கேமராவும் பேனாவும் சந்திக்கும் முனை

மார்க் மன்றோ உடன் ஒரு நேர்காணல்  ப்ராடன் கிங்    கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆவணப்பட எழுத்தாளர் மார்க் மன்றோ தன்னுடைய துறையில் நிறைவான, அதே சமயம் வெற்றிகரமான ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளார். அவருடைய வெற்றிக் கூடையில் பல படங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றில் சில, லூயி சைஹோயோஸின் ஆஸ்கார் புகழ் திரைப்படமான The Cove (Racing Extinction என்கிற சமீபத்திய படம் உட்பட), சண்டேன்ஸ் படங்களாக வெளிவந்து விருது வாங்கிய Chasing ICE, Who is Dayani cristal? மற்றும் The Tillman Story, Foo Fighter ராக் …

அதனால் எனது படங்கள் வேறுபட்டவை

பக்மன் ஹோபாடி உடன் ஒரு நேர்காணல் பக்மன் ஹோபாடி 1969ல் ஈரானிய குர்திஸ்தானில் பானேஹ் எனுமிடத்தில் பிறந்தார். மாணவராக இருந்தபோதே ஒரு ரேடியோ நிலையத்தில் பணிபுரிந்தார். டெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமா வகுப்புகளில் பயின்றார். பிறகு சனண்டாஜ் என்ற அமெச்சூர் குழுவினருடன் சேர்ந்து திரைப்படம் ஒன்றை உருவாக்க முனைந்தார். எனினும் அதை அவர் முழுமை செய்யவில்லை. 1995 முதல் 1999 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து சிறு படங்களை அவர் இயக்கினார். அது அவருக்கு தேசிய அளவிலும் …

ஈராக்கில் கவிதை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது

ஜார்ஜ் வீடன் உடன் நேர்காணல்   நபீல் யாசின் தனது மனைவி நாடா மற்றும் மூன்று வயது மகனுடன் 1979ல் தன்னுடைய தாய்நாடான ஈராக்கை விட்டு வெளியேறினார். ஏனெனில் சதாம் ஹுசைனைப் பற்றிய அங்கதக் கவிதைகளை எழுதி வெளியிட்டது தான் காரணம். சதாம் ஹுசைனால் 1972ல் தேசத் துரோகி என முத்திரையிடப்பட்ட நபீல் யாசின் தொடர்ந்து ஈராக்கில் குடியிருந்த போது சதாம் ஹுசைனின் பாதுகாவலர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். அப்போது நபீல் யாசின் எழுதுவதற்கும், பயணம் செயவதற்கும் ஏன் …

நீங்கள் ஒரு வினாடிக்கு 60 ஃப்ரேம்ஸ் வைக்கப்போவதாக வதந்திகள் இருக்கின்றனவே…

ஜேம்ஸ் கேமரூன் உடன் ஒரு நேர்காணல்  உலகப் புகழ் பெற்ற திரைப்பட ஆளுமையான ஜேம்ஸ் கேமரூன் ‘அவதார்-2’ க்கான வேலைச் செயல்பாட்டில் இருக்கிறார். இப்போது, அந்தத் திட்டத்தில், ‘அவதார்-3’, ‘அவதார்-4’ம் அடுத்தடுத்து இருக்கிறது. “திட்ட வரைபடத்துடன் நான் காட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். எந்த வழியில், எப்படி அது நிஜத்தோடு பொருந்திப்போகிறது என்று அதைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன்’’, என்கிறார் அவர். புகழ்பெற்ற ‘எம்பயர்’ இதழில் வெளிவந்த நேர்காணல்:  கிறிஸ் ஹேவிட்   நியூசிலாந்தில், அதாவது, ஜாக்சன்வில்லேவில் உள்ள உங்கள் …

சமூகத்தில் கற்பு என்பதற்கான மதிப்பீடு என்ன?

