அன்னல் சிந்தனைப்பள்ளியும் வரலாறும்: ஓர் அறிமுகம்

 – கி.இரா.சங்கரன்   முன்னுரை இக்கட்டுரை வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நாள்களில் உரைவடிவில், பேச்சுவடிவில் அளிக்கப்பட்டதன் தெளிவடிவம். இது, முதலில் 15/11/2016 அன்று இடைக்காலத்திய தமிழ்சமூகம் என்ற தலைப்பில் கல்வெட்டியல்-தொல்லியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் நடத்திய ஒருநாள் தேசியக்கருத்தரங்கின் ஓர் அமர்விற்கான தலைமையுரையாக அளிக்கப்பட்டது. அடுத்து, ஏவிசி கல்லூரியின் வரலாற்றுத்துறையில் reading forum என்ற அமைப்பின் சார்பில் மாணவர், ஆசிரியர் இடையே 04/12/2014 அன்று உரையளிக்கப்பட்டது. அடுத்து, மீண்டும் ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்களின் …

எப்பொழுதும் ஒரு கவிஞனாக இரு, உரைநடையில் கூட..

எட்வர்ட் மார்க்வெஸ் நேர்காணல்   கேத்தலோனிய எழுத்தாளரான எட்வர்ட் மார்க்வெஸ் Zugzwang (1995) எழுதுவதற்கு முன் ஸ்பானிய மொழியில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். Zugzwang ஸ்பானிய கேத்தலோனிய மொழியில் அவருடைய முதல் படைப்பு, இந்த நுண்புனைவின் ஆதாரமும் கூட. Zugzwang -ன் சுருக்கமான பகுதிகள் Bomb, The Brooklyn Rail மற்றும் Chicago Review போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவர் கேத்தலோனிய மொழியில் எழுதுவதைத் தொடர்ந்தபடி, மற்றொரு சிறுகதைத் தொகுப்பையும், பனிரெண்டு சிறுவர் புத்தகங்களையும் நான்கு நாவல்களையும் …

பௌத்தத்தின் ஹாரீதீ மரபும் – தமிழ் பௌத்தத் தாய்த்தெய்வ வழிபாட்டுத் தொடர்மரபுகளும்

–  பி.ஏ.அன்புவேந்தன் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தொடங்கி, ஆசியக் கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் வரையிலும் அகன்றதோர் பரவலாக்கத்தையும், வரலாற்றுக் காலத்தின் நீண்ட நெடியதோர் தொடர்ச்சியையும் பௌத்தத்தைத் தவிரவும் வேறெந்த மார்க்கங்களும் கொண்டிருக்கவில்லை எனலாம். பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற பௌத்தமானது, அசோகச் சக்கரவர்த்தியின் பிராமிக் கல்வெட்டுச் செய்திகளின்படி இந்தத் துணைக்கண்டம் முழுவதிலும் பரவலாக்கம் பெறத் தொடங்கியது எனக் கொள்ளலாம். வைதீக மதங்களுடனும், வருணக் கோட்பாடுகளுடனும் கடுஞ்சமர் செய்து, தத்துவ …

சங்ககாலப் பாணர்களும் கோண்டுப் பர்தான்களும்

முனைவர் பக்தவத்சல பாரதி   தமிழிலக்கியத்தின் தொன்மையானது பாணர் மரபிலிருந்தே தொடங்குகிறது. இதிலிருந்து தொழிற்பட்டு, நீண்ட படிமலர்ச்சிக்குப் பின்னரே புலவர் மரபு ஏற்பட்டது. பாணர்கள் என்றாலே சங்க காலத்தில் வாழ்ந்த பாணர்களே நம் நினைவுக்கு வருவார்கள். சங்க இலக்கியத்தில் பேசப்படும் பாணர்களுடைய முன் தொடர்ச்சி யார்? பின் தொடர்ச்சி யார்? என்பவை பற்றி விரிவான புரிதல் தேவை. எந்த ஒரு மரபுக்கும் முன்னும் பின்னும் தொடர்ச்சியுண்டு. மனிதகுலப் படிமலர்ச்சியில் (evolution) எந்த ஒரு சமூக முறையும் தீடீரென …

மஞ்சள் பூ

– கௌதம சித்தார்த்தன் ஒரு கோப்பைத் தேநீர் அருந்த அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறேன் என் கபாலத்தைத் துளைத்துப் பாய்கிறது கோடை வான் முகட்டும் கட்டிடங்களின் நிழலில் ஒதுங்கி நடக்கிறேன் கட்டிட முகப்பில் தொங்கியபடி வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியின் நிழல் என்மேல் கடந்து போகிறது நல்ல வெயிலில் உழுது விட்ட நிலம் போல மணம் பரப்பும் அவனது உடலின் வாசனை என் கபோலத்தில் முத்தியெடுக்கிறது   அக்கணம், காங்கிரீட் காட்டின் நிழல்கள் மறைந்து ஒரு மஞ்சள் பூ பொக்கென …

