பக்கிர்ஷாக்கள் என்னும் கதை சொல்லிகள்

ஹெச்.ஜி.ரசூல்   பக்கிர்ஷாக்கள் முஸ்லிம் நாட்டுப்புறக் கலைஞர்கள். மஸ் அலாக்களையும் கிஸ்ஸாக்களையும் பாடல்வடிவில் இசைத்துச் சொல்லும் கதைச் சொல்லிகள். இஸ்லாமிய மஸ் அலா(கேள்விக்கு பதில் தேடுதல்) கிஸ்ஸா(கதைப்பாடல்) நாமா(சரித்திரம்) முனாஜாத்து(ரகசியம்) வடிவங்களை அழிந்துபோகாமல் நினைவுப்பரப்பில் வாழவைக்கும் நிகழ்த்துக் கலைஞர்கள். அன்பு, விடுதலை, மனிதநேயம், சமத்துவ லட்சியங்களை சூபி ஞானிகளின் பாடல்களின் மூலமாக பரப்புரை செய்பவர்கள். இந்திய விடுதலைப்போராட்டகாலத்தில் பிரிட்டீஷாரை எதிர்த்து கொரில்லா தாக்குதலை நடத்திய பக்கீர் – சந்நியாசி கலகத்தின் போராளிகளே இவர்களது முன்னோடிகள். பதினெட்டாம் நூற்றாண்டின் …

சூஃபி பெண் கவிஞர் செய்யிது ஆசியா உம்மா

  கால சுப்ரமணியம்   இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களில் சூஃபி ஞானிகளான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களையும் பீரப்பாவின் பாடல்களையும் பற்றித்தான் நமக்குத் தெரியும். பெண்பால் சூஃபி கவிகளான தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள், கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா ஆகிய மூவரும், பக்தி கால சைவத்தின் காரைக்காலம்மையாரையும் வைணவ ஆண்டாளையும் போன்று குறிப்பிடத் தகுந்தவர்கள். கச்சிப்பிள்ளையம்மாளின் ‘மெய்ஞ்ஞானக்குறம்’, ‘மெய்ஞ்ஞானக் குறவஞ்சி’, ‘மெய்ஞ்ஞானக் கும்மி’ ஆகிய பாடல்கள், ‘மெய்ஞ்ஞான மாலை’ என்ற பெயரில் …

ஆவணம் : மலேசியக் கூலி

  மலேசிய மண்ணிற்குத் தமிழர்களின் ரத்தம் உரமாக இருந்ததற்கான ஒரு சிறு பிரதி இது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சுகபோகியாக அல்லாமல், தனது ரத்தத்தைத் தேனீராக மாற்றும் அடிமைக் கூலியாகவும், உறவுகளையும் நட்புகளையும் வெட்டிவிட்டு வேரோடு தன்னைப் பிடுங்கி எடுத்து இன்னொரு மண்ணில் ஊன்றி வாடிவதங்கித் தளைத்த தமிழனது துயரக் காட்சியின் ஒரு சிறு துணுக்கு இது. தமிழ்நாட்டிலிருந்து கங்காணி மூலமாக மலேசியாவுக்குக் கூலிக்கு ஆள் எடுக்கும் இந்த அறிக்கை 1927-ல் வெளிவந்தது. தமிழனின் ரத்தத்தை …

மணிமேகலையில் தேவகணம்

– முனைவர் சீ. பக்தவத்சல பாரதி   வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குப் பரவிய சமயங்களைப் பண்டைய நாளில் பெரியோர்கள் பிராமணமதம், சிரவணமதம் என்று இரண்டு வகையாகப் பிரித்தார்கள். பிராமணமதம் என்பது வைதிகமதம்; சிராவணமதம் என்பது சமண, பௌத்த சமயங்களாகும். இவற்றில் பௌத்தம் சாக்கியமென்றும் சமணம் ஆருகதம் என்றும் வழங்கப்பெற்றன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் பெருஞ்சிறப்புடன் விளங்கிய சமயங்களாகும். இவ்விரு சமயங்களும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஓங்கியிருந்தன. அதன் பின்னர் மெல்ல மெல்ல …

தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்பாஷை – மீள் பதிப்புக்கான பதிப்புரை

– எஸ்.சத்யதேவன்   19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும் எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை, நல்லை நகர் ஆறுமுகம் பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரின் பணிகள் தமிழுலகில் பெரிதும் அறியப்பட்டவை. யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிகள் பற்றிய செய்திகள் பல அப்பிரதேசங்களைத் தாண்டித் தமிழுகின் பரவலான கவனிப்பைப் பெறாது போனமை ஒரு தீநேர்வாகும். நற்பேறாக,  வித்துவான் எப். …

