கதையின் ஏதாவது ஒரு பகுதி பற்றிய நேரடி அனுபவம் இயக்குனருக்கு வேண்டும்…

கேரி ஃபுகுனகா உடன் ஒரு நேர்காணல்   Sin Nombre என்ற படத்தின் மூலம் உலகளவில் மாற்று சமூக அரசியல் நுண்பார்வை கொண்ட இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்திருக்கும்  ஃபுகுனகா திரைக்கதையாளரும், ஒளிப்பதிவாளரும் ஆவார். பல்வேறு குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுத்துள்ள இவர், பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது  Victoria Para Chino  (2004) படம் தொடர்ந்து இரண்டு டஜன் உலகப்படவிழாக்களில் கலந்து தொடர்ந்து விருதுகளைக் குவித்தது.     உங்களை ஒரு திரைப்படக் கலைஞனாக்கிய சூழல் எது? ஆதி புராதனக் கதைகள் …

உங்கள் படைப்பிற்கு நேர்மையாக இருக்கக் கடுமையான தலைமைப் பண்போடு நடந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்டோபர் நோலனுடன் ஒரு நேர்காணல்     கிறிஸ்டோபர் நோலன் விமர்சர்களால் பாராட்டப்பட்ட, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 21-ஆம் நூற்றாண்டின் Memento, Insomnia, Batman Begins, The Prestige, The Dark Knight, Inception, The Dark Knight Rises படங்களை இயக்கியவர்.2014-ஆம் ஆண்டில் தன் சகோதரர் ஜோனாதன் நோலனோடு இணைந்து எழுதி, 17 வருடமாகத் தன்னோடு இணைந்து வாழும் மனைவி எம்மா தாமஸ் தயாரிப்பில் உருவாக்கிய கிரகங்களுக்கிடையேயான கால நேர தூர விஞ்ஞான குடும்ப …

எனக்கு ரேமண்ட் கார்வர் மீது பெரும் காதல் உண்டு

அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்து உடன் ஒரு நேர்காணல்  – எல்விஸ் மிட்ச்செல் மெக்ஸிக எழுத்தாளரும் இயக்குனருமான அலெஹாந்த்ரோ கோன்சலஸ் இனாரித்துவிடம் பழகிப்பார்த்தால் டெத் ட்ரையாலஜி என்று சொல்லப்படும் முத்தொகுதி படவரிசைகளின் உருவாக்கத்திற்கு பின்னால் இருந்தவர் அவர்தான் என்பதை ஊகிப்பது உங்களுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அவர் தன்னுடைய குழந்தைகளைக் கொஞ்சும்போதும், தன் மனைவியைப் பற்றி பகிர்ந்துகொள்ளும்போதும் அவருக்கு மனித வாழ்க்கையின் மீது அளப்பரிய பற்று இருப்பதை தெளிவாக காட்டிவிடும். இருந்தாலும் அதே ஆர்வமும் உற்சாகமும் அவரது வேலையிலும் பல வழிகளில் வெளிப்படத்தான் செய்கிறது. இனாரித்துவின் படங்கள், ஒரு …

என் எல்லாப் படங்களிலும் செக்காவின் அம்சம் உண்டு..

நூரி பில்கே செய்லானுடன் ஒரு நேர்காணல்   ஜியோஃப் ஆண்ட்ரு   பிரிட்டிஷ் திரைப்படக்கல்லூரி சவுத்பாங்க் மேடையில் துருக்கிய இயக்குனர் நூரி பில்கே செய்லான், திரைப்படக்கல்லூரி மாணவர்களிடமும், ஜியோஃப் ஆண்ட்ருவிடமும் பேசுகிறார்;  புகைப்படக்கலையிலிருந்து எது அவரைத் திரைப்படக்கலைக்கு மாற்றியது பற்றி; ஏன் அவரது சமீபத்திய படம் கடந்த கால சுயசரிதப் படங்களை விட்டு விலகியது என்பது பற்றி;   ஜி. ஆ: நூரியின் சினிமாவில் உள்ள ஒரு நெருக்கமான அணுகுமுறைய “Kasaba”  (The Town) என்னும்  படம் …

கடந்து போகும் காலம் : முடிவின்மையும் ஒரு நாளும்

தியோ ஆஞ்சலோபோலோஸுடன் ஒரு நேர்காணல் – கிடியன் பேக்மன்   பிரேக்குகள் கிரீச்சிட்டன. ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், இன்று தொழில் மையமாகவும் உள்ள, வடக்கு கிரேக்கத்திலுள்ள நகரமான தெசெலோனிக்கியின் தாறுமாறான போக்குவரத்தின் சிகப்பு விளக்கு அருகில் கார்கள் நின்றன. நான்கு மூலைகளிலிருந்தும் அழுக்கடைந்த கந்தல் துணியில் ஒருவரோடு போட்டி போட்டுக் கொண்டு, நின்று கொண்டிருந்த வாகனங்களின் முன் கண்ணாடிகளைத் துடைக்க சிறுவர் கூட்டம் மொய்த்தது. ஒரு சிலரிடம் மட்டும் ஆடம்பரமான கருவி இருந்தது: …

ஆப்ரிக்க சிறுபான்மையினக் கதையாடலினூடாக திரை மொழி

(லிடுடுமலிங்கனி க்யோம்போதியோடு ஒரு நேர்காணல்) –  காமாங்வே மொகாமி லிடுடுமலிங்கனி க்யோம்போதி (Lidudumalingani Mqombothi) தென்னாப்ரிக்காவின் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் புகைப்படக்கலைஞர். 2016-ஆம் ஆண்டு ஆப்ரிக்க எழுத்துக்கான கெயின் பரிசை ‘Memories We Lost’ என்ற அவரது சிறுகதை வென்றது. ‘Short. Sharp. Stories: Incredible Journey: Stories That Move You’ என்ற தொகுப்பில் இக்கதை வெளிவந்துள்ளது. ‘Chimurenga Chronic’ மற்றும் ‘Prufrock’  ஆகிய இலக்கிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இவரது திரைப்படங்கள் …