ரயிலில் ஓட்டம்

– டிசே. தமிழன்   மாற்று சமூக அரசியல் திரைப்பட இயக்குனர் கேரி ஃபுகுனகா வின் Sin Nombre ஸ்பானிய‌ திரைப்ப‌ட‌ம் – ஒரு அறிமுகம்  1 காதலும் சாகசங்களும் இல்லாது வாழ்க்கை நகர்வதில்லை. காலங்காலமாய் தொடர்ந்து வருகிற காதல், அவரவர் அளவில் தனித்துவமாய் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் காதல் அனுபவங்கள் சிலிர்ப்படையச் செய்வதாகவோ, சலிப்பைப் பிதுக்கித் தள்ளுவதாகவோ, துரோகத்தை நினைவூட்டுவதாகவோ அமைந்துவிடவும் கூடும். ஒரு காலத்தில் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க கப்பலில் புறப்பட்டவர்களுக்கு சாகச மனது அதிகம் வேண்டியிருந்தது. இன்னும் சிலரோ தமது …

சிறு முதலீட்டு திரைப் படங்கள் பற்றிய உரையாடல்: 3

– ஜான் யோஸ்ட்   உருவமும்  உள்ளடக்கமும்   நான் இதுகுறித்து பேசத் துவங்கி, பின் எவ்வளவு தூரம் பேசி இருக்கிறேன் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். இந்த பக்கத்தை ஆரம்பிக்கும் போது இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் இது குறித்த தீவிரமான உரையாடலில் பங்குபெறவேண்டும் என்று விரும்பினேன். இந்தப் பக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதனைப் பார்வையிட்ட பலர் தங்களது கருத்துக்களைப் பெறுவது இன்பமாக இருக்கிறது. இந்தப் புது வருடத்தில் இன்னமும் தீவிரமாகப் பங்கேற்று, எண்ணற்ற கேள்விகளும் அதற்கான பதில்களையும் பெறுவது என்பது  என் நோக்கம். கருத்துச் சொல்லும் பகுதியில் வந்தடையும் …

டிஜிட்டல் சினிமா உருவாக்கம்

– மைக் ஃபிக்கிஸ்   அது 1980ஆம் வருடம். ‘பீப்பிள் ஷோ’ என்ற கலைக்குழுவினருடன் நான் பத்து வருடங்களாக வேலை பார்த்துவந்தேன். எப்படியும் அவர்கள் திரைப்படம் எடுப்பார்கள் என்று அந்தப் பத்து வருடங்களும் என்னை நானே தேற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் கடைசி வரை அதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதனால் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன். உடனேயே தேசிய திரைப்படக் கல்லூரியில் சேர வேண்டுமென நினைத்தேன். அங்கும் நுழையமுடியவில்லை. அங்கு நான் எடுபட முடியாததற்கான ஒரே காரணம் என்னுடைய …

சிறு முதலீட்டு திரைப்படங்கள் பற்றிய உரையாடல்: 2

ஜான் யோஸ்ட் கதை  vs திரைக்கதை நான் நிறைய இயக்குனர்கள் முழுமைப்படுத்தப்பட்ட தங்கள் திரைக்கதை படமாகும் போது தடம் விலகிச் செல்ல அனுமதிப்பதைப் பார்த்திருக்கிறேன். நானும் அப்படி இருந்திருக்கிறேன். என் படத்தையும் இதோடு சேர்த்துக் கொள்கிறேன். நிறைய இயக்குனர்கள் படப்பிடிப்பில் திரைக்கதையை  மெருகேற்றுவதன் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்திவிட முடியும் என்று நினைக்கிறார்கள். இத்தகைய படங்களின் ஆரம்பத்திலேயே இப்படிச் செய்ய விரும்புவது பிரச்சினைகளை உருவாக்கும். ஹாலிவுட்டில் கூட ஒரு சிலர்தான் இத்தகைய நடைமுறையை உபயோகப் படுத்துகிறார்கள். நான் டெக்ஸாசை …

சிறு முதலீட்டு திரைப்படங்கள் பற்றிய உரையாடல்: 1

ஜான்யோஸ்ட் சிறு முதலீடு என்றால் என்ன? சிறு முதலீட்டுப் படங்கள் பற்றிய இயக்குனர் ஜான்யோஸ்ட்டின் கட்டுரை வரிசை இது. குறைந்த முதலீட்டு திரைப்பட தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல்வேறு இயக்குனர்களோடு அவர் விவாதித்த தொகுப்பு இது. குறைந்த முதலீட்டு திரைப்படத் தயாரிப்பு என்றால் என்ன? ஒரு திரைப்படம் எப்போது குறைந்த முதலீட்டு திரைப்படமாக திட்டமிடப்படுகிறது? குறைந்த அளவு பணம் அதில் முதலீடு செய்யபடுவதாலா? கதையின் தரத்திலா, ஒலி மற்றும் ஒளிப்பதிவின் தரத்திலா? எந்த …