ஆவணம் : பாய்ச்சலூர் பதிகம்

தமிழில் வெளிவந்த முதல் தலித் இலக்கியப் படைப்பு என்று சொன்னால் பாய்ச்சலூர் பதிகம் என்னும் இந்தப் படைப்பைத்தான் சொல்ல வேண்டும். மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் தமிழகத்தின் வளங்களையெல்லாம் சுருட்டி ஏப்பம் விட்டுக் கொண்டும் எளிய மக்களைச் சாதியில் குறைந்தவர்கள் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் ஒதுக்கிவைத்தும் பல நூற்றாண்டுகள் எதிர்ப்பில்லாமல் செய்துவந்த கொடுமைகளுக்குப் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புக் கிளம்பி அது தமிழிலக்கியங்களிலும் பதிவுபெறத் தொடங்கின. சாதியத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் போன்ற …

மணிமேகலையின் ஊடாக பௌத்தம்

– பொ.வேல்சாமி 1898ல் உ.வே.சாமிநாதையர் மணிமேகலையை அச்சுக்குக் கொண்டு வந்தார். வழக்கமாகத் தன்னுடைய நூல்களுக்கு விரிவான முன்னுரைகளைக் கொடுக்கும் உ.வே.சா. இந்த நூலுக்கும் அத்தகைய ஒரு முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார். அந்த முன்னுரையில் தமிழ் அறிஞர்களால் இந்நூல் சரியான வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்று கூறி, அத்தகைய புரிதலுக்காகத் தான் பல்வேறு தகவல்களை இந்தப் பதிப்பில் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். 1894ல் திருமயிலை சண்முகம் பிள்ளையால் வெளியிடப்பட்ட மணிமேகலை பதிப்புடன் ஒப்பிட்டால் இரண்டு பதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் …

மாலையம்மன்

– தொ.பரமசிவன்   மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. அதுவும் தமிழ்நாட்டைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் உலகத்துடன் ஆன இந்த உறவு விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துவிடுகின்றது. அரும்பு, மொட்டு, பூ, மலர் என்பவை மலரின் பருவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். இவற்றோடு ‘பூ(வி)ரி’ (தென்னம்பூரி), மடல் என்ற சொற்களும் இங்கே நினைக்கத் தகுந்தவை. இணர், தாது, பொகுட்டு, அல்லி, புல்லி, தோடு, மடல் என்பவை பூவின் உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்களாகும். பூ …

நடுகல் வழிபாடு

– பேராசிரியர் அறிவரசன்     தகுதி வாய்ந்தவர்களை வணங்குதல், வழிபடுதல் என்பது சிறந்த பண்பாடாகும். பெற்றோர், ஆசிரியர், புலவர், புரவலர் முதலானோர் வணங்கி வழிபடத்தக்கோராக மதிக்கப்பட்டனர். உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களை வணங்கி வழிபடுதலும் தமிழரிடையே வழக்கமாக இருந்தது. ஞாயிறு மறைகின்ற மாலைப் பொழுதில் இல்லுறை தெய்வங்களைத் தமிழ் மக்கள் வணங்கி வழிபட்டனர் என்பதை, ”நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர” என்று நெடுநல்வாடையும் (43-44)   ”அகல்நகர் …

தொடரும் புதையலைத் தோண்டும் ஆசை

– அ.கா. பெருமாள்   ஸ்ரீரங்கநாதன் கோவில் பூசகர்களுடன் கொண்ட மாறுபாட்டால் சங்கிலிபூதம், ஈஸ்வர காலபூதம் என்னும் இரண்டு பூதங்களுடன் திருவிதாங்கூருக்கு ரங்கநாதன் குடிபெயர்ந்தது பற்றிய ஒரு கதைப்பாடல் உண்டு. அதில் ஒரு நிகழ்ச்சி, “. . . ரங்கநாதன் கிலுகிலுப்பைக் காட்டின் நடுவே அமர்ந்தான். புலைச்சி ஒருத்தி அவனை அடையாளம் கண்டு பசியாற்றினாள். அந்த ஊர் அரசன் ரங்கனைக் கனவில் கண்டு கோவில் கட்டினான். அந்தக் கோவில் கருவறையில் ஒரு துவாரம் இருந்தது. அதன்வழி கடல்நீர் …