கவிதைகள் : க.உதயகுமார்

  யாழிசை குடித்து உயிர்நீக்கும் காடு பெருகும் யாழிசையில் நெஞ்சத்தணல் மூண்டு நினைவில் தீச்சூடும் காடு இதுகாறும் வனம் நிறைத்த சவலைக் குருவிகளின் ஈனக் கார்வையோ ககன வெளிதனில் காற்றோடுபோகும் ….   ஏ …பாணனே நீ நிறுத்தாதே உன் இசைக்கருவியை மீட்டிக் கொண்டே இரு கிளர்ந்தெரிகிறது வனம் நினைவின் ஆழத்தில் உலவுங் காட்சிகள் செத்து மிதக்கும் என் கண்களை பார்க்கும் வரை உன் யாழ் மௌனியாதிருக்கட்டும்   நின் இசையெனும் நீள் கழியால் கருகும் காட்டை கிளறிவிடு என் …

கவிதைகள் : முத்துசாமி பழனியப்பன்

நகங்களால் ஆனவை   நீண்ட விரல்களையும் நகங்களையும் உடைய பேய்கள் இப்போதெல்லாம் கனவில் வருவதில்லை வளர்ந்தபடியே இருக்கும் என் நகங்களைக் கண்டு அஞ்சுகின்றன அவைகள் அரிக்கும் முதுகையும் அழுக்கு உடம்பையும் தேய்க்கும் போது உதிரம் காணவேண்டுமென்ற அவற்றின் ஆசைகள் எப்படியோ நிகழ்ந்து விடுகிறது அலுவலகத்தில் அதிகாரிகளுடனும் பிறரிடமும் வெளியில் சந்திக்கும் சில கவிஞர்களிடமும் கைகுலுக்கும்போது அசெளகர்யமாக இருக்கிறது முன்பை விடவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது எனதிந்த செய்கையால் எது எப்படியாகினும் நகங்களை வெட்டப்போவதில்லை சிறுபிராயத்தில் பாட்டி சொன்ன …

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

மலிவாகக் கிடைப்பவை   சந்தையில் பெண்ணைவிட மலிவாகக் கிடைப்பது எதுவுமில்லை. பாதங்களுக்கு சிறு பாட்டில் வண்ணம் கிடைக்குமாயின் வெட்டிச் சுகத்திற்கு விடிய விடிய விழித்துக் கிடப்பார்கள். உடம்பில் தேய்க்க சில சோப்புக் கட்டிகளும், தலைக்கு கொஞ்சம் வாசனை எண்ணையும்  கிடைத்தால் மொத்தமும் அடங்கிப்போய் தம் சதை மடிப்புகளை பிதுக்கி எடுப்பார்கள் வாரம் இருமுறை கள்ளச்சந்தையில் விற்க. ஒரு மூக்குத்தி கிடைத்தால் எழுபது நாட்களுக்கு காலை நக்குவார்கள் அல்லது அதற்கு மேலும்,   மூன்று முழுதான மற்றும் ஒரு …

கவிதைகள் : வான்மதி செந்தில்வாணன்

உன்னத பியானோ உண்மையில் பியானோவை இசைப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல. பிசகாமல் வாசிக்க நுட்பம் மட்டும் போதுமென  நினைப்பது தவறினும்  தவறு. பாழ்பட்ட  மனோநிலையில் வாசிக்கப்பெற்றால் அதுபோலொரு பேரிசை எதுவும் கிடையாது.   அந்தத்  தனியறையின் அதி உன்னத பியானோ அவள். அதன் கட்டைகள்போல் வாளிப்பான தேகம் அவளுக்கு. அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் இடுகையாய் விதவிதமான சொனாட்டாக்கள் அவளிடம். எவ்வொரு பியானோவும் தனித்தன்மை பொருந்திய இவ்வித  மெலடியினை இதுவரை பிறப்பித்திருக்க அநேக வாய்ப்புகளில்லை.   அத்தகையதொரு அற்புத  இசைக்கருவியை …

கவிதைகள் : வினோத்

உதிர்தல் பூக்கள் உதிர்வது போன்று உதிர்கின்றன சொற்கள் புலர்ந்த முற்றத்தை நிறைத்து அவ்வெண்ணிறச் சொற்களை அள்ளிச்சேர்க்கிறாள் முதிர்ந்த ஒருத்தி கோவில் முற்றத்தின் தெத்து பல்லுக்காரி சிறப்பான நாட்டிய மங்கை உதிர்ந்த சொற்கள் அவள் விரலிடுக்கில் சுழன்றுபடியே இருக்கின்றன அதன் கழுத்தில் அவ்வளவு நேர்த்தியாக முடிச்சிடுகிறாள் கோவில் பரிகாரத்து இளஞ்சோடிகளை கண்ணயராது பார்த்துக் கொள்கிறாள் அவர்களுக்கென இரண்டு மூன்று கன்னிகளை சேர்த்து கட்டிக்கொடுத்து புன்னகைக்கிறாள் உதிர்தல் எவ்வளவு கொடூரமானது அவை பூ உதிர்வதுபோல அல்லல் தீயின் கொடூர நாவுகளில் …