‘மோகனாங்கி’ தமிழின் முதல் வரலாற்று நாவல்

எஸ்.சத்யதேவன்   “மோகனாங்கி நாவல்தான் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களினதும் இலக்கியத் திறனாய்வாளர்களும் முடிவாகும்”1 என்று முருகேசு ரவீந்திரன் மிகச் சுலபமாக குறிப்பிட்டுச் செல்கிறார். இன்று தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி என்று உறுதிப்பட்டுவிட்டது. ஆயினும் ‘மோகனாங்கி’ தமிழின் முதல் வரலாற்று நாவல் என்ற இடத்தை அவ்வளவு சுலபமாக அடையவில்லை. தமிழ் இலக்கியத்தில் நவீன சிந்தனைகளின் தொடக்கமாக அமைந்த தொடக்ககால நாவல்கள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலானோர் ‘மோகனாங்கி’ தொடர்பில் ‘முதல் …

கொங்கன் படை – ஓலை முறி

  பாலக்காடு மாவட்டத்தில் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில், மாசி-பங்குனியில், கொங்கன் படைத் திருவிழா நடைபெறுகிறது. மலையாளிகளும் தமிழர்களும் சேர்ந்து இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். இரவு பத்துமணியளவில், இத் திருவிழாவின் ஒரு பகுதியாகப் படைமறித்தல் என்பது நிகழ்த்தப்படுகிறது. பகவதி கோயிலுக்குச் சென்று, மூன்று முறை வலம் வந்து கோயிலின் உள்ளே சென்று வழிபட்டு, கொங்கன் போர் ஓலையை எல்லோரும் கேட்கும்படி கொங்கன் வேடம் புனைந்தவர் வாசிப்பார். சிற்றிடத்து வீட்டார் என்ற குடியைச் சேர்ந்தவர்களுக்கு மூல ஓலை எவ்வாறோ கிடைக்க, …

பழங்குடியில் கரைந்த உலகம்

ஒடியன் லட்சுமணன்   கிழக்கை பொதுவாய் ‘கொங்கு’ என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இருளர்களும் கிழக்கிலிருந்து வந்த அனைவரையும் அப்படியே அழைக்கிறார்கள். ‘கொங்கர் தலைவன் எனப் போற்றப்பட்ட இரும்பொறைகள் ‘கொங்குப்புறம் பெற்ற கொற்றச் சோழர்கள்’ ‘கொங்கர் ஒட்டி நாடு பல தந்த பசும்பொன் பாண்டியர்கள்’ இப்படி வரலாறு நெடுகிலும் அரசும் அதன் படைகளும் சொல்லவொன்னாத் துயரங்களை மலைகளின் மேல் நிகழ்த்திப்போயிருக்கிறது. சோழர் காலங்களில், காடு கொன்று நாடாக்கும் முயற்சியில் இம்மண்ணின் பூர்வீகக்குடிகள் பரந்து விரிந்த அவர்களின் பரப்பிலிருந்து தொடர்ந்து …

மருத்துவர்: அன்றும் இன்றும்

– பேராசிரியர். கோ.ரகுபதி காலனிய ஆட்சியினர் தங்களின் சுயதேவைக்காக இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்தத் தகவல்களை திரட்டினர்.  சாதி குறித்த ஆய்வுகளுக்கு, காலனிய ஆட்சியினர் தொகுத்த இனவரைவியல் நூல்களே இன்றைய ஆய்வாளர்களுக்கு வேத நூல் போல் இருந்து வருகிறது.  வேத நூலை கேள்விக்குட்படுத்த மறுப்பது போலவே இனவரைவியல் நூல் மீதும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிந்தியாவில் உள்ள சாதிகளின் வரலாற்றினை எழுதுவதற்கு எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலே வேதநூல்.  இந்த நூலில் பிராமண ஆணுக்கும் …

கால்டுவெல் முன்னெடுத்த கீழ்த்திசையியல்: தமிழ் இனவியம் பற்றிய நோக்குநிலை

  முனைவர் பக்தவத்சல பாரதி   பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் உலகின் பிற நாடுகளுக்குச் சென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து குடியேற்ற நாடுகளின் மரபுகளை யெல்லாம் நுட்பமாக ஆராயத் தொடங்கினார்கள். கீழ்த்திசை நாடுகள் பற்றி ஐரோப்பியர்கள் உருவாக்கிக் கொண்ட அறிவுமுறையும் அதன்வழி உருவாக்கிய மேலாண்மையும் ஒரு கருத்தினமாக மாறி, அதுவே பின்னாளில் ‘கீழ்த்திசையியல்’ (ழுசநைவெயடளைஅ) என இனங்காணப்பட்டது. கீழ்த்திசையியல் பற்றிய நுட்பமான ஒரு வரைவினை எட்வர்டு சைத் (Edward Said, 1978) முன்வைத்துள்ளார். அது பற்றிய …