ஆறு நுண் புனைகதைகள்

– ஃபெலிக்ஸ் க்ரிவின்   உக்ரைனில் பிறந்த எழுத்தாளர் ஃபெலிக்ஸ் க்ரிவினின் “கூர்மையான முரண்நகை மற்றும் கசப்பான நகைச்சுவை மூலம் வெளிப்படும்” புனைகதைகள் “பெரியவர்களுக்கான விநோதப் புனைவுகள்” என விவரிக்கப்படுகின்றன. அவை “வியப்பூட்டும் ஒளியுடன் பளிச்சிடுகின்றன.” க்ரிவின் அவற்றை “பாதி-தொன்மங்கள்” என அழைக்கிறார், “இரண்டு பாதிகள்: மெய்மையும் தொன்மமும்” உள்ளடங்கியவை. திட நம்பிக்கையின் ஆற்றல் கதவு திறந்திருக்கும் பொழுது, கதவின் கைப்பிடி மிகுந்த பிரக்ஞையுடன் அவதானிக்கிறது, “அறை திறந்திருக்க வேண்டும்.” கதவு மூடப்பட்டிருக்கும் பொழுது, அது அமைதியாக …

ஒரு போதும் என்னை விட்டுப் போகாதே

Never Let Me Go – நாவலின் துவக்கப் பகுதி. கசுவோ இஷிகுரோ என் பெயர் கேத்தி ஹெச். எனக்கு முப்பத்தியொரு வயதாகிறது. நான் பதினோரு ஆண்டுகளாக பராமரிப்பாளராய் இருந்து வருகிறேன். ஆம், எனக்குத் தெரியும், இத்தனை காலம் இருந்தது போதும்தான். ஆனால் உண்மையில் அவர்கள் என்னை இன்னும் எட்டு மாதங்கள், இந்த ஆண்டு முடியும் வரை, இங்கு தொடர்ந்து இருக்கச் சொல்கிறார்கள். அப்படியானால் கிட்டத்தட்ட சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளாகிறது. நான் என் வேலையை அருமையாகச் செய்கிறேன் …