கவிதைகள் : மஹாரதி

கல்லழகி வரச்சொன்ன நேரத்தில் இடத்தில் காத்திருக்கிறேன் காத்திருத்தலின் ஆரம்ப நிமிடத்தில் அரண்மனையாய் ஜ்வலித்தது கட்டிடம் காற்றும் தனிமையும் தவிர்த்து யாருமற்ற வெளி காலம் வினாடிகளையும் நிமிடங்களையும் நொறுக்குத் தீனிகளாய் தின்று தீர்த்து மணிகளைச் சோறாய் உண்டு நாட்களை நீராய் அருந்தி முடித்து யுகங்கள் காலத்தின் தொப்பையாய் மாறிய பின்னர் சிதிலம் அடைந்திருந்தது கட்டிடம் ஒருவேளை தப்பித்தவறி நீவர நேர்ந்தால் திரும்பிப் போய்விடாதே கற்களை மெல்ல விலக்கிப்பார் கற்களில் நான் இருக்கலாம் கற்களாக வேனும்.   மறக்கமுடியாத மறதிகள் …

கவிதைகள் : மாலினி

பகல்களை யாரிடம் கையளிப்பது? ஆங்காங்கே ஆயத்த அழைப்புமணி அவசரப்படுத்த ஆரம்பித்திருக்கிறது நான் புறப்பட வேண்டும் . அதற்கு முன்னால் என்னிடம் கொஞ்சம் பகல்களும் அதை விட சற்று அதிகமான இரவுகளும் எஞ்சியிருக்கின்றன . இரவுகளைச் சேகரிக்க அதிகமான சிரமங்களெதையும் சந்திக்கவேண்டியிருக்கவில்லை. இரவையும் பகலையும் வேறுபடுத்திப் பரிணமிக்காத மந்தகாசப் பொழுதொன்றினுள் பாதம் பதித்தேன் பகல்களை நிராகரித்த இரவுகள் சேகரமாகத தொடங்கின. இரவுகளுக்குள் சுழியோடி உயிரை பணயம் வைத்து நான் சேகரித்த இரவுகளே இல்லாத வெளிச்சங்களை இரட்சிக்கும் பகல்கள் என்னிடமுண்டு …

கவிதைகள் : குரு மகிழ்கோ

இரு முனை துப்பாக்கி   மனிதனின் வாழ்க்கை நன்மையும் தீமையும் பொறுத்தே அமைகிறது என்றார் கடவுள். அப்படி இல்லை மனிதனின் சந்தர்ப்பத்தைப் பொறுத்தே அமைகிறது என்றார் சாத்தான். ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கத் தொடங்கினார்கள். இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்த மனிதன் உங்கள் இருவரின் கருத்தை சோதிக்க நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் உங்களில் யாரோ ஒருவர் இந்த துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் இது இரு முனையிலும் சுடும் துப்பாக்கி என்பதை நினைவில் வைத்துக் …

கமலாதாஸ் கவிதைகள்

கைதி சிறைச்சாலையின் அமைப்பை சிறைக்கைதி ஆராய்வதுபோல் உன் உடலின் அமைப்பை நான் ஆராய்கிறேன். ஏனெனில் என் அன்பே, என்றேனும் ஓர் நாள் அப்பொறியிலிருந்து நான் தப்பித்துச் சென்றுவிட வேண்டும்.   தமிழாக்கம் : தேன்மொழி சதாசிவம்

கவிதைகள் : மஹாரதி

மலை நோக்கி சிசிஃபஸ் உருட்டும் பாறை   காத்திருத்தல் நிகழ்கிறது யாருக்காக எதற்காக எங்கே எனத்தெரியா அறியாமையில் காத்திருத்தலின் நோக்கம் காத்திருத்தல் போல உருட்டி உருட்டி ஏற்றி மலைசேர்த்து மடுநோக்கி ஓடிவரும் பாறையை மீண்டும் மீண்டும் உருட்டியேற்றும் சிசிஃபஸின் வேலையும் ஒருவகை காத்திருத்தல் முத்தமிடலின் இறுதிக்கணத்தில் உதட்டில் தெறிக்கும் எச்சிலைப்போல இரவு மழைச்சாரலின் தெறிப்பு பஸ் ஜன்னல் கம்பிகளில் பட்டு முகம் சிலிர்க்கும் அழகு நிகழும் பயணத்தின் போதை ஊர் வந்ததும் இறங்கி விடுகிறது அங்ஙனமே காத்திருத்தலும் …