புத்தரின் இசை மற்றும் குற்றவுணர்வு

– ச. சாதனா சில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம்  குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள். ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது …

ஈராக் அரசியலின் அங்கதச் சுவை

  – ஆண்டிச்சாமி   உலக திரைப்படங்கள் என்ற கருத்தாக்கம் வந்தாலே முதன்மையாக முன்னிற்பவை ஈரான் படங்கள்தான். அதன் அண்டை நாடான ஈராக் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதே இல்லை. ஈராக் என்றாலே வரட்டுத்தனமான மத அடிப்படை வாதங்களும் பயங்கரவாதங்களுமே நிரம்பிய நாடு என்பது போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..  ஹாலிவுட் திரைப்படங்களில் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டும் செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப்பட்டும் ஈராக் பற்றிய பிம்பங்கள் நம்முன் வைக்கப்படுகின்றன. ஆனால், Bekas (2012) (வாழ்க்கை வாழ்வதற்கே) என்ற திரைப்படம் இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளி வெகுஜன …

இன்சென்டிஸ் : அழிவும் இழிவும்

யமுனா ராஜேந்திரன் பிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். லெபனானில் 1970 களில் அந்நாட்டின் தெற்குத் திசையில் பேருந்தொன்றில் பயணம் செய்த பாலஸ்தீன இஸ்லாமிய அகதிகளும் அவர்தம் குழந்தைகளும் கிறித்தவ ஆயுததாரிகளால் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எஞ்சியவர்கள் பேருந்துடன் பெட்ரோல் …

தடைகளைக் கடந்து வெளிவந்திருக்கும் மராத்தியத் திரைப்படம் ‘தஷ க்ரியா’

http://https://youtu.be/0ZwlymMjolg   – தாமினி குல்கர்னி     வலதுசாரி இந்துக்குழுக்கள், சஞ்சய் லீலா பன்சாலியின் வரலாற்று காவியமான பத்மாவதி திரைப்படத்தை திரையிடுவதற்கு பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் மேலும் ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சந்தீப் பட்டில் இயக்கியுள்ள ‘தஷ க்ரியா’ என்னும் மராத்திய திரைப்படம், சிறந்த திரைப்படமென விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மையக்கரு, கிர்வந்தா பிராமணிய சமூகத்தினர், இந்துமக்களின் அந்திமக்கால ஈமச்சடங்குகளில் எவ்வாறெல்லாம் அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுகின்றனர் என,  பான்யா என்ற சிறுவன் கதாபாத்திரம் மூலமாக தஷ க்ரியா படத்தில் …

ஆமைகளாலும் பறக்க முடியும்

மணி தர்சா   போரில் முதற்பலி உண்மை என்பார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் …

சினிமாவில் வரும் ஜோக்கர் என்னும் உருவகத்தின் வரலாறு

டார்ஸி நாடெல்   துவக்கத்தில் வரலாறு முழுவதும் பெரும்பாலான கலாச்சாரங்களில் கோமாளிகள் தோன்றியிருக்கின்றனர். ஏறத்தாழ 2500 முதல் 2400 BCE காலகட்டத்தில் பழங்கால எகிப்து தேசத்தில் கோமாளிகளைப் பற்றிய முதலாவதான ஆவணங்கள் கிடைத்தன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய சமூகங்களிலும் கோமாளிகள் இருந்து வந்திருக்கின்றனர். மத்தியகால ஐரோப்பாவில் அரசவைக் கோமாளிகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்த இவர்கள், ”வெளிப்படையாக காமம், உணவு, பான வகைகள் மற்றும் அரசாட்சி ஆகியவற்றை சிரிப்பு மூட்டுவது என்ற ஒன்றுக்காகப் பைத்தியத்தன்மையுடன் நடந்துகொண்டு கிண்டலடிப்பார்கள்”. அச்சமூட்டும் …

சர்வதேசத் திரைப்படங்களுக்கு நிதி

  நீரஜா நாராயணன்   சார்லஸ் டிக்கன்ஸ் சரியாகச் சொல்வார்: “அது நல்ல நேரத்தின் பலன், அது கெட்ட நேரத்தின் பலன்.” அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வருகைகள் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாததால் உலகளாவிய படங்களுக்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் ரசனை வளர்ந்துகொண்டிருப்பதாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும் உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளை இன்றைய சினிமாக்கள் நிறைவுசெய்யமுடியாமல் இருக்கிறது. இந்தத் தட்டுப்பாடுதான் திரைப்பட நிதி மற்றும் படைப்புத்திறனில் புதிய புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் கட்டாயமாகக் கோருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளுக்கும் புதிய …

இண்டிபென்டென்ட் திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்?

பால் ஓஸ்போர்ன்   சுயாதீன (Independent) திரைப்படங்களின் இயக்குனரா நீங்கள்? அப்படியென்றால் செலவில்லாமல் விளம்பரம் செய்ய சில சிறப்பான யோசனைகள்! உங்கள் படம் வேலைகளெல்லாம் முடிந்து தயாராக இருக்கிறது. திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருப்பீர்கள், வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் விற்பனை (வீடியோ ஆன் டிமாண்ட்) செய்யும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பீர்கள். நீங்கள் அந்த ஒப்பந்தங்களைப் பற்றி சிந்திக்கும் வேலையில் உங்களை உறைய வைக்கும் இந்த வரிகள் உங்கள் காதுகளில் கேட்கும்: “இயக்குனர்கள்தான் படத்தின் விளம்பரம் மற்றும் பிரபலத்திற்கு முழு பொறுப்பு.” …

நாடோடிக் கலைஞனின் முடிவுறாத பயணம்

– யமுனா ராஜேந்திரன்   வரலாறு இப்போது மௌனித்துவிட்டது. நம்மை நாமே அகழ்ந்துகொள்வதன் வழி விடைகாண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மௌனத்தில் வாழ்வென்பது சகிக்கவொணாதபடி அவ்வளவு கொடுமையானது. தியோ ஆஞ்ஜலபொலோஸ் /சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போது * தியோ ஆஞ்ஜலபொலோஸின் The Travelling Players படத்தைப் பார்த்தபோது அவர் மார்க்சியத்தினால் ஆதர்ஷம் பெற்ற இடதுசாரித் திரைப்படக் கலைஞன் என்பது எனக்குத் தெரியாது. அந்தத் திரைப்படத்தில் ஆஞ்ஜலபொலோஸ் நிலைநிறுத்திக் காட்டிய திரைப் பிம்பங்கள், அவரது திரைப்படச் சொல்நெறி, நீங்காத நினைவுத் தடங்களை, பதட்டங்களை …

வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர்

– எம்.ரிஷான் ஷெரீப்   ஒரு ஐந்து வயது ஏழைச் சிறுமி. அவளைச் சூழவும் துப்பாக்கிகள் குறிபார்த்திருக்கின்றன. அவளது நெஞ்சளவு குழி தோண்டப்பட்டு அதில் பலவந்தமாக இறக்கி விடப்படுகிறாள். கற்களாலெறிந்து கொல்லப்பட தீர்ப்பளிக்கப்படுகிறாள். அவ்வாறு செய்யப்பட அவள் செய்த குற்றம்தான் என்ன? அவள் சிறைசெய்யப்பட்ட இடத்தில் இன்னும் சில சிறுமிகள். ஆளுக்கொரு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவர்களது கண்களும் வாயுமிருக்குமிடத்தில் மட்டும் துளைகளிடப்பட்ட பைகளால் முகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாக அங்கே கொண்டு வந்து விடப்பட்ட ஐந்து வயதுச் சிறுமி …