ஒரு கதையும் ஒரு பாடலும்

 ஏ.கே. ராமானுஜன்   வீட்டுக்காரிக்கு ஒரு கதை தெரியும்; கூடவே ஒருபாடலும் தெரியும். ஆனால் அக்கதையை அவள் யாருக்கும் கூறியதில்லை. பாடலைப் பாடிக் காட்டியதில்லை. அவைகளை அவள் தனக்குள் வைத்திருந்தாள். அவளுக்குள் சிறை வைக்கப்பட்ட கதையும் பாடலும் மூச்சுத் திணறின. விடுதலை பெற விரும்பின. வெளியே தப்பியோடப் பார்த்தன. ஒருநாள் அவள் வாயைத்திறந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது கதை தப்பித்தது. அவளுக்கு வெளியே குதித்தது. காலணிகள் வடிவத்தை எடுத்து வீட்டின் கதவுக்கு வெளியே காத்திருந்தது. பாடலும் தப்பித்தது. …