துப்பாக்கி சுடும் பயிற்சி – 1945

முனைவர் கா.சுப்பிரமணியன் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்துள்ள இந்த ஆவணம், பழனியிலுள்ள திருமலைக் கவுண்டன் வலசு என்னும் ஊரைச் சேர்ந்த முத்துரத்தினம்   என்பவரிடமிருந்து அப்பகுதியைச் சார்ந்த கோபி கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் கு.மகுடீஸ்வரன் அவர்களால் பெறப்பட்டது. அக்காலத்தின் இராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கம் ஒன்றை இந்த ஆவணத்தின் மூலம் அறியமுடிகிறது. இரண்டாம் உலகப் போர் (1939-46) இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், 1945 ஜுலை மாதம் எழுதப்பட்டுள்ளது இந்த ஆவணம். 1943 அளவில் போரின் காரணமாக இந்தியாவில் பெரும் …

நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, நீலி : நாட்டுப்புறக் கதைகளில் பிரதிபலிக்கும் பெண்ணியச் சிந்தனைகள்

விஜயா ராமசாமி பெண்கள் குறித்த ஆய்வுப் பாடங்களும் நாடோடிப்பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பினைக் கொண்டுள்ளது. இந்த வாக்குவாதங்களுக்குப் பின்புலமான முக்கிய அம்சம் ஆண்கள் இதை எழுதுபவர்களாக, படைப்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய கலாச்சாரத்தில் பெண்களை முக்கியமாக ‘காட்சிக்குரிய உருவங்களாகவும்’ பெண்கள் இயங்கு பொருள்களாகவும், வாய்மொழியில் பரப்பப்படும் கலாச்சாரக் கலைகளின் வட்டத்துக்குள் இயங்குகிறார்கள். ஆகையால் நாடோடிப்பாடல்களின் மைய ஓட்டம் பெண்களின் குரல்களையும் பெண்களின் வரலாறையும் மீட்டெடுக்கும் விதமாக அமைகிறது. 1970 களில் கலாச்சாரப்பகுதிகளில் பெண்கள் இயக்கங்களும் பெண்கல்வியும் எழுகையில் பெண்களும் பெண்களுக்கான …

ஊர்மிளாவின் பிரிவு குறித்த பாடல்

– ஓ.வி. நாராயண ராவ் ஆந்திர பெண்மணிகளின் பாடல் ராமாயணத்தில் ஒதுக்கப்பட ஊர்மிளாவை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது    ஊர்மிளா தேவியின் நித்திரை மன்னன் ராமன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க அரசவை பெருமை பெறுகிறது பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் அவனுக்கு சேவை செய்ய வந்திருக்கின்றனர் அனுமன் ராமனின் கால்களை அமுக்கிவிடுகிறான். சுக்ரீவன் பணிவாய் நிற்கிறான் தும்புராவும் நாரதரும் பாட ரம்பையும் குழுவினரும் ஆடினர் ஜனகனும் மற்ற முனிவர்களும் உயர் ஒழுக்கங்களை பிரசங்கம் செய்கின்றனர் அனைத்து கடவுள்களும் மகிழ்ந்தனர், மலர்கள் ஆகாயத்திலிருந்து மழையாகப் பொழிந்தன. …

தமிழ் – எழுத்துக்களின் தோற்றம் காலம் மற்றும் வளர்ச்சி

– பேராசிரியர் சு. இராசவேல் ஏறக்குறைய 2500 ஆண்டுகால எழுத்தியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முதன்முதலில் 1882 ஆம் ஆண்டு இராபர்ட் சீவல் கண்டுபிடித்த மாங்குளம் கல்வெட்டே தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான தமிழ்-பிராமி (இனி இதனை தமிழிக் கல்வெட்டுக்கள் என்றே குறிப்பிடலாம்) கல்வெட்டாகும். அதன் பிறகு தொடர்ச்சியாக மதுரைப் பகுதியிலும் திருநெல்வேலிப் பகுதியிலும் பல புதிய தமிழிக்கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு ஆய்வாளர்களால் பலவாறாகப் படிக்கப்பட்டன. மாங்குளம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு 42 ஆண்டுகள் கழித்து கல்வெட்டு அறிஞர்  கே.வி.சுப்பிரமணிய …