கவிதைகள் : இளங்கோ கிருஷ்ணன்

  பேனா-1 மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில் தலையில் பலத்த அடிபட்டு பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு அதைக் கொண்டு காதலிக்கு கடிதம் ஒன்று எழுத முயன்றபோது அது பசியின் கொடூரத்தையும் வறியவன் இயலாமையையும் எழுதியது. வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது அது கலவரங்களின் பீதியையும் உயிரின் வலியையும் எழுதியது. எம் கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது அது மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது. கலைகளின் மேன்மையை எழுத முயன்ற போது அது தேசங்களின் பகைமையையும் …

அறிமுகக் கவிஞர்

வேட்டைக்கார வீரன்   ஒரு கவிதை எழுதி முடித்தேன் எக்காலத்தைக் கையிலெடுத்து ஊத ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அது   வாள் பிடுங்கி காகிதப்பூ கற்றையும், சாணமும் கையில் கட்டாயமாகத் திணித்து ஒதுக்கப்பட்டு நோய்க்காரனென சொல்லப்படும் அவன் எம் வேட்டைக்கார கூட்டத்தின் வீரனொருவனென சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு?   இன்றவன் திரிகிறான் இவ்வனமெங்கும் அறிவு சிதைக்கப்பட்ட கால்நடை போல்   வரிகள் செத்துக் கிடந்தன தாள் கோடித்துணியை ஞாபகப்படுத்தியது சுயத்தை கை கொண்டு இழப்பை மீட்க உசுப்பி …

கவிதைகள் : கண்டராதித்தன்

பகடையாட்டம்   தாயம் 1 நீங்கள் குற்றமிழைக்கத் தவறினீர்கள் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் வரம்புமீறிய விசுவாசத்தைக் கொடுத்தீர்கள் அது இயல்புக்கு மாறானது இரண்டு பொருள்படாத எவரையும் நீதி ஏற்பதில்லை உங்கள் குற்றம் ருசுப்படுத்தப்பட்டதாகக் கருதி தண்டிக்கப்பட்டீர்கள் நீதி தானாக வழங்கப்பட்டதைத் தவிர வேறொன்றுமில்லை. தாயம் 2 நீண்ட காலத்திற்குப் பிறகு ஆடும் நிலத்தை விட்டு நிறைமகள் பேணும் பழுத்த காலத்தின் இருட்டுக்குள் வந்து நின்றாய் நீ என்றும் ஒவ்வொரு விதை மணியும் தினைக்கதிரில் திரளும்கல் வயல்வெளியில் திரிந்த ஆடுகளை …

அறிமுகக் கவிஞர்

மாயா   1 மாயாவுக்கும் எனக்கும் ஓர் ஏழாண்டு பழக்கம்தான் உங்களைப் போலவே வெகுசாதாரணமாக என்னைக் கடக்க முயன்றவள் மாயா அதற்குமுன் பார்த்திருக்க பலவாய்ப்புகளிருந்தும் அன்றுதான் மாயாவைப் பார்த்தேன் கடந்து போக பல வாய்ப்புகளிருந்தும் என்னைக் கடக்க முடியாமல் நின்று விட்டவள் மாயா 2 மாயா என்னிடம் உரையாடும் போதெல்லாம் சூரியன் கடந்து போகும் நிலவு கடந்து போகும் நதியும் காற்றும் கடந்துபோகும் உரையாடல் முடிந்து கண் திறந்து பார்க்கும் மாயா காணாத என்னை சூரியனில் – …

கவிதைகள் : நெற்கொழு தாசன்

முடியாத இரவு   சுவர்களில் தெறிக்கும் காமம் தீர்ந்த ஒற்றையொலி புழுக்களாய் படரத்தொடங்கும் தீண்டாத இடத்தில் திரளும் விடம் மெல்லக்கொல்லும் நரகத்தை தீண்டியும் தணியாப் பெரும் தீ இரைதேடிப் பரவும் நீர்த்துளிகள் பெருகி அணையுடைக்க தூண்டும் அரவணைக்காத விரல்களையொதுக்கி நினைவின் தீண்டலில்ஆறுதல் கொள்ளத் துணியும். மறுப்பை குறைந்த பட்ச நிராகரிப்பை முடிந்தளவு அவமானப்படுத்தலை நிர்வாணத்தால் சாதிக்கும் வன்மத்தோடு திரும்பிக்கொள்கையில், அடிவயிற்றில் திரண்டெழுந்த முத்தமொன்றை ஒளித்து வறண்ட இதழ்களால் வஞ்சம் தீர்த்த குரூரப் புன்னகையிலிருந்து எழுந்து போகிறது கரிய …

