மேற்கு தான் என்று  நிறுவப்பட்ட தருணத்தில் தன் ஓரியண்டலிசம் நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில்  இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த் இன்றைய இஸ்ரேலின் ஜெருசேலமில் 1935   நவம்பர் 1 …

இதழியலின் வீழ்ச்சி – வீழ்ச்சியின் இதழியல்

  புதிய கதை சொல்லுதலும் ஒரு புதிய கதையும்   – ராபர்ட் ஜென்ஸன்     இதழியலின் வீழ்ச்சி மீது அமெரிக்காவில் போதுமான அளவு கவனம் செலுத்தியாயிற்று – நிறுவனங்களின் வியாபாரச் செய்தி ஊடகத்திற்கான தொழில் மாதிரியின் வீழ்ச்சி குறித்த வகையிலும் சுயாட்சி பற்றி அக்கறை கொள்ளும் மக்களுக்கு நிறைவு தராத, மேலெழுந்தவாரியான ஆழமற்ற அர்த்தமற்ற மன நிறைவு குறித்த வகையிலும். அரசியல் மற்றும் பொருளாதார எல்லையில் ஏற்படும் மிக நீண்ட நெருக்கடிகளின், குடியரசு மற்றும் முதலாளித்துவ முரண்பாட்டில் …

சமூக ஊடகங்களின் வலைப் பின்னல் 

– ச.வின்சென்ட்   ‘நீங்கள் ஒரு நாளில் எதில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள்?’ என்று கேட்டால் முன்னரெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால்,’ என்று பதில் வரும். இன்று ’முகநூலில்’ என்று விடை கிடைக்கிறது. முகநூல் நமது உறவுகளை வளர்க்கிறது (சிதைக்கவும் செய்கிறது), நமது ரசனைகளுக்கு வடிவம் தருகிறது, நமது அரசியல் சமூகக் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. முகநூல் போலவே நம்மை ஆட்டிப்படைப்பது அமேஸான். புதிய புதிய பொருட்களை நம் மேல் திணிக்கிறது; நாம் கடைக்குப்போய் எதையும் வாங்கவேண்டிய அவசியமில்லாமல் நமது வீட்டின் கதவைத் …

மேன் புக்கர் நாவல் – ஒரு அறிமுகம்

ச.வின்சென்ட் மேன் புக்கர் பரிசு பெற்ற நாவல் ‘Lincoln in the Bardo’  பற்றிய சிறு அறிமுகம்: “நாவல் என்பது இரட்டைப் பொருளைத் தாங்கிக் கொண்டு உண்மையை நாம் காணச்செய்யும் ஒரு வழி.” –  புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் அளித்த நேர்காணலின்போது இவ்வாறு சொல்கிறார் ஜார்ஜ் ஸாண்டர்ஸ். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது 1862 இல் லிங்கனின் மகன் வில்லி, டைஃபாய்ட் காய்ச்சலில் இறந்துவிட்டான். லிங்கன் அவன் அடக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் போய் அவனது உடலைத் தூக்கி வைத்துக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஸாண்டர்ஸின் நாவல் இந்நிகழ்வை …

ஆயிரத்தோர் இரவுகளுக்கு அப்பால்: சமகால அரபு இலக்கியம்

மத்தியகிழக்கு எழுத்துகள் குறித்த மேற்கத்திய கண்ணோட்டத்தை தகர்த்தல் – யூசுப் ரஹ்கா   ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரான ஹர்மத் ஃபன்ரிச்  கடந்தமுறை எகிப்திற்கு பயணம் செய்திருந்தபோது சமகால அரபுஎழுத்துக்கள் மீதான மேற்கத்திய ஆர்வமின்மை குறித்த தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அரபுஎழுத்துகள் மீதான மேற்கின்அலட்சியம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார். “மேற்கத்திய வாசகர்களின் மனதில் குடிகொண்டிருக்கும் ஆயிரத்தி ஓர்இரவுகள் இதன் மூலம் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக நினைக்கிறேன். கணிசமான சிறந்த ஜெர்மன் புத்தக ஆர்வலர்களின் மனங்களில் ஜெர்மானிய செவ்வியல் நூல்கள் இருக்கின்றன. ஆனால் …

பின்நவீனத்துவச் சூழலில் யாருக்கானது ஊடகம்?

  ழான் போத்ரியார் (Jean Baudrillard : 1929-2007) பிரெஞ்சு தத்துவவியலாளர். பின்நவீனத்துவம் சார்ந்த வெகுஜன கலை, கலாச்சார, ஊடகக்கோட்பாட்டாளர். வெகுஜன ஊடகக் கோட்பாட்டியல் முன்னோடியான கனடியத் தத்துவவியலாளர் மெக்லூஹன் (Marshall McLuhan : 1911-1980) போலவே, போத்ரியாரும் வலியுறுத்துவது, ஊடகங்கள் தமது  தொழில்நுட்பச் செயல்பாடுகளால், தொழிநுட்ப அமைப்பால் நமது உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் நடத்தைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை. ஊடகங்கள், சமூகத்தின் அனைத்துக் குரல்களையும் அரவணைத்துச் செல்லும், புதுமையான மற்றும் கலகக் குரல்களை தனது நிகழ்ச்சித் தொகுப்புகளில் …

தான் விரும்பியதை சாதித்துக் காட்டியவர் கசுவோ இஷிகுரோ

– ஜேம்ஸ் வுட் இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவ்வாண்டு அல்பானிய எழுத்தாளர் இஸ்மாயில் கதாரே பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்- ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கசுவோ இஷிகுரோ நோபல் விருதாளரானது ஆச்சரியம்தான்; அவரும் போட்டியில் இருக்கக்கூடும் என்று வாசகர்கள் எத்தனை பேர் நினைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. (கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் ஆஞ்சலா கார்ட்டரின் மாணவர்; படைப்பிலக்கிய வகுப்பு பயிற்சிகள் உருவாக்கிய முதல் நோபல் பரிசு …