கவிதைகள் : கவிதைக்காரன் இளங்கோ

1. காற்றில் துருவேறும் பகல்   வெயில் போர்த்திய முதுகுகளை நகர்த்துகிறது நகரம் உலோகங்களின் உரசல் ஒலி காற்றில் துருவேறுவதை கீச்சுகின்றன மீதமிருக்கும் மரக்கிளைகளில் பதுங்கும் அணில்கள் காகங்களின் கவலை மின் கம்பங்களின் உச்சந்தலையில் மெட்டல் கம்பிகளை வளைத்து எரிகிறது பகல் நெடுக     2. இதுவரையுள்ள வரையறைகள்   தெரு வழியே நடக்கப் பணிக்கப்பட்ட அவமானத்துக்குப் பின்பும் என் மேல் பரவும் வெயில் உக்கிரமிழந்து ஒளிர்கிறது யாசிக்கும் கைகளைக் கொண்டிராத இப்பொழுதைச் சுண்டுகிறேன் விழுகின்ற …

அறிமுகக் கவிஞர் : 2

கவிதைப்பூச்சி   நீங்கள் என்னைப் போட்டு அமுக்கும்போது ஒரு கவிதை என்னிலிருந்து பிதுங்கி வெளிவந்தது. நீங்கள் அதனைச் சீண்டும்போது அது ஒரு பூச்சியாக மாறியது. அதன் இறக்கைகளையும் பிய்த்தெறிந்து வஞ்சித்தபோது அதற்கு பெரியபெரிய கால்கள் முளைக்க ஆரம்பித்தன. அதன் கால்களை முறிக்கப்போன உங்களிடமிருந்து அது தன்னை காப்பாற்றிக்கொள்ள ராட்சத கைகளை உருவாக்கிக் கொண்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு அதற்குக் கொடுக்கு முளைத்து அதன் விஷப்பையில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைந்தீர்கள். அது இப்போது …

உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் என்ன?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான டோர்த்தி நோர்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? டோர்த்தி நோர்ஸ்: மொழியிடம் ஒரு குறிப்பிட்ட இரக்க உணர்ச்சியுடனும், மொழி மூலமாக உலகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தேவையுடனும் நான் பிறந்துள்ளதாக நினைக்கிறேன். எனக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் …

நீங்கள் எவ்விதம் ஒரு எழுத்தாளராக உருவானீர்கள்?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருதுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்     நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? ஸ்டீஃபன் ஹெர்த்மன்ஸ்: ஒரு விடலையாக குறிப்பேடுகளை வைத்துக் கொண்டு, சில சிருங்காரக் கவிதைகள் – அவை …

கவிதை : கே.சி.செந்தில்குமார்

யா   கொஞ்சம் பாலுடன் உப்பைக் கலந்து இரு கண்ணீர்த் துளிகளையும் சேர்த்து நிர்வாணமாய் தேநீர் தயாரிக்கிறாள் தேநீர் தயாரிக்கவே ஆசீர்வதிக்கப்பட்டவள் மாதிரி தேநீர் தயாரிப்பதில் முழுமையாக மூழ்கி இருக்கிறாள் தேநீர் தயாரிக்கும் கூடமெங்கும் பூந்தொட்டிகளை நிரப்பியிருக்கும் யா பூக்களின் வண்ணங்களில் தனது நிர்வாணத்தை மறைத்துக் கொள்வதாகவும் பூக்களிலிருந்து மகரந்தத் துகள்களை தேநீரில் தூவிக் கொள்கிறேன் மேலும் தேநீர் தயாரிக்கும் போதும் பருகும்போதும் நாம் நிர்வாணத்தை உணர்ந்திருப்போமெனில்… தேநீரின் சுவையை உணரக்கூடும் என்கிறாள் யா தேநீர் தயாரிக்க …