அறிமுகக் கவிஞர்

அந்தக் கணம்   மூச்சுக் குழலை பிரித்துக் காட்டினால் மூன்று மதிப்பெண்கள் கூடுதல் இரைப்பை பெருங்குடலின் இணைப்பை தனியாகக் காட்டுபவர்களுக்கு இன்னும் சற்று கூடுதல் மதிப்பெண்கள் மலவாயையும் மலக்குடலையும் தனித்துக் காட்டாதவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றார்கள் ஆசிரியர்கள் உதரவிதானத்தை அறுத்தபோதோ இதயத்தைக் கிழித்தபோதோ என்னுள் எந்த வேட்கையும் இல்லை குடல்களின் மென்மையும் மூச்சுக்குழாயின் தன்மையும் என் உயிரில் ஊசி குத்தியது இருந்தும் என் அழுகையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட எலியின் இதயமும் என்னிடமிருந்து நீக்கப்பட்ட இதயமும் …

கவிதைகள் : கவிதைக்காரன் இளங்கோ

1. காற்றில் துருவேறும் பகல்   வெயில் போர்த்திய முதுகுகளை நகர்த்துகிறது நகரம் உலோகங்களின் உரசல் ஒலி காற்றில் துருவேறுவதை கீச்சுகின்றன மீதமிருக்கும் மரக்கிளைகளில் பதுங்கும் அணில்கள் காகங்களின் கவலை மின் கம்பங்களின் உச்சந்தலையில் மெட்டல் கம்பிகளை வளைத்து எரிகிறது பகல் நெடுக     2. இதுவரையுள்ள வரையறைகள்   தெரு வழியே நடக்கப் பணிக்கப்பட்ட அவமானத்துக்குப் பின்பும் என் மேல் பரவும் வெயில் உக்கிரமிழந்து ஒளிர்கிறது யாசிக்கும் கைகளைக் கொண்டிராத இப்பொழுதைச் சுண்டுகிறேன் விழுகின்ற …

அறிமுகக் கவிஞர் : 2

கவிதைப்பூச்சி   நீங்கள் என்னைப் போட்டு அமுக்கும்போது ஒரு கவிதை என்னிலிருந்து பிதுங்கி வெளிவந்தது. நீங்கள் அதனைச் சீண்டும்போது அது ஒரு பூச்சியாக மாறியது. அதன் இறக்கைகளையும் பிய்த்தெறிந்து வஞ்சித்தபோது அதற்கு பெரியபெரிய கால்கள் முளைக்க ஆரம்பித்தன. அதன் கால்களை முறிக்கப்போன உங்களிடமிருந்து அது தன்னை காப்பாற்றிக்கொள்ள ராட்சத கைகளை உருவாக்கிக் கொண்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு அதற்குக் கொடுக்கு முளைத்து அதன் விஷப்பையில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைந்தீர்கள். அது இப்போது …

கவிதை : கே.சி.செந்தில்குமார்

யா   கொஞ்சம் பாலுடன் உப்பைக் கலந்து இரு கண்ணீர்த் துளிகளையும் சேர்த்து நிர்வாணமாய் தேநீர் தயாரிக்கிறாள் தேநீர் தயாரிக்கவே ஆசீர்வதிக்கப்பட்டவள் மாதிரி தேநீர் தயாரிப்பதில் முழுமையாக மூழ்கி இருக்கிறாள் தேநீர் தயாரிக்கும் கூடமெங்கும் பூந்தொட்டிகளை நிரப்பியிருக்கும் யா பூக்களின் வண்ணங்களில் தனது நிர்வாணத்தை மறைத்துக் கொள்வதாகவும் பூக்களிலிருந்து மகரந்தத் துகள்களை தேநீரில் தூவிக் கொள்கிறேன் மேலும் தேநீர் தயாரிக்கும் போதும் பருகும்போதும் நாம் நிர்வாணத்தை உணர்ந்திருப்போமெனில்… தேநீரின் சுவையை உணரக்கூடும் என்கிறாள் யா தேநீர் தயாரிக்க …

அறிமுகக் கவிஞர்

  லியோ டால்ஸ்டாயின் தபால் தொலைவில் இருக்கும்போது இடைவெளியின்றி சண்டையிடுகிறோம் எதிரெதிர் இருக்கையில் ஒரு வினாடியும் தாமதியாது முத்தம் தருகிறாய் என் இதழ்கள் உன் விரல்கள் நிரடலில் வயலின் வில்  இசையென முறுக்கேறுகிறது உன் உதடுகள் என் நாவுகள் வருடலில் தந்திகள் அறுபடுகின்றன இந்த முரணை அவள் என்னிடம் கேட்டாள் ஒரு கணமும் தாமதியாது தெரியாதென தலையசைத்தேன் அவள் கணமும் சிரித்தது இரவு எல்லாம் உறக்கம் வரவில்லை யார் ஒருவரிடம் அந்த கேள்விக்கான பதிலை வேண்டி லியோ டால்ஸ்டாய்க்கு அந்த கணத்தின் கடிதம் எழுதினேன் தாமதியாது …