home About உன்னதம் இதழ் : சில குறிப்புகள்…

உன்னதம் இதழ் : சில குறிப்புகள்…

1994 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அச்சு இதழாகத் துவங்கப்பட்ட உன்னதம் இதழ் இதுவரை 39 இதழ்கள் வெளிவந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

1994 ல் உன்னதம் காலாண்டிதழாக வெளிவந்தபோது, தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற பார்வையுடன் முழுக்க முழுக்க உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்தது. இடையில் 13 இதழ்களில் நின்று போனது.

 

அதன்பிறகு மீண்டும்  2009 ஜனவரியிலிருந்து மாதஇதழாக வெளிவந்தது.  சர்வதேச அரசியல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து  வெளிவந்தது.  ஒவ்வொரு மாதமும் சர்வதேசஅளவில் ஒரு புதிய விஷயத்தை எடுத்துக் கொண்டு அதன் முழுப்பரிமாணங்களையும் ஆய்வு செய்து முழுமையான சிறப்பிதழாக வெளிவந்தது.

 

மீண்டும் ஒரு சிறு இடைவெளியில் நவீன இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து 2017 ஜுன் மாதத்திலிருந்து இரு மாத இதழாக வெளிவருகிறது. சர்வதேச இலக்கிய ஆளுமைகளை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு இதழும், ஒரு எழுத்தாளரின் சிறப்பிதழாக வெளிவருகிறது. இடாலோ கால்வினோ, மிலோராட் பாவிச் மற்றும் கார்லோஸ் ஃபுயண்டஸ் என்று நீள்கிறது அதன் பயணம்.

 

தீராத அதன் பயணத்தில் தனது அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தத் தயாராகிறது உன்னதம். தனது வேர்களை இணையவெளியில் பலமாக ஊன்றுகிறது.

 

உன்னதம் தனது பார்வைகளை மேலும் விசாலமாக்கும் தீவிரமான தேடலுடன் 5 பகுதிகளாக தன் கிளைகளை விரிக்கிறது.

 

1. உன்னதம்: தமிழின் நவீன எழுத்துக்களுக்கும், சர்வதேச நவீன எழுத்துக்களுக்கும் முக்கியத்துவம் தருவது.

 

2. உன்னதம் சிறப்பிதழ் : சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவது.

 

3. புதிய அலை: கலைத்தரம் கொண்ட சர்வதேசத் திரைப்படப் பார்வைகளுக்கும், கலைத்தரம் கொண்ட தமிழின் திரைப்படப் பார்வைகளுக்கும் முக்கியத்துவம் தருவது.

 

4. தமிழி : தமிழ் மொழியின் அடையாளங்கள், பண்பாட்டுக் கூறுகள், தொன்மங்கள், ஆய்வுகள், அரசியல்கள், கலை இலக்கியங்கள்… என்று மொழி சார்ந்த  பார்வைகளுக்கு முக்கியத்துவம் தருவது.

 

5. டிரெண்டிங்: ஒவ்வொரு வாரமும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்களின் முழுமையான பார்வையாக, அதன் பல்வேறு பரிமாணங்களுக்கு முக்கியத்துவம் தருவது.

 

வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர் :
கௌதம சித்தார்த்தன் 

 

ஸ்பானிஷ் படைப்புகள் ஆசிரியர்:
சல்வடோர் பயாரி

 

அரபுப் படைப்புகள் ஆசிரியர்:
மார்சியா லின்ங்ஸ் குவாலே

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உன்னதத்தின் படைப்புகளை படித்து ரசித்து அனுபவிக்க வாங்க இங்கே வாங்க. Dismiss

error: Content is protected !!