கிம் கி டுக் உடன் ஒரு நேர்காணல்   கொரிய பத்திரிகை ‘Cine21′  இதழுக்காகப் பின்வரும் இந்த நேர்காணலை யுங் சியோங் II என்ற கொரிய சினிமா விமர்சகர் கிம் கி டுக்குடன் மேற்கொண்டார். ஜனவரி 30,  2002 அன்று ஒரு மதியநேரத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது.   இனிமேல் பேட்டிகளே தரப்போவதில்லையென்று அறிவித்த கிம்மைச் சந்தித்தேன். அவரது புதிய படமான ‘Bad Guy'(கொரியா 2001) வெளியான சிறிது நாளில், இனி பேட்டிகள் தருவதில்லை என அறிவித்தார் கிம். …

சிறுமுதலீட்டுப் படங்களுக்கான விநியோக நிறுவனம் காலத்தின் தேவை

லெஸ்லி வூச்சட் உடன் ஒரு நேர்காணல்    ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடுவதற்கு தயாரான பிறகு அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தலையாய பணி. அப்பணியைத் திறம்படச் செய்யும் திரைப்பட விநியோகஸ்தர்களைப் பற்றியும் அவர்களுடைய பொறுப்புகளைப் பற்றியும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. சமீப காலமாக உலகம் முழுக்கவும் சிறு முதலீட்டுப் படங்களுக்கு வெளியிடுவதற்கான திரையரங்கங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.  திரையரங்கமல்லாத மாற்று தளங்களில் வெளியிடுவதற்கான ஒரு புதியவிநியோக நிறுவனத்தை துவங்கியிருக்கும் நிறுவனர் லெஸ்லி வூச்சட் இது குறித்து விரிவாக Film Maker இதழுக்கு அளித்த இந்த நேர்காணலில் விவாதிக்கிறார். …

ஒருவேளை நான் விசித்திரமான ஆளாக இருக்கலாம்

‘வைல்ட் டேல்ஸ்’ இயக்குனர் டேமியான் சிஃப்ரான் உடன் ஒரு நேர்காணல்   ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அர்ஜெண்டினப் படமான ‘வைல்ட் டேல்ஸ்’ ஆறு வித்தியாசமான கதைகளின் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார் அதன் இயக்குனர் டேமியான் சிஃப்ரான் (Damián Szifrón) – அக்கதைகள் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ், ரோட் செர்லிங் மற்றும் கிராண்ட் கிக்னோல் ஆகியோரின் கதைகள். பெட்ரோ மற்றும் அகஸ்டின் அல்மடோவர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் சென்ற ஆண்டு மே மாதத்தில் கேன்ஸ் திரையிடலில் திரையிடப்பட்டு பலதரப்பிலிருந்தும் விமர்சன …

சினிமா எங்களை நாடுகடத்தியிருக்கிறது

ஈரானிய பெண் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் உடன் ஒரு நேர்காணல் ஈரான் இளம் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப், தனது தந்தையான மொஹ்ஸன் மெக்மல்பஃப்பின் “A moment Of Innocence” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது ஏழு வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து கையடக்க கேமராவின் மூலம் “The Day My Aunt Was ill” எனும் குறுந்திரைப்படத்தை தனது எட்டு வயதில் எடுத்து சாதனை படைத்தார். 1997 ஆம் ஆண்டு, இக் குறுந் …

தற்கால அரசியல் சூழலில் மேஜிகல் ரியலிஸ பாணி தவிர்க்க முடியாதது

  மதத்தாலும், அரசியல் சூழல்களாலும், சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த பெண்கள் எப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது குறித்தே நான் படமெடுக்க விரும்பினேன்… – ஷிரின் நெஸாத் உடன் ஒரு நேர்காணல்     இந்தத் திரைப்பட வடிவம் எப்படி சாத்தியமானது? நான் மிகத் தீவிரமாக வீடியோ வடிவமான டாகுமெண்டரி தயாரிப்பில் இருந்த கால கட்டத்தில் எனது கலைவடிவத்திற்கு மிகுந்த நேரம் செலவழிக்கப்படுவதை உணர்ந்தேன். அந்த நேரம் ஸன்டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இருந்து அவர்களுடைய எழுத்துப் பட்டறைக்காக திரைப்படம் ஒன்று எடுத்துத் …

எங்கள் படைப்புகளை எதிர்ப்பினூடாகவே நிகழ்த்தவேண்டியிருக்கிறது..

ஜாக்கி ரீம் சலூம் உடன் ஒரு நேர்காணல்   திரைப்பட இயக்குநரும், நெறியாள்கையாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிகனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புகளில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கிறது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயார்க் பல்கலைக்கழக கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார். 2005ம் ஆண்டில் ஸண்டான்ஸ் திரைப்படவிழாவில், ‘அரேபியர்களின் உலகம்’ என்னும் 9 நிமிடப் படத்தை சலூம் …