அறிமுகக் கவிஞர்

  லியோ டால்ஸ்டாயின் தபால் தொலைவில் இருக்கும்போது இடைவெளியின்றி சண்டையிடுகிறோம் எதிரெதிர் இருக்கையில் ஒரு வினாடியும் தாமதியாது முத்தம் தருகிறாய் என் இதழ்கள் உன் விரல்கள் நிரடலில் வயலின் வில்  இசையென முறுக்கேறுகிறது உன் உதடுகள் என் நாவுகள் வருடலில் தந்திகள் அறுபடுகின்றன இந்த முரணை அவள் என்னிடம் கேட்டாள் ஒரு கணமும் தாமதியாது தெரியாதென தலையசைத்தேன் அவள் கணமும் சிரித்தது இரவு எல்லாம் உறக்கம் வரவில்லை யார் ஒருவரிடம் அந்த கேள்விக்கான பதிலை வேண்டி லியோ டால்ஸ்டாய்க்கு அந்த கணத்தின் கடிதம் எழுதினேன் தாமதியாது …

உங்கள் எழுத்தை எந்த மாதிரி இனம் காண்கிறீர்கள்?

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், நோபல் மற்றும் மேன்புக்கர் விருதுகளுக்கான போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான அமோஸ் ஓஸ்  இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்   நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? அமோஸ் ஓஸ்: ஒரு சிறுவனாக நான் சற்று குள்ளமானவன், மிகவும் மெலிந்தவன், மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவன். பள்ளியில் …

எந்த விதமான இலக்கிய நடைமுறைகளை உங்கள் எழுத்து புறக்கணிக்கிறது? 

தற்கால சர்வதேச நவீன நாவலாசிரியரும், மேன்புக்கர் விருது போட்டித் தேர்வில் இடம் பெற்றவருமான ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன் இடம் Words Without Borders இதழுக்காக குறும்பேட்டி கண்டவர்: எரிக் எம்.பி.பெக்கர்   நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதைப் பற்றிச் சொல்லுங்கள். அது கலைத்தன்மை வாய்ந்ததா, எதேச்சையானதா? எழுத்தின் மீது உங்கள் உறவு காலப் போக்கில் எவ்வாறு மாறுதல் அடைந்தது? உங்கள் இலக்குகளும் குறிக்கோள்களும் வருடந்தோறும் மாற்றம் பெற்றனவா? ஜான் கால்மன் ஸ்டீஃபன்சன்: எதேச்சையாக ஒருவர் எழுத்தாளராக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம் …

எட்வர்ட் செய்த் –  அறிவுலகின்  நெடும் பயணம்

  எச்.பீர்முஹம்மது   தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி சிற்றிதழ் உலகில் குறைந்த அளவிலான அறிமுக எழுத்தோட்டங்கள் வெளிவந்திருக்கின்றன. உலகின் அறிவுத்தளம் என்பது மேற்கு தான் என்று  நிறுவப்பட்ட தருணத்தில் தன் ஓரியண்டலிசம் நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில்  இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த் இன்றைய இஸ்ரேலின் ஜெருசேலமில் 1935   நவம்பர் 1 …

இதழியலின் வீழ்ச்சி – வீழ்ச்சியின் இதழியல்

  புதிய கதை சொல்லுதலும் ஒரு புதிய கதையும்   – ராபர்ட் ஜென்ஸன்     இதழியலின் வீழ்ச்சி மீது அமெரிக்காவில் போதுமான அளவு கவனம் செலுத்தியாயிற்று – நிறுவனங்களின் வியாபாரச் செய்தி ஊடகத்திற்கான தொழில் மாதிரியின் வீழ்ச்சி குறித்த வகையிலும் சுயாட்சி பற்றி அக்கறை கொள்ளும் மக்களுக்கு நிறைவு தராத, மேலெழுந்தவாரியான ஆழமற்ற அர்த்தமற்ற மன நிறைவு குறித்த வகையிலும். அரசியல் மற்றும் பொருளாதார எல்லையில் ஏற்படும் மிக நீண்ட நெருக்கடிகளின், குடியரசு மற்றும் முதலாளித்துவ முரண்பாட்டில் …