கவிதைகள் : குரு மகிழ்கோ

இரு முனை துப்பாக்கி   மனிதனின் வாழ்க்கை நன்மையும் தீமையும் பொறுத்தே அமைகிறது என்றார் கடவுள். அப்படி இல்லை மனிதனின் சந்தர்ப்பத்தைப் பொறுத்தே அமைகிறது என்றார் சாத்தான். ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கத் தொடங்கினார்கள். இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்த மனிதன் உங்கள் இருவரின் கருத்தை சோதிக்க நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் உங்களில் யாரோ ஒருவர் இந்த துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் இது இரு முனையிலும் சுடும் துப்பாக்கி என்பதை நினைவில் வைத்துக் …

கமலாதாஸ் கவிதைகள்

கைதி சிறைச்சாலையின் அமைப்பை சிறைக்கைதி ஆராய்வதுபோல் உன் உடலின் அமைப்பை நான் ஆராய்கிறேன். ஏனெனில் என் அன்பே, என்றேனும் ஓர் நாள் அப்பொறியிலிருந்து நான் தப்பித்துச் சென்றுவிட வேண்டும்.   தமிழாக்கம் : தேன்மொழி சதாசிவம்

கவிதைகள் : மஹாரதி

மலை நோக்கி சிசிஃபஸ் உருட்டும் பாறை   காத்திருத்தல் நிகழ்கிறது யாருக்காக எதற்காக எங்கே எனத்தெரியா அறியாமையில் காத்திருத்தலின் நோக்கம் காத்திருத்தல் போல உருட்டி உருட்டி ஏற்றி மலைசேர்த்து மடுநோக்கி ஓடிவரும் பாறையை மீண்டும் மீண்டும் உருட்டியேற்றும் சிசிஃபஸின் வேலையும் ஒருவகை காத்திருத்தல் முத்தமிடலின் இறுதிக்கணத்தில் உதட்டில் தெறிக்கும் எச்சிலைப்போல இரவு மழைச்சாரலின் தெறிப்பு பஸ் ஜன்னல் கம்பிகளில் பட்டு முகம் சிலிர்க்கும் அழகு நிகழும் பயணத்தின் போதை ஊர் வந்ததும் இறங்கி விடுகிறது அங்ஙனமே காத்திருத்தலும் …

கவிதைகள் : சங்கர்

சூன்யத்திலிருந்து சூன்யத்தை நோக்கி.. தெருவில் இறங்கி இரு கைகளையும் விரித்து அண்ணாந்து வான் பார்க்கிறேன் என் பார்வையை ஊடறுத்துச் செல்லும் பறவையிடம் மழையாகும் முன் மேகங்கள் பார்த்ததை நாமும் பார்க்கலாம் வா வென அழைக்கிறேன் அதுவும் சரியென சிறகுகள் இரண்டையும் விரிக்கிறது கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன பறவையே இப்போது நான் போகவேண்டும் பின் எப்போதேனும் நாம் சந்தித்தால் நீ பார்த்ததை எனக்குச் சொல் அடுத்த வெடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது மனம்….     நிலம் தொலைத்த மனிதர்கள் நிலம் …

வீணா தரணி கவிதைகள்

கையறு என்றொரு கவிதை உடுத்திருந்த உடைகளனைத்தும் அவிழ்த்து நிலைக்கண்ணாடியோடு நெற்றி சேர்த்து முலை இடுக்கின் வியர்வையால் கவிதை எழுத நான்கு புறமும் சுவர்களில்லாத குளியலறை கொண்ட ஒருத்தி உண்டு. பலதர ஆண்களுடைய காய்ந்து போன எச்ச உள்ளாடையில் வழிப்போக்கனால் பாதி இரவில் வெட்கத்தோடு வரைந்து வைக்கப்பட்ட ஒரு  முனகல் கவிதையின் எழுத்துப் பிழைகளை நினைத்து நினைத்து அவள் சிரிக்கும் ஒரு சிரிப்புண்டு. போர்வை இல்லாதவொரு குளிர்காலமொன்றால் கழுத்து நெறித்துக் கொன்று வீசிய ஒரு அரூப கனவின் கொலைக்கூடத்தில் அவள் கதறும் ஒரு …

கவிதைகள் : மாலினி

பரமபதம் பரமபத விளையாட்டின் ஏறுமுக விளிம்பின் படிகளில் விஷமூறு பெரு வாய்தனை அகல விரித்துக் காத்திருக்கும் அரவமென அவை எப்போதும் என் பாதைகளில் வாய் பிளந்து காத்திருக்கின்றன. எப்போதாவது பெரும் புயலடித்து அதிர்வுறும் அதிசயம் நிகழ்ந்து அதில் எழும் வேகவிசையின் சிறு விரிசலினூடே எப்படியாவது உள்ளே நுழைந்து விடும் நப்பாசையில் இறுக மூடிக்கிடக்கும் என் மனவாசலில் ஏங்கிக் கிடக்கின்றன. சில வேளைகளில் சலிப்பாகி நகர்ந்து அருவியெனப் பொழியும் ஒரு போதிலதில் வீழ்ந்து நீந்தி குறிவைத்த இடத்தை அடைந்துவிடும் …

கவிதைகள் : வினோத்

எங்கள் குதிரைகளை ஓட்டிச்சென்றது யார்? நாங்கள் செவியிமை மடித்து உறங்கி கொண்டிருந்தோம் எங்களின் நாய்கள் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்தன அவைகள் தங்களுக்கு முளைத்த சிறகுகளை தடித்த நாவால் நக்கிக் கொண்டிருந்தன சர்ப்பம் கூட குரல் இழந்து நெடுநாட்கள் ஆகிவிட்டன அவைகள் புணரும்போது மட்டுமே சப்தமிடுபவை ஆனால் அது தனித்த சர்ப்பம் இருள் மூடிக் கிடந்த எங்கள் குடிக்குள் காலற்ற ஒருவன் வந்த தடம் பார்த்து நாங்கள் விடியலில் சென்றோம் குதிரைகளைத் தேடி வந்திருக்கிறோம் என்றோம் அவர்கள் குதிரைத் திருடனை …

கவிதைகள் : நிஷாமன்சூர்

முத்தக் கவிதைகள் 1 கலவரப்படுத்தாத ஒரு முத்தம் கேட்கிறாய், முத்தத்தால் கலவரப்படாத ஒரு இதயத்தை அளிக்கிறேன் 2 பிரபஞ்சத்தின் தலைவாசலை ஒரு முத்தத்தால் திறந்து வைக்கிறேன் 3 உன் இதழ்க் கோப்பையில் ஒரு முத்தத்தைப் பரிமாறினாய் என் மொத்த அணுக்களும் அந்த முத்தத்தால் ஒளிர்கின்றன 4 நிலவொளி மங்கிய இவ்விரவை ஒரு தடையற்ற முத்தத்தால் வெளிச்சமாக்குவோம் வா 5 அதிகம் அணிந்திராத ஒரு ரோஸ்கலர் சட்டையில் ஒரு முத்தத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் அதே முத்தத்தை அப்படியே திரும்பக் …

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

இன்னொரு வாழ்க்கை   பெண்கள் மதியங்களில் திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் பேன் பார்ப்பர், மாலைகளில் சிறுவர்களுக்கு சோறூட்டுவர், தாலாட்டு பாடி தூங்க வைப்பர், கண்ணாடி பாட்டில் விளக்கை எரியூட்டுவர். மீதி இரவு முழுதும் வீட்டு ஆண்களின் அடிக்கும் உதைக்கும் பின்புறத்தை காட்டிக்கிடப்பர், அல்லது கடினமான மரக்கட்டிலின்மேல் அரைநிர்வாண கோலத்தில். அதிகாலையை பெண்களும் காக்கைகளும் ஒருசேர வரவேற்கின்றனர். அடுப்பு மூட்டுவதற்கு ஊதிக்கொண்டும், ஐந்து விரல்களால் முறத்தின் பின்புறத்தை தட்டியபடி, இரு விரல்களால் கற்களை எடுத்தபடியும் பெண்களின் பாதி …

கவிதைகள் : மஹாரதி

கடவுளின் கந்தலாடை ஒருநாள் நடுநிசியில் அகஸ்மாத்தாக கையில் கிடைத்தது கடவுளின் கந்தலாடை அணிந்தவுடன் காலவெளிப் பிரக்ஞை காணாமல் போனது இருட்டு தின்னும் அடர்காட்டில் பயணித்தபோது துரத்திவந்தன நாய்களும் நரிகளும் ஓடி ஓடி இறுதியில் இளைப்பாறி நின்றுபார்த்தால் பூமியின் விளிம்பு விரக்தியில் பயத்தில் கடவுளின் ஆடையைக் கழற்றி எறிந்தவுடன் பின்வாங்கின மிருகங்கள் கால் இடறி விழுந்தவுடன் என்னைத் தாங்கிக்கொண்டு அணியக்கொடுத்தான் பட்டாடையை சாத்தான்.   காலாதீதம் இங்கே காத்திரு பத்து நிமிடத்திற்குள் வருகிறேன் என்று நீ சொல்லிவிட்டுப